I LOVE TAMIL


Thursday, April 30, 2020

எழுதி வையுங்கள்

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

காய்கறிச்
சந்தைகளாய் மாறிப்போன
*பேருந்து நிலையங்கள்.*!

நடமாடும்
மருத்துவ மனைகளாக
மாறிப்போன *ரயில் பெட்டிகள்.!*

கதவடைக்கப்பட்ட
*வழிப்பாட்டுத் தலங்கள்.!*

காக்கும் கடவுளர்களாக
உருவகம் கொண்ட
*மருத்துவப் பணியாளர்கள்.!*

தீண்டாமை ஒரு 
புண்ணியச் செயலென
மாற்றிய *நுண்ணுயிரி.!*

இருபது நபர்களுக்கு மிகாமல்
ஆடம்பரங்களின்றி நடந்த
*திருமணங்கள்.!*

சாலை விபத்துகள்
பற்றிய செய்திகளின்றி
வெளியாகிய *செய்தித்தாள்கள்.!*

காட்சிகள் காட்டாமல்
மூடப்பட்டிருந்த *திரையரங்குகள்.!*

சமையலறைக்குள்
தஞ்சமடைந்த *கணவன்கள்.!*

சீரியல்கள் தொல்லையின்றி
நல்ல முறையில் நேரம்
செலவழித்த *மனைவிகள்.!*

பரபