I LOVE TAMIL


Friday, June 20, 2008

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்

www.dinamani.com on 19.06.2008

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்

என். முருகன்


நம் எல்லோரின் கவனத்தையும் முழுமையாக ஈர்த்துள்ள சமீபத்திய பிரச்னை பணவீக்கம். வேறு எந்த அம்சமும் உண்டாக்காத தலைவலியை ஆளும் கட்சிக்கு உருவாக்கும் பிரச்னை இது.

காரணம், இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் ஏழைகள் நிறைந்த நாட்டில் மிக அதிகமாக மக்களைப் பாதிப்பது பொருள்களின் விலைவாசிதான்.

பணவீக்கம் என்பது பொருள்களின் விலை ஏற்றத்தைக் குறிக்கும் என்பதால் தான் இவ்வளவு அதிகமான விளம்பரத்துடன் அன்றாடம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அது அலசப்படுகிறது.

வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத ஒன்று பணவீக்கம் என்பது பொருளாதாரம் பற்றி ஓரளவு விவரம் தெரிந்தவர்களுக்குப் புரியும். இரண்டு முக்கியமான காரணங்களினால் பணவீக்கம் உருவாகிறது. மக்கள் பொருள்களை அதிகம் வாங்குவதால் உருவாகும் விலை ஏற்றம் முதலாவது ஆகும்.

பொருளாதாரம் பற்றிய பாடங்களைக் கல்லூரிகளில் கற்பிக்கும் போது இரண்டு அடிப்படை விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒன்று டிமாண்ட் எனப்படும் பொருள்களின் தேவை. மற்றொன்று அப்பொருள்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் சப்ளை எனப்படுவதாகும். மக்களின் தேவை அதிகமாகி விநியோகிக்கும் பொருள்கள் குறைவாகத்தான் கிடைக்கும் எனில் அவற்றின் விலைவாசி உயர்ந்துவிடும். இதனை டிமாண்ட் விலையை மேலே இழுத்துச் சென்று விட்டதால் உருவான பணவீக்கம் (Demand- Pull Inflation) என்கிறோம்.

இரண்டாவதாக உற்பத்தியாகும் பொருள்களுக்கு உபயோகிக்கப்படும் மூலப்பொருள்களின் விலை அதிகமாகும்போது, அப்பொருள்களின் விற்பனை விலை தானாக ஏறி அதனால் உண்டாகும் பணவீக்கம் (Cost- Push Inflation). பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஓரளவு பணவீக்கத்தை நாம் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று சொல்லலாம். அல்லது நமது நாட்டை வேறு எந்த அன்னிய நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளும் தொடாதவகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தனியாக நமது பொருளாதாரம் இருக்க வேண்டும்.

1990-க்கு முன்னர் நமது பொருளாதாரத்தை அடைபட்ட ஒரு பொருளாதாரம் (Closed- Economy) என கூறுவார்கள். ஏற்றுமதி- இறக்குமதி கட்டுப்பாடுகள், சில பொருள்களை பொதுத்துறையில், பல தொழில்களை சிறு தொழில்களாக தனியாரிடம், எல்லா தொழில்களையும் லைசென்ஸ் முறையில் என பல கடுமையான சட்டதிட்டங்களை நாம் நிறைவேற்றிக் கையாண்டோம். இதில் பல நன்மைகள் உண்டு. நமது பொருளாதாரத்தின் முழுப்பலனும் நமது மக்களைச் சென்றடையும்படி பல வளர்ச்சித் திட்டங்களுடன், ஏழை எளிய மக்களுக்கு மானியச் சலுகைகளும் வழங்கப்பட்டன.

ஆனால், மற்றைய நாடுகளில் தாராளமயமாக்கலின் மூலம் வேகமான வளர்ச்சி ஏற்பட்டதை, நமது மூடி அடைக்கப்பட்ட பொருளாதாரத்தில் இறக்குமதிக்கு அதிகமான அன்னியச் செலாவணி தேவை என்பதால் நமது டாலர் கையிருப்பு குறைந்து நமது வெளிநாட்டுக் கடன்களுக்கு வட்டியும் முதலும் செலுத்தப்படாத ஒரு நிலைமையில் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தி அன்னிய முதலீடுகள் வரவேற்கப்பட்டன. உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டது.

இதன் பலனாக தேசிய வருமானம் பெருகி நிறைய வேலை வாய்ப்புகள் உருவாயின. உலகின் பல நாடுகள் போல இங்கேயும் ஆண்டு வளர்ச்சி விகிதாசாரம் 8, 9 சதவிகிதங்கள் என்ற உயரிய இலக்குகள் அடைந்த பெருமிதம் நம் எல்லோரிடமும் பரவியது.

பலர் நாம் சுதந்திரம் அடைந்த பின், 1990 வரை கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள் தவறு எனவும், அப்போதிருந்தே நாம் இப்போது கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால் நாம் இதைவிட அதிகமான முன்னேறிய நிலையில் இருந்திருக்கலாமே என கூறினார்கள். ஆனால், நமது பணவீக்கம் திடீரென நாலுகால் பாய்ச்சலில் சென்றதால் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறோம்!

பணவீக்கமும் பொருளாதார வளர்ச்சியும் பிரிக்க முடியாதவை. ஆனால் வளர்ந்துவிட்ட பல மேலை நாடுகளில் மக்களுக்கிடையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டில் அதிகம் இல்லை என்பதால் விலை ஏற்றத்தை மக்கள் எளிதாகச் சமாளிப்பார்கள். அதாவது, சிறிது காலம் விலையேற்றம் இருக்கும். பின்னர் அது சரிக்கட்டப்பட்டுவிடும். ஆனால் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள நமது நாட்டில் விலைவாசி ஏற்றம் என்பது மிகக் கடுமையாக ஏழை மக்களை வெகுவாகப் பாதித்து விடும் என்பதால்தான் நாம் இவ்வளவு அதிகமாக பணவீக்கம் பற்றிக் கவலைப்படுகிறோம்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம். பணப்புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், பணவீக்கம் ஓரளவு குறையும். ஆனால், இதனால் பொருளாதார வளர்ச்சி உடனடியாகப் பாதிக்கப்படும். ஏனென்றால் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம் பொருள்களின் உற்பத்தியையும், தனியார் கடன் பெறுவதையும் பாதித்து பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் குறைத்து விடும்.

எனவே மிக கவனமாக இப் பிரச்னை கையாளப்பட வேண்டும். பணவீக்கம் அரசியல் ரீதியாக பல பிரச்னைகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு உருவாக்கும். இது தேர்தல் காலம் என்பதால் ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு கடுமையான சோதனைகளையும், எதிர்க்கட்சியினருக்கு ஆளும் கட்சியினரைச் சாட ஒரு சரியான ஆயுதத்தையும் பணவீக்கம் அளிக்கிறது.

ஆனால் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியது பணவீக்கம் கட்டுப்படமுடியாமல்போய் பழங்காலத்தில் சிதறுண்டுபோன அரசுகள் பற்றிய தகவல்கள்தான். இதைக் ""கட்டுப்படுத்த முடியாத ஹைபர்இன்ஃப்ளேஷன் (Hyper inflation) மற்றும் பொருளாதார வீழ்ச்சி (Economic Collapse) என கூறலாம்.

1946- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹங்கேரியில் நிலவிய பணவீக்கம்தான் இதுவரை உலகிலேயே அதிகமான பணவீக்கம் என கணக்கிடப்பட்டுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவாக பெங்கோ எனும் ஹங்கேரிய பணம் வீழ்ச்சியடைந்து, ஒரு பெங்கோ பின்னர் 828,000,000,000,000,000,000,000,000,000 பெங்கோவுக்கு சமமானது. (ஆம்! 828 எனும் நம்பருக்கு அடுத்து 27 சைஃபர்கள்)

அதேபோல் 1920 ஆம் ஆண்டில் ஜனநாயக முறையில் வெய்மெர் குடியரசு ஜெர்மனியில் மிக மோசமான அரசாங்க நடவடிக்கைகளின் சின்னமாக விளங்கி, அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் முதல் உலகப்போர் முடிந்த பின்னர் ஜெர்மனியின் மீது 132 கோடி மார்க் நஷ்டஈடு வழங்க போரில் வெற்றி பெற்ற நாடுகள் வலியுறுத்தியதால் பணவீக்கம் அதிகரித்தது. 1922- ஆம் ஆண்டு பணவீக்கம் 5470 சதவிகிதம் ஆனது! (நமது பணவீக்கம் தற்போது 8.2 சதவிகிதம்). இதனால் ஜெர்மனியில் பொருள்களின் விலையேற்றம் 1,300,000,000,000 மடங்கு அதிகமானது. (ஆம்,13 எனும் நம்பருக்கு அடுத்து 11 சைஃபர்கள்தான்).

ஜெர்மானியர் ஒருவர் 1923- ஆம் ஆண்டு ஒரு சாதாரண கடிதத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப ஆன ஸ்டாம்ப் செலவு 2 லட்சம் மார்க். ஒரு பவுண்டு வெண்ணெயின் விலை 15 லட்சம் மார்க். 1 கிலோ மாமிசம் 20 லட்சம் மார்க். ஒரு முட்டையின் விலை 60 ஆயிரம் மார்க். பொருள்களின் விலை எவ்வளவு வேகமாக மாறியது என்பதைக் குறிக்க, ஒரு ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போதே உணவுப் பண்டங்களின் விலையைக் கூட்டி சர்வர்கள் கூறுவதை எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள். ஆக, ஹோட்டலுக்குள் நுழையும் போது இருந்ததைவிட அதிகம் விலையை ஒருவர் சாப்பிட்ட பண்டத்திற்கு வழங்க வேண்டியிருந்தது.

இவை சரித்திரபூர்வமான உண்மைகள். இவ்வளவு கடுமையான பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும் இனி நடக்காது எனலாம். ஆனால் நம் நாட்டில் 83 கோடியே 60 லட்சம் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20- க்கு கீழே வருமானம் உள்ளவர்கள் என மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா கமிட்டி சொல்லியிருப்பதை கருத்தில் கொண்டால் சிறிதளவு பண வீக்கமும் அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வும் நமக்கு எவ்வளவு பாதகம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!

(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி).

Tuesday, June 17, 2008

Cellphone Problems

செல்போன்களால் ஏற்படும் ஆபத்துக்கள்
மத்திய அரசு எச்சரிக்கை


புதுடெல்லி, ஜுன். 17-

செல்போன்களால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி மத்திய அரசு எச்சரிக்கை செய்து உள்ளது.

செல்போன்கள்

தற்போது உள்ள நவீன காலத்தில் எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக செல்போன்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. செல்போன் இன்றி வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு மனிதனுடன் செல்போன்கள் ஒன்றி விட்டன.

ஆனால் இதனால் சில ஆபத்துக்களும் உள்ளன. அவற்றை பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை என்று மத்திய அரசுக்கு தொலை தொடர்புத்துறை அளித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழந்தைகளுக்கு கூடாது

செல்போன்கள், ரேடியோ ஒளிபரப்பு சாதனங்கள் போன்றவற்றில் இருந்து கதிர்வீச்சு ஓரளவு வெளியாகிறது. எனவே, இவற்றை பயன்படுத்தும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குறிப்பாக குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 16 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் மிக குறைந்த நேரம் மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும். இருதய நோய் உள்ளவர்களும் அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவது நல்லது அல்ல.

மூளையை பாதிக்கும்

செல்போன்களை காதின் அருகே வைத்து நீண்ட நேரம் பேசுவதால் செல்போன் சூடாகி விடுகிறது. அப்போது அதில் இருந்து வெளியேறும் எலக்டிரோ மேக்னடிக் கதிர்வீச்சு, காதையொட்டி இருக்கும் மூளை பகுதி திசுக்களை பாதிக்கிறது. தினமும் நீண்ட நேரம் மற்றும் அதிக ஆண்டுகள் செல்போன்களை பயன்படுத்துவோருக்கு இந்த ஆபத்து அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

கர்ப்பிணி பெண்களும் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. அதிக நேரம் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சு, அந்த பெண்ணின் வயிற்றில் உருவாகும் குழந்தையையும் பாதிக்கக் கூடும்.

விளம்பரங்கள்

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் அதிகமானவர்கள் சிறுவர்-சிறுமிகளாகவும் இருப்பார்கள் என்று கருதுகிறோம்.

எனவே குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் செல்போன்களில் பேசுவது போன்ற விளம்பரங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும். மக்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீண்ட நேரம் பேச வேண்டும் என்றால் சாதாரண டெலிபோனில் பேசலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Source : www.dailythanthi.com on 17.06.2008

Wednesday, June 11, 2008

`செல்போன்' கோபுரங்களால் ஏற்படும் ஆபத்தை தடுக்க நடவடிக்கை

புதுடெல்லி, ஜுன் 10-


`செல்போன்' கோபுரங்களால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சில பரிந்துரைகளை தொலை தொடர்பு கமிஷன் அளித்துள்ளது.



செல்போன் கதிர்வீச்சு

நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு பல்வேறு நிறுவனங்கள் சார்பாக ஆங்காங்கே `செல்போன்' கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இத்தகைய கோபுரங்கள் மற்றும் செல்போன்களில் இருந்தும் வெளியாகும் கதிர் வீச்சுகளால் உடல் நலத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.


சட்டைப் பையில் வைத்திருக்கும் செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மாரடைப்பு ஏற்படும் என்றும், இடுப்பு பகுதியில் வைத்தால் ஆண்மை குறைவு ஏற்படும் என்றும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



தொலை தொடர்பு கொள்கை


அதுபோல செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சுகளும் மிகவும் ஆபத்தானவை ஆகும். அந்த கதிர் வீச்சுகளின் (நான் அயோனைசிங் கதிர்வீச்சு) 200 மெகா ஹெர்ட்ஸில் இருந்து 4 ஆயிரம் மெகா ஹெர்ட்ஸ் வரை இருந்தால் மூளைக் கட்டி, உறக்கமின்மை, காது கேளாமை, மறதி போன்ற குறைபாடுகள் ஏற்படும்.



இந்த நிலையில் தொலை தொடர்புத் துறையின் கொள்கைகள் குறித்து முடிவு எடுக்கும் தொலை தொடர்பு கமிஷன் சார்பாக, கடந்த 27-ந் தேதி அன்று ஒரு வழிகாட்டு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான கமிஷன் அளித்துள்ளது.



கட்டுப்படுத்த நடவடிக்கை

அதன்படி, செல்போன் கோபுரங்களை அமைக்கும்போதே, அவற்றில் கதிர் வீச்சுக்களை கட்டுப்படுத்த வேண்டும். கதிர் வீச்சுக்கு எதிரான கருவிகளை `பி.டி.எஸ்.' மையங்களில் பொருத்த வேண்டும் என்று அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கும் கூட இந்த விதி பொருந்தும். இனிமேல், இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்பதற்கான சான்றிதழை உற்பத்தி நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

அருகில் வசிக்கும் மக்கள்

இதற்கிடையே, குஜராத்தை சேர்ந்த ஒரு பொதுநல அமைப்பு ஒரு சர்வே நடத்தியது. அப்போது, டெல்லியில் மட்டும் 4 ஆயிரத்து 500 செல்போன் கோபுரங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும், செல்போன் கோபுரங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு மூளை கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.


இதையடுத்து, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை இந்த அமைப்பு தொடர்ந்துள்ளது.

Source : www.dailythanthi.com on 10-06-2008

Mobile Issues

The Times Of India - Chennai;Date:Jun 11, 2008; Section:Front Page; Page Number:1

Mobiles take mickey out of mice

Kounteya Sinha | TNN

New Delhi: In a recent pilot study at Jawaharlal Nehru University, rats subjected to radiation from mobile phones were found to have damaged DNA and low sperm count, leading to infertility and reduction in testis size. The Union health ministry now wants to find out whether excessive cellphone use could be having the same adverse effects on your health.

The ministry has commissioned India’s first largescale study on the effects of radio frequency radiation (RFR) from mobile phones on humans. Initiated by Union health minister A Ramadoss and to be spearheaded by the Indian Council of Medical Research, which finalized the protocol, the five-year study will be conducted by JNU’s School of Environmental Sciences and three departments of AIIMS — obstetrics and gynaecology, neurology and biochemistry.

One of the important spinoffs of the study will involve measuring the wavelength and frequency of RFD emitted from various types of cellphones used in India to see whether or not these conform to international standards.

The study will look at the effect RFR has on neurological disorders such as cognitive impairment, depression and sleep-related disorders. Scientists will look at whether excessive mobile phone use changes the white matter of the brain and causes physiological abnormalities. They will also study RFR’s effect on reproductive health, hormonal changes in women and its effect on male reproductive functions.

WORRY OVER SIGNALS

In pilot study, rats were found to have damaged DNA, low sperm count

Wavelength, frequency of RFD emitted from cellphones to be measured

Study will see whether excessive mobile use can cause cancer UNDER THE SCANNER Govt forms committee to study cellphone effects

New Delhi: The Union health ministry is launching a study to find out whether excessive cellphone use could be detrimental to your health.

According to ICMR deputy director general and lead investigator Dr R S Sharma, the study will also see whether excessive mobile use can cause cancer or increase the spread of cancerous cells in those already affected.

Dr J Behari from JNU’s School of Environmental Sciences recently conducted a pilot study on 20 rats, who were subjected to two hours of RFR for 35 days in a sample chamber. “We found significant double strand DNA break in sperm cells that could mutate and cause cancer, significant lowering of sperm count and reduction in testis size. The human study would be path breaking,” Dr Behari told TOI.

The study will recruit 4,000 subjects, who will be divided into five groups — heavy exposure male group (1,000 men who talk on the mobile phone for more than four hours a day), moderate exposure male group (1,000 men who speak for more than two hours but less than four), control group (1,000 men who donn’t use a cellphone), 500 heavily exposed women and a 500-strong female control group.

Dr Sharma said, “We will also calculate the specific absorption rate (SAR) — how much RFD is absorbed by our body when we speak on the mobile — and the power density — power generated by the phone both inside and outside our head when we talk. This will help quantify the magnitude of damage caused by mobile radiadiation.”

The 4,000 subjects will undergo a series of clinical tests, blood and semen analysis, polysomnography, MRI, ECG, blood chemistry, gynaecological and infertility examinations and DNA tests.

At present, India has 250 million cellphone users. By the end of 2010, this figure is estimated to rise to 500 million.

A health ministry official said, “India’s tremendous growth in cellular phone use has greatly increased the extent and magnitude of RFR exposure. These new technologies have been introduced without full provision of information about their nature and without prior discussion within the scientific community about its possible consequences for health.”

Dr Vasantha Muthuswamy, senior deputy director general, ICMR, said, “Rich and poor, young and old, even school children, use a mobile phone now in India.”

