I LOVE TAMIL


Saturday, January 30, 2010

முயன்றுதான் பார்ப்போமே!

வாக்களிக்கத் தகுதியுடைய அனைவரும் பொதுத் தேர்தலின்போது கட்டாயமாக வாக்களிக்கும்படி செய்வது இந்தியாவில் சாத்தியமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றம் மட்டுமே விவாதித்து, ஆலோசனை நடத்தி, அமல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் குஜராத் மாநிலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று இந்தியா முழுவதும் பொதுத்தேர்தலிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிக்கும் கடமையை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்று பரவலாக கருத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய கேள்விக்கு ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போதுதான், இந்தியாவில் இது சாத்தியமில்லை என்ற பதிலை நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்தியாவில் வாக்குப்பதிவு சராசரியாக 60 சதவீதமாகத்தான் இருக்கிறது. இதில் ஆளும்கட்சி அல்லது அக்கூட்டணிக்குக் கிடைக்கும் வாக்குகளையும் எதிர்க்கட்சிக்குக் கிடைத்த வாக்குகளையும் பிரித்துப் பார்த்தால், ஆளும் கட்சிக்கு ஆதரவான நபர்கள்- வாக்களித்த மற்றும் வாக்களிக்கத் தவறிய மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்காகவே இருக்கின்றனர்.

மூன்றில் ஒரு பங்கு மக்களின் விருப்பம் எப்படி ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக இருக்க முடியும். மக்களாட்சியில் மக்களின் முழுமையான பங்கேற்பு இல்லாவிட்டால் அது எந்த அளவுக்கு மக்களாட்சியாக இருக்க முடியும்? தேர்தலின்போது வாக்களிக்காமல், ஆனால் அதேநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விமர்சனம் செய்து கொண்டிருப்பது அர்த்தமற்ற புலம்பலாகத்தான் இருக்க முடியும். மக்களாட்சியில் மக்கள் அனைவருடைய பங்கேற்பும் இருப்பதும் அவசியம்.

உலக அளவில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கியுள்ள நாடுகள் 32 உள்ளன. அவற்றில்  ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பெரு, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் முக்கியமானவை. ஆனால் இவை மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகள். இங்கு 18 வயது முதல் 70 வரையிலான அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். உடல்நலம் குறைவு காரணமாக வாக்களிக்கவில்லை என்றால் மருத்துவச் சான்றிதழும், ஊருக்கு வெளியே வரமுடியாத தொலைவில் இருந்தால், அப்பகுதியின் காவல்நிலையச் சான்றிதழையும் காட்டி, விதிவிலக்கின் பயனைப் பெறலாம். இல்லாவிட்டால் அபராதம் செலுத்தியாக வேண்டும். பெரு நாட்டில் இதற்கான அபராதமாக அரசு நிறுவனத்தின் மூலம் அத்தகையோர் பெற்றுவரும் குடிமைப்பொருள் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பேச்சுரிமை, எழுத்துரிமைபோல, வாக்களிப்பதும் அல்லது அதைத் தவிர்ப்பதும் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை. ஐனநாயகத்தில் மக்களின் விருப்பமும் அரசின் கட்டாயப்படுத்தலும் நேர் எதிரானவை என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியென்று தெரியவில்லை.

 வாக்களிக்க விரும்பவில்லை என்றாலும் அதை வாக்குச்சாவடிக்கு வந்து 49 ஓ மூலம் பதிவு செய்ய சட்டப்படி வழிவகை இருக்கும்போது, வாக்குச் சாவடிக்கு வராமலேயே இருப்பது ஒரு குடிமகனின் உரிமை என்று சொல்வது சரியாக இருக்க முடியுமா?

வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். ஏனென்றால் இந்த அட்டைக்குப் பயன்பாடு இருக்கிறது. பல்வேறு ஆவணங்களுக்கு இந்த வாக்காளர் அடையாள அட்டை தேவையாக இருக்கிறது. ஆனால் தேர்தலின்போது வாக்களிக்கும் கடமை மட்டும் தேவையற்றதாகக் கருதப்படுகிறது.

தொடர்ந்து சில மாதங்களுக்குக் குடிமைப் பொருள் வாங்காத குடும்ப அட்டைகளை போலியாகக் கருதி, ரத்து செய்ய அரசினால் முடியும் என்றால், வாக்களிக்காதவர்களின் பெயர்களையும் இதேபோன்று பட்டியலிலிருந்து நீக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?

வாக்காளர் பட்டியலைத் தயார் செய்யவும், அதற்காக அடையாள அட்டைகள் தயாரிக்கவும் இந்திய அரசு எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கிறது என்பதைப் பார்க்கும்போது, வாக்களிப்பதைக் கட்டாயமாக்கினால் என்ன என்ற எண்ணம் எவருக்குமே தோன்றுவது இயல்பு.

அண்மைக்காலங்களில் நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்ததற்குக் காரணம், வாக்குச்சாவடிக்கு வராவிட்டால் -கொடுத்தவர்களுக்கு- பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அச்சம்தான் என்பதைப் பார்க்கும்போது, வாக்களிப்பது கட்டாயம் என்று செய்தால், அபராதம் அல்லது அரசு சலுகை மறுப்புக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் இருந்தால் அனைவரும் வாக்களிப்பார்கள் என்பது நிச்சயம்.

மக்கள் அனைவருடைய பங்கேற்பும் இல்லாமல் நல்லாட்சி என்பது சாத்தியமில்லை. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாலும் அதை வாக்குச் சாவடிக்கு வந்து பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவது இன்றைய காலத்தின் தேவையும்கூட.

நன்றி: www.dinamani.com - தலையங்கம் - 30.Jan.2010


Wednesday, January 20, 2010

காரட்

மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து
கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
இலகுவில் எல்லோருக்கும் எந்த நாட்டிலும் கிடைப்பதும் மருத்துவத்திலும் மந்திரச்சாறு எனப் போற்றப்படும் காரட்டின் தாவரப் பெயர் “டக்கஸ் காரோட்டா” ஆகும். இதன் பிறப்பிடம் மத்திய ஆசியா ஆகும். ஆனாலும் இது தற்போது உலகெங்கும் கிடைக்கக்கூடிய ஒரு குளிர் காலப் பயிர் ஆகும்.

காரட்டில் அதிகளவு இருப்பது பீட்டா காரோட்டின் என்னும் மஞ்சள் நிறப்பொருள்தான். இதிலிருந்துான் உடலுக்குத் தேவையானதும் மிகவும் முக்கியமானதுமான வைட்டமின் ‘ஏ’ உருவாகிறது. நமது ஈரல்தான் பீட்டா காரோட்டினை வைட்டமின் ‘ஏ’ ஆக மாற்றுகிறது. மீதமுள்ள பீட்டா கரோட்டின் ஈரலிலேயே பாதுகாக்கப்படுகிறது.
100 கிராம் காரட்டில் இருக்கும் சத்துக்கள்
ஈரப்பதம் - 85%
புரோட்டீன் - 0.9%
கொழுப்பு - 0.2%
தாது உப்புக்கள் - 1.2%
நார்ச்சத்து - 2%
காபோகைட்ரேட் - 10.6%
கால்சியம் - 80 மி.கி.
பொஸ்பரஸ் - 530 மி.கி.
இரும்பு - 2.2 மி.கி.
கரோட்டின் - 1890 மி.கி.
தயமின் - 0.04 மி.கி.
ரிப்போபிலோவின் - 0.02 மி.கி.
நயாசின் - 0.06 மி.கி.
வைட்டமின் சி - 3 மி.கி.
கலோரி - 48 மி.கி.
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒரு அற்புதமான காயகறி காரட் ஆகும். இதைப் பச்சையாக தோலுடன் உண்பதே சாலச்சிறந்தது. ஏனெனில் இதன் தோலில் தான் அதிகளவு தாது உப்புகள் காணப்படுகின்றன. காரட் ஒரு சிறந்த நச்சு முறிப்பான் ஆகும். காரட்டில் காணப்படும் ஆல்காலின் பொருட்களினால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் அமில கார அளவை சமநிலைப்படுத்தும் தன்மையும் இதற்கு இருப்பதால் புற்றுநோயையும் இரத்த தமனிகளில் ஏற்படும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதன் சாறு குழந்தைகள் முதல் முதியோர்வரை பயன்படுத்தக்கூடிய ஆரோக்கிய பானம் ஆகும். அதுமட்டுமல்ல இதனைப் பருகுவதால் கண்பார்வை மேம்படும். சளித்தொந்தரவுகள் குறையும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க காரட்டை பச்சையாக உண்ண நல்ல பலன் கிடைக்கும்.
காரட்டை பச்சையாகச் சாப்பிடும் போது அது உடலில் தீங்கிழைக்கும் கொழுப்பைக் குறைத்து உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை உருவாக்குகிறது. இது அமெரிக்க ஈஸ்டேர்ன் ரீஜனல் ரிசர்ச் சென்டர் மருத்துவ ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பிலிப் பிலிஃபர் மற்றும் டாக்டர் ஹேக் லாண்ட் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி காரட்டில் கொழுப்பைக் கரைக்கும் பெக்டின் இருப்பதால் தினமும் 2 காரட் சாப்பிடும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் கொழுப்பில் 10 முதல் 20 சதவிகிதம் குறைகிறது எனவும் இதனால் இரத்த அழுத்தம் சமநிலைக்கு வருகிறது எனவும் டாக்டர் வெப்பர் என்பவர் தனது ஆதாரபூர்வமான ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார்.
ஹார்வார்ட்டு மருத்துவ பல்கலைக் கழகத்தில் 8 வருடங்களாக 90,000 பெண்களை ஆராய்ந்ததில் தெரிய வந்த உண்மை இது. மாதத்தில் ஒருமுறை காரட் சாப்பிடுபவர்களிலும் பார்க்க வாரத்திற்கு ஐந்து முறை அல்லது அதற்கு மேலும் காராட் சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வரும் அபாயம் மூன்றில் இரண்டு விகிதம் குறைவாக கண்டறிந்தார்கள்.
காரட்டை பச்சையாக மென்று தின்னும் போது அது பால் ஈறுகளிலுள்ள கிருமிகளை கொல்வதுடன் பற்களுக்கிடையேயுள்ள உணவுத் துகள்களையும் வெளிக்கொணர்ந்து பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை தவிர்த்துப் பாதுகாத்து நமது பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.
காரட் சாப்பிடும் போது அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பதால் உணவு விரைவில் செரிக்கப்படுகிறது.இதற்குக் காரணம் உணவு சமிபாடடையச் செய்யும் நொதியங்கள் தூண்டப்படுவதால் அஜீரணக் கோளாறு, கேஸ்டிரிக் அல்சர், குடல நோய்கள், அப்பண்டிக்ஸ் பெப்டிக் அல்சர் என்பவை வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் அட்ரீனலின் சுரப்பியின் பணியை ஊக்குவிப்பதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகிறது.

நன்றி: http://www.tamilvanan.com/content/2010/01/15/carrot-2/

Saturday, January 16, 2010

நீதிக்குத் தலைவணங்கு

பொங்கல் நாளில், கேட்டாலே மனதுக்கு இனிமை தரும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது, "இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகமும் அரசு அதிகார அமைப்புதான். எனவே அந்த அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்கு உட்பட்டதுதான்' என்று ஏற்கெனவே தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும், சட்டத்துக்கு அப்பாற்பட்டு தனிச்சலுகை பெற்றிருப்போர் யாருமில்லை என்பதும் இன்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்ப்புக்காக சுபாஷ் சி. அகர்வால் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி நீதிமன்றப் படிகளை ஏறி இறங்கியிருக்கிறார். "மற்ற நீதிபதிகளுக்கு என்னென்ன பொறுப்பு உள்ளதோ அதே பொறுப்புதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் உள்ளது. பணி விதிமுறைகளுக்கு உள்பட்டு சொத்து விவரங்களை வெளியிட வேண்டிய கடமை, தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் உள்ளது' என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதைத் தலைமை நீதிபதி அலுவலகத்தால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததைப் போலவே, தற்போது உறுதி செய்யப்பட்ட இந்தத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம். நீதிக்குத் தலைவணங்க நீதியே தயங்குகிறது. 

ஓர் அமைச்சர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்தார் என்றால் அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டியது நீதித்துறைதான். ஆனால் அந்த வழக்கை நடத்தும் நீதிபதி, அந்த அமைச்சர் சட்டவிரோதமாகத் தரும்  நிலபுலன்களை ஏற்றுக்கொண்டால், சமூகத்தில் மறைக்கப்பட்ட ஓர் அநியாயம், நீதிமன்றத்திலும் அம்பலப்படாமல் போகும்.  மக்கள் கண்முன்பாக வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் அந்த வழக்குகளிலிருந்து  விடுவிக்கப்படுவார்கள். அவர்களது ஊழல் சொத்துக்கு நியாயப் பூச்சு கிடைத்துவிடும்.

ஆகையால்தான், அரசியல் மற்றும் அரசுத் துறையில் ஊழல் இருந்தாலும், அதற்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதித்துறை மந்தணங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான், நீதிபதிகள் சொத்துவிவரங்களை அறிவிக்க வேண்டும் என்கிற இந்த வழக்கின் நோக்கம். மேல்முறையீடுகளை கைவிட்டு, நீதிக்குத் தலைவணங்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பமாக இருக்க முடியும்.