Some reports claim excessive use of the cellphone can be hazardous to our health. We, however, don’t know whether it is true. That’s why the health ministry has directed the council to conduct a detailed study on the effect of RFR on human health,” Muthuswamy added.

Source : http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQ0gvMjAwOC8wNi8xMSNBcjAwMTA0&Mode=HTML&Locale=english-skin-custom

Tuesday, June 10, 2008

Nature

Source : www.dinamani.com - Tuesday June 10 2008 00:00 IST
மா நிஷாதா....!

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பு வெளியிடப்படும்போதும், "மனிதன் விஞ்ஞானத்தின் துணையோடு இயற்கையை வென்று விட்டான்' என்று எக்காளமிடுவதும், அடுத்த இருபது முப்பது வருடங்களில் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை வேறு வழியில்லாமல் நமது சந்ததியினருக்குத் தத்துக் கொடுத்து அசடு வழிவதும் கடந்த எழுபது ஆண்டுகளாகத் தொடர்கிறது.

மனிதனின் அனைத்து நோய்களுக்கும் விஞ்ஞானம் தந்திருக்கும் அதி அற்புதத் தீர்வு என்று கூறப்பட்ட பென்சிலின், இப்போது அதிக கவனத்துடன் உபயோகிக்கப்பட வேண்டிய மருந்தாகி விட்டது. காரணம், அதன் பின்விளைவுகள் மிகமோசமாக இருப்பது தெளிவாகி இருக்கிறது. அதேபோலத்தான் பிளாஸ்டிக், அணுசக்தி, சிமெண்ட், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என்று நாளைய சமுதாயத்துக்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், மனித இனத்தின் இன்றைய தேவையைப் பூர்த்தி செய்வது என்னவோ உண்மை.

மேலே குறிப்பிட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளின் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் விஞ்ஞான வளர்ச்சி செல்போன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கைபேசி. கைபேசி என்பது அடிப்படைத் தேவை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க இயலாது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 19,26,96,402 கைபேசிகள் இயங்குகின்றன என்றும், ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் சுமார் 1,42,81,726 புதிய இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இந்தக் கைபேசியின் தொடர் உபயோகம் வாடிக்கையாளர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதுடன், இதயத்துடிப்பையும், சீரான ரத்த ஓட்டத்தையும்கூட பாதிக்கின்றன என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மனிதனின் கண்டுபிடிப்பு மனிதனைப் பாதிக்கிறது என்பதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு உலகில் வாழும் ஏனைய ஜீவராசிகளைப் பாதிப்பது என்ன நியாயம்? மென்மையான உணர்வுகளாலான பறவைகளின் மூளை நரம்பு மண்டலம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி அவைகள் இறந்து விடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நகரங்களையும், கைபேசி கோபுரங்களைச் சுற்றியும் சிறு சிறு குருவிகளையும், ஏன், வரவர காகம் மற்றும் மைனா போன்ற பறவைகளையும்கூட நாம் பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதை எத்தனை பேர் உணர்கிறோம்? மனிதக் கழிவுகளைத் துப்புரவு செய்யும் காகங்கள் விரைவிலேயே காணாமல் போய் விடும் பேராபத்தை இந்தக் கைபேசிகளின் மின்காந்த ரேடியோ கதிரியக்க சக்திகள் உருவாக்கி வருகின்றன.

ஒருபுறம் மரம் செடி கொடிகள் அழிக்கப்பட்டு கான்க்ரீட் கட்டடங்கள் உருவாவதால், தங்குமிடம் இல்லாத தவிப்பு; மறுபுறம், சுதந்திரமாகக் காற்று மண்டலத்தில் பறக்க முடியாமல் இதுபோன்ற கதிரியக்க அலைகளால் ஏற்படும் பாதிப்பு. பாவம், பறவைகள் சரணடையக் காடுகள்கூட இல்லாமல் போய்விடும் அபாயகரமான சூழ்நிலை. இது எப்படி நியாயமாகும்?

கைபேசிகளிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்க அலைகளின் தாக்கத்தால், தேனீக்கள் அக்கம்பக்கமுள்ள காட்டுப் பகுதிகளில்கூட இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியுமா? "தேன்' என்கிற அரிய இயற்கையின் வரப்பிரசாதம் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்காமலேகூடப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

மரத்தின் மீது கொஞ்சி விளையாடும் இரண்டு கிரௌஞ்சப் பறவைகளில் ஒன்றைத் தனது வில்லில் அம்பேற்றி கொல்ல எத்தனிக்கிறான் வால்மீகி என்கிற வேடன். அப்போது, "மா நிஷாதா' என்று ஒரு அசரீரி கேட்டது. அதாவது, "ஏ, காட்டுவாசியான வேடனே, இந்த மாபாதகத்தைச் செய்யாதே..' என்பது அதன் பொருள். அந்தச் சம்பவம்தான் வால்மீகி என்கிற வேடனை முனிவனாக்கி, பிறகு ராமகாதை எழுதத் தூண்டியது என்பார்கள். இதுவே நாளைய மனிதனுக்கு நமது முன்னோர்கள் தீர்க்கதரிசனமாகச் சொன்ன உருவகக் கதையோ என்று தோன்றுகிறது.

மனிதா, இந்த உலகம் எனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துச் செயல்படுவாயேயானால், இயற்கையின் தண்டனையை எதிர்கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும், மறந்துவிடாதே!

Thursday, June 5, 2008

Energy Conservation

With the changing attitudes of people all over the world about energy conservation, we'd like to present some energy saving tips for you to consider. Keeping in mind that your comfort at home is a high priority, these tips and little known facts are a way not only to help you lower your energy bills, but at the same time keep you comfortable in your own home. Where can you best save power in a household? Lighting alone accounts for over nine percent of the annual power consumption. If we follow a few simple tips the power consumption can actually come down by approx. 20 percent.”


  • Clean the dust accumulated on lamps, bulbs, tube lights and fans. Clean your light fixtures regularly.

  • Use dim light (low wattage lamps) in Galleries, Lobbies, Balconies and bathrooms.

  • Turn off lights when leaving a room.

  • Do not shut and open the door of the refrigerator frequently. More electricity is used in doing so.

  • Do not keep TV, tape recorder and music system in standby mode. Power switch of these should be off when not in use to save electricity. The TV set consumes over five percent of the total power consumption. If you turn off the TV set instead of leaving it on stand-by, you save up to 70 kilowatt hours per year.

  • Make maximum use of sunlight during the day. You may not need artificial lights like bulbs and tubes during the day. Drapes or curtains on windows & doors are to be drawn apart during day time, for natural light to reduce need for electrical lights inside the home.

  • Geysers consume the maximum amount of electricity. Use them to heat only that amount of water that is required. Thermostat can be set to a lower temperature i.e. 45 to 50 degrees.

  • Reduce the usage of lifts. Do not allow children to play with elevators..

  • Provide task lighting over desks (i.e. Table Lamps for reading) etc., so that activities can be carried on without illuminating entire rooms.

  • If possible, put lamps in corners of rooms, where they can reflect light from two wall surfaces instead of one.

  • Use compact fluorescent bulbs in fixtures that are on for more than two hours a day. Compact fluorescent bulbs will give an incandescent bulb's warm, soft light, while using up to 75 percent less electricity. They also last about 10 times longer. Typically, a 23-watt compact fluorescent bulb can replace a 90- or 100-watt incandescent bulb.

  • Use dimmable bulbs wherever possible.

  • Children are advised to study in one room and with individual low voltage table lamps, which provides sufficient illumination for reading. Advise them to switch off the individual lamps. Children to utilize morning hours & broad day Sun light for studies, rather than burning mid-night lamps in its verbatim sense.

http://www.bharatpetroleum.com/environment/fuelConservationTips.asp?from=env#௧