ஒரு முக்கிய பதவியில் இருப்பவரோ, பொதுவாழ்க்கையில் இருப்பவரோ, ஏன் அரசு ஊழியரோ ஆண்டுதோறும் தனது வருமானம் மற்றும் சொத்து விவரங்களை வெளியிட்டால்தான் அவரது வருமானத்துக்குள் அவர் வாழ்ந்திருக்கிறாரா என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்க முடியும்.

இந்தச் சொத்துகளைத் தங்கள் உறவினர்கள் பெயரில் பினாமியாக வாங்கிப் போடுவார் என்ற வாதம் உண்மைதான். அப்படியான புகார்கள் எழும்போது, அந்த நபரின் தொழில் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் அரசு ஆய்வு செய்து வருமானத்துக்கு மீறிய சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும். மேலும், தங்கள் பெயரில் இல்லாத சொத்துகளைத் தராமல் ஏமாற்றுவது எளிது என்பதால், இதில் மிகச் சிலர் தவிர பெரும்பாலானோர் பினாமி பெயரில் சொத்து வாங்குவதில் ஈடுபட மாட்டார்கள். லஞ்சப் பணத்தை வெளிப்படையாகச் செலவிட முடியாது என்ற  நிலைமை ஏற்படும்போதுதான் லஞ்சத்தின் கோர நகங்கள் கூர்மழுங்கும்.

தலைமை நீதிபதி அலுவலகம் இந்தத் தீர்ப்பை எந்த மனக்கசப்பும், முகச்சுளிப்பும் இல்லாமல் ஏற்கும்போதுதான், இந்தச் சட்டத்தின் அடிநாதம் ஒவ்வொரு அரசுத் துறையின் கடைநிலை ஊழியர் வரை ஒலிக்கும். அர்த்தமுள்ளதாக மாறும். 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில்கூட நிறைய மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை. நீதிபதிகள் குழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது, அவர்கள் நல்ல நீதிபதிகளைத் தேடிப்போய் தேர்வு செய்வதில்லை என்பதாலும், தங்கள் முன் இருக்கும் நீதிபதிகளில் சிலரைப் பரிசீலிக்கிறார்கள் என்பதாலும்தான் இன்றைய நீதித்துறையின் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. 

நீதிபதிகளின் குழு பரிசீலனை செய்வதற்கான பல நீதிபதிகளைத் தேர்வு செய்ய ஒரு நீதித்துறை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஐந்து நீதிபதிகளை நியமிக்கக் குறைந்தது 40 பேரை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும்கூட, நீதித்துறை தலைவணங்கி ஏற்க வேண்டும். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து உடையவராகத் தலைமை நீதிபதியே இருக்கிறார். இவ்வாறு நீதிபதிகள் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்தால் அவர்கள் தொழில்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என்பது அவரது கருத்து. 

கோயில் உண்டியல் பணத்தை எண்ணுவது சேவை என்றாலும்கூட, பணியை முடித்து வெளியேறும்போது வேஷ்டியை உதறிக் காட்டுவது தனது நேர்மையை சந்தேகிப்பதாக ஒருவர் கருதினால், அந்தச் சோதனைக்கு உடன்பட மறுத்தால், அல்லது தங்கள் வாதத்தை நியாயப்படுத்தினால் அதுவே அத்தகையோருக்கு களங்கமாக அமைந்துவிடும். அதைப் போன்றதுதான், நீதிபதிகள் தங்கள் சொத்துகளைக் காட்ட வேண்டியதில்லை என்கிற வறட்டு கெüரவப் பிரச்னையும் நீதித்துறை மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதை நீதித்துறை புரிந்துகொள்வது அவசியம்.

நன்றி: www.dinamani.com - 16-01-2010 (தலையங்கம்) 

உயிரி பன்மிய ஆண்டில் ஈர நிலங்கள் பாதுகாப்பு



உலகின் மிக முக்கிய வளமையங்களில் ஒன்று ஈர நிலங்கள் ஆகும். பயோ டைவர்சிட்டி எனப்படும் உயிரி பன்மியம் பெருக ஈர நிலங்களே காரணம். இந்த ஆண்டு உயிரி பன்மிய ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளதால் உயிரி பன்மியத்தின் அடிப்படை ஆதாரமான ஈர நிலங்களில் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈர நிலங்கள் தண்ணீர் பரவி நிற்கும் ஆழமற்ற நிலப்பகுதியாகும். இந்த ஈர நிலங்களில் தான் அதிக எண்ணிக்கையில் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன அதிகம் உள்ளன. கடல்களை விட ஈர நிலங்களில் தான் அதிகளவில் மீன்கள் உள்ளன. ராஜஸ்தானில் சாம்பார், ஆந்திராவின் கொல்லேரு, கேரளாவின் அஷ்டமுடி, காஷ்மீரில் ஊலர் ஏரிகள் ஈர நிலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கோடியக்கரை ஈர நிலங்களின் பட்டியலில் உள்ளது. ஈர நிலங்கள் குறித்த ராம்சார் சர்வதேச அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள புதிய ஈரநிலங்கள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

நன்றி : www.dinamalar.com - 16-01-2010

Monday, January 11, 2010

புற்றுநோயை கட்டுப்படுத்தும் உணவு



ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் இயல்பை நார்ச்சத்து உணவுகள் பெற்றுள்ளன. பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோயைக் குறைக்கும் இயல்பையும் நார்ச் சத்து உணவுகள் பெற்றுள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணவில் ஆயிரம் கலோரித்திறனுக்கு குறைந்தது 5 கிராம் அளவாவது நார்ச்சத்து இடம் பெற்றால் இந்தப் புற்றுநோய் 20 சதவீதம் வரை குறைகிறது. ஓட்ஸ், அவித்த உருளைக்கிழங்கை உணவில் சேர்த்தால் தேவையான நார்ச்சத்தின் அளவைப் பெறலாம். வாழைத்தண்டு, வாழைப்பூ, பீன்ஸ், முள்ளங்கி, அவரை, கொத்தவரை, புடலங்காய், பச்சைப்பயறு, ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய் போன்றவை கூடுதலாக நார்ச்சத்து இருக்கும் உணவுப் பொருட்களாகும். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நார்ச்சத்தினை உருளைக் கிழங்கில் பெறுவதை கூடுமானவரையில் தவிர்க்க வேண்டும்.


நன்றி : www.dinamalar.com - 11-01-2010


Wednesday, December 23, 2009

புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு


கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது.​ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள்,​​ அமைப்புகள்,​​ இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம்.​ ​ மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது.​ இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால்,​​ ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும்,​​ முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான்.​ அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.​ உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது.​ ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது,​​ சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது;​ பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால்,​​ அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது.​ உலக நாடுகள் அனைத்தையும்,​​ ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் -​ கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும்,​​ வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால்,​​ அவற்றோடு சேர்ந்து பூமிக்கும்,​​ கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது.​ இவை ​ -​ நிலக்கரியும்,​​ பெட்ரோலியப் பொருள்களும் -​ சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம்,​​ காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது.​ இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் ​ பெருக்கின.​ இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின.​ கூடவே,​​ காடுகள் அழிக்கப்பட்டதும்,​​ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும்,​​ அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும்,​​ பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன.​ உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று,​​ நீர்,​​ அனைத்தும் ​ மாசுபட்டன;​ ​ மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின.​ வளர்ச்சியும்,​​ முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால்,​​ சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும்,​​ அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் ​ வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது.​ பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து,​​ மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது.​ பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின.​ இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால்,​​ மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை ​ எழுந்தது.​ ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி,​​ அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.​ இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.​ இதையடுத்து ஐ.நா.​ முயற்சியில் 1989,​ 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.​ கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள்,​​ கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா.​ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் ​ உருவாக்கப்பட்டன.​ ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும்,​​ 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன.​ தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது.​ இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா.​ 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா.​ கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது.​ புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும்,​​ இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்;​ வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால்,​​ அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ,​​ கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது;​ ​ என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள்,​​ வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி,​​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது.​ இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன.​ ​ இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.​ இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து -​ இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் -​ வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.​ இந்த 1992-ன் ஐ.நா.​ கோட்பாடு,​​ உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும்,​​ இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது.​ இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா.​ எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.எனினும்,​​ இந்த ஐ.நா.​ கோட்பாடு அடுத்தடுத்த ​ பேச்சுவார்த்தைகளுக்கும்,​​ மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.​ புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும்,​​ உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக,​​ சிறு தீவு நாடுகள்;​ தாழ்நிலைக் கடலோர நாடுகள்;​ சதுப்பு நிலம்,​​ காடுகள் நிறைந்த நாடுகள்;​ ​ ​ இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்;​ வறட்சி -​ பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்;​ நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்;​ எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்;​ எரிபொருள்களை ​(நிலக்கரி,​​ எண்ணெய்)​ எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள்,​​ சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது;​ வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா.​ கோட்பாட்டுக்கு,​​ வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது.​ ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும்,​​ 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் ​ சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது.​ 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு,​​ வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் ​(கரியமில வாயு)​ வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது.​ 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே,​​ புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ ​ உடன்பாட்டின் மையக் கோட்பாடு.​ இதுவே பொதுவான -​ ஆனால் பாகுபடுத்தப்பட்ட -​ பொறுப்புகள் என்று அறியப்பட்டது.​ இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா ​ இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி,​​ இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது.​ இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும்,​​ வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து,​​ கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும்,​​ கோபன்ஹேகனில் குழுமி,​​ ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு,​​ "பூமண்டலம் காப்போம்;​ ​ புவிவெப்பம் ​ தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று,​​ ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது.​ ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ,​​ சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ​ ஏற்க மறுத்தார்.தனிநபர் சராசரிக் கணக்கில்,​​ இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா,​​ தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல்,​​ வளரும் நாடுகள் -​ குறிப்பாக சீனாவும் இந்தியாவும் -​ கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது;​ ​ அது மட்டுமல்ல,​​ வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.வளரும் நாடுகள் ஜி -​ 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.சர்வதேச நிதி நெருக்கடியின்போது,​​ வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது.​ கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில்,​​ அமெரிக்காவையும்,​​ வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.​ ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,​​ பிரேசில்,​​ தென்ஆப்பிரிக்கா,​​ இந்தியா,​​ சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன;​ ​ இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.​ கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது,​​ 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே,​​ கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள்.​ இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள ​(கரியமில வாயு ​ குறைப்புக்கான)​ பொறுப்பு என்பது,​​ வளரும் நாடுகளான இந்தியா -​ சீனாவோ,​​ இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் -​ ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல்.​ கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக,​​ சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. ​பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 -​ 2012-ல் 3000 கோடி டாலரும்,​​ 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.​ ஆனால்,​​ கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!

நன்றி: www.dinamani.com - 23.12.2009 

Tuesday, December 15, 2009

தலையங்கம்: எச்சரிக்கை அவசியம்

வ ளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் நட​வ​டிக்​கைக்​கான பரு​வ​நிலை மாநாடு கோபன்​ஹே​க​னில் தொடங்கி ஒரு​வா​ரம் முடிந்த நிலை​யில்,​​ சிறு​சிறு காய்​ந​கர்த்​தல்​க​ளைச் செய்​துள்​ளன வள​ரும் நாடு​கள்.​ அதா​வது,​​ கரி​ய​மில வாயு உள்​ளிட்ட பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் அள​வு​க​ளில் கொஞ்​சம் முன்​பின் இருந்​தா​லும் அவை சரி​பார்க்​கப்​ப​டும் என்​ப​தும் இதில் ஒன்று.​
192 நாடு​க​ளின் பிர​தி​நி​தி​கள் பங்கு கொண்​டுள்ள இந்த மாநாட்​டில்,​​ 77 வள​ரும் நாடு​கள் உள்​ளன.​ வள​ரும் நாடு​கள் தங்​கள் பகு​தியி​லி​ருந்து பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைப்​பது என்​றால்,​​ அதற்​கா​கச் சில தொழில்​து​றை​யி​லும்,​​ அனல் மின்​உற்​பத்​தி​யி​லும் சில மாற்​றங்​க​ளைச் செய்​தாக வேண்​டும்.​ இந்​தத் தொழில்​நுட்ப மாற்​றத்​துக்​காக 1000 கோடி டாலர்​கள் உதவி செய்​வ​தாக ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.​
இந்​தத் தொகை மிகச் சொற்​ப​மா​னது என்று வள​ரும் நாடு​கள் கருத்​துத் தெரி​வித்​துள்​ளன.​ உண்​மை​யைச் சொல்​வ​தென்​றால்,​​ இந்த எதிர்ப்​பின் அள​வைத் தெரிந்​து​கொள்​ளத்​தான் ​ அவர்​கள் இதைத் தெரி​விக்​கி​றார்​கள்.​ எதிர்ப்​பின் அள​வைப் பொருத்து,​​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட வளர்ந்த நாடு​கள் தங்​கள் பங்​குத்​தொ​கையை மேலும் அதி​க​ரித்து,​​ வள​ரும் நாடு​களை நிர்​பந்​திக்​கும்.​ அதற்​கான முதல்​பே​ரம்​தான் இந்த 1000 கோடி டாலர்.​ இது மேலும் உய​ரும் என்​பது நிச்​ச​யம்.​
இதை அறி​வித்​துள்ள ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணைய இயக்​கு​நர் கார்ல் ஃபால்​கன்​பெர்​ஜர் வேறொரு விஷ​யத்​தை​யும் குறிப்​பிட்​டுள்​ளார்.​ அதா​வது,​​ "இந்த மாநாட்​டில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது பங்​குக்​குக் குறைக்​கப் போகும் பசு​மை​இல்ல வாயுக்​கள் அள​வு​க​ளில் சிறு மாறு​பா​டு​கள் இருந்​தா​லும் பர​வா​யில்லை.​ ஆனால் அவற்றை அந்​நா​டு​கள் சொன்​ன​படி செய்​கின்​ற​னவா என்று சரி​பார்க்க வேண்​டி​யது கட்​டா​ய​மா​கும்' என்று கூறி​யுள்​ளார்.​ சரி​பார்ப்​பது என்​ப​தன் வெளிப்​ப​டை​யான பொருள்-​ சொன்​ன​படி செய்​ய​வில்லை என்​றால் இந்த நிதியை நிறுத்​தி​வி​டு​வோம் என்ற மிரட்​டல்​தான்.​
வளி​மண்​ட​லத்​தில் பெரும்​ப​கு​தியை மாசு​ப​டுத்​திய நாடு​கள் வளர்ந்த நாடு​கள்​தான்.​ பல ஆண்​டு​க​ளாக இதைச் செய்​து​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைக் ​ கட்​டுப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் பல​வி​த​மாக முயல்​கின்​ற​னர்.​ 1990-ம் ஆண்டு முத​லாக மாசு​ப​டுத்தி வரும் இந்த வளர்ந்த நாடு​கள்,​​ தற்​போது தொழில்​நுட்​பத்​தின் உத​வி​யால் இந்த மாசு அள​வைக் குறைத்​துக் கொண்​டுள்​ள​தா​கக் கூறு​கின்​றன.​ கியோட்டோ தீர்​மா​னத்​தின்​படி மாசு​அ​ள​வைக் குறைப்​ப​தில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது மாசு அளவை 1990-ம் ஆண்​டின் அள​வுப்​படி நிர்​ண​யிக்க வேண்​டும் என்று குறிப்​பிட்​டி​ருந்​தா​லும்,​​ அமெ​ரிக்கா தனது அளவை 2005-ம் ஆண்டு அள​வின்​படி 17 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்​தத் தன்​னிச்​சை​யான அறி​விப்​பைத் தொடர்ந்து சீனா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 40 சத​வீ​தம் வரை ​(2005-ம் ஆண்டு அள​வுப்​படி)​ குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​தது.​
இந்த இரு நாடு​க​ளை​யும் தொடர்ந்து இந்​தி​யா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 20-25 சத​வீ​தம் ​(அமெ​ரிக்கா,​​  சீனா வழி​யில் 2005-ம் ஆண்டு அள​வின்​படி)​ படிப்​ப​டி​யா​கக் குறைத்​துக்​கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்த அறி​விப்​பைச் செய்​த​வர் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்.​ மாநாட்​டில் கலந்​து​கொண்டு பேசும்​முன்​பா​கவே இத்​த​கைய அறி​விப்பை அமைச்​சர் செய்​த​தற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து,​​ இந்த மாநாட்​டில் கலந்​து​கொள்​ள​வி​ருந்த குழு உறுப்​பி​னர்​கள் இரு​வர் தங்​கள் பய​ணத்தை ரத்து செய்​து​விட்​ட​னர்.​
இந்​தி​யத் தேவை​கள்,​​ இந்​தி​யா​வின் தொழில்​வ​ளர்ச்சி,​​ இங்​குள்ள தொழில்​நுட்​பம்,​​ மக்​கள்​தொகை அனைத்​தை​யும் கணக்​கில் கொண்டு மாநாட்​டில் பேச​வும்,​​ தனக்​கான அளவை நிர்​ண​யிக்​க​வும்,​​ வளர்ந்த நாடு​கள் வழங்​க​வுள்ள உத​வித்​தொ​கையை அதி​க​மா​கப் பெறு​வ​தும்​தான் இந்​தி​யா​வின் முழு நோக்​க​மாக இருக்க வேண்​டுமே தவிர,​​ அமெ​ரிக்கா,​​ சீனாவை அடி​யொட்டி இந்​தி​யா​வும் நடப்​பது சரி​யா​ன​தாக இருக்க முடி​யாது.​ ​
இந்​தி​யா​வுக்​குக் குரல் கொடுக்க வேண்​டிய அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்,​​ இம​ய​ம​லை​யில் பனிப்​பா​றை​கள் வேக​மாக உரு​கு​வ​தற்​கும் பரு​வ​நிலை மாறு​பாட்​டுக்​கும் தொடர்​பில்லை என்று பேசி,​​ பனிப்​பாறை வளர்​வ​தும்,​​ உரு​கித் தேய்​வ​தும் சுழற்சி அடிப்​ப​டை​யில் நடப்​பவை என்று விளக்​க​மும் கூறி​யி​ருக்​கி​றார்.​ இயற்கை ஆர்​வ​லர்​க​ளின் கோபத்​துக்கு ஆளா​கி​யி​ருக்​கி​றார்.​ நம் அமைச்​சர் இப்​ப​டி​யெல்​லாம் பேசு​வ​தைப் பார்த்​தால் நாம்,​​ வளர்ந்த நாடு​க​ளால் ஏமாற்​றப்​பட்​டு​வி​டு​வோமோ என்ற அச்​சம் ஏற்​ப​டு​கி​றது.​ இந்​தியா இரண்டு விஷ​யங்​க​ளில் மிகத் தெளி​வாக இருக்க வேண்​டும்.​
 முத​லா​வ​ தாக,​​ இந்​தி​யா​வின் பசு​மை​இல்ல வாயு வெளி​யேற்​றத்​தைச் சரி​பார்த்​தல் என்​கிற பெய​ரில் அன்​னி​யர்​கள் புகுந்து மேலாண்மை செய்​வதை ஒரு போதும் ஒப்​புக்​கொள்​ளக்​கூ​டாது.​ அதிக உத​வித்​தொகை,​​ சலுகை என்ற பெய​ரில் ஆசை​வார்த்தை காட்​டி​னா​லும் அதற்கு இந்​தியா உடன்​ப​டக்​கூ​டாது.​ அமெ​ரிக்​கா​விலோ அல்​லது சீனா​விலோ நாம் போய் சரி​பார்க்​கும் பணியை மேற்​கொண்​டால் அனு​ம​திப்​பார்​களா என்​பதை யோசிக்க வேண்​டும்.​
இரண்​டா​வ​தாக,​​ வளி​மண்​ட​லம் மாசு​பட்​டதை கணக்​கி​டும்​போது,​​ அந்​தந்த நாட்​டின் மக்​கள் தொகை​யை​யும் கணக்​கில் கொள்ள வேண்​டும்.​ ஏற்​கெ​னவே சொர்க்​க​போ​கத்​தில் இருக்​கும் குறைந்​த​பட்ச அமெ​ரிக்​கர்​க​ளுக்​காக,​​ மக்​கள் தொகை அதி​கம் கொண்ட இந்​தி​யா​வில் 100 கோடி இந்​தி​ய​ரும் தங்​கள் செüக​ரி​யங்​க​ளைத் தியா​கம் செய்ய வேண்​டும் என்று வற்​பு​றுத்​து​வது நியா​ய​மற்​றது.​ இந்​தி​யா​வில் நதி​கள் மாசு​பட்​ட​தற்​கும்,​​ வளி மாசு​பட்​ட​தற்​கும் கார​ணம்,​​ அதி​கப் பணம் கிடைக்​கி​றது என்​ப​தால் வளர்ந்த நாடு​க​ளுக்கு ஏற்​று​மதி செய்​வ​தற்​காக மேற்​கொண்ட தொழில்​க​ளால் ஏற்​பட்​ட​வை​தான்.​ வளர்ந்த நாடு​க​ளுக்​குத் தேவை​யான,​​ ஆனால் ​ அந்​நாட்டு இயற்​கைக்​குப் பாத​க​மான தொழில்​கள் அனைத்​தை​யும் வள​ரும் நாடு​க​ளுக்​குத் தள்​ளி​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைப் பல​வந்​தப்​ப​டுத்​து​கின்​ற​னர்.​ இதைப் புரிந்​து​கொண்டு செயல்​பட வேண்​டும்.​
அமெ​ரிக்​கா​வி​டம் நல்ல பெயர் கிடைக்​கும் என்​ப​தற்​காக அவர்​கள் மனம்​நோ​காத படி நடப்​ப​தால் இந்​தி​யர்​க​ளுக்கு எந்​த​வித நன்​மை​யும் கிடைக்​காது.​ இன்​னும் ஒரு வாரம் இருக்​கி​றது.​ தெளி​வா​க​வும்,​​ முன்​யோ​ச​னை​யு​டன்,​​ எச்​ச​ரிக்​கை​யு​டன் செயல்​ப​டு​வது அவ​சி​யம்.


நன்றி: www.dinamani.com - 14 Dec 2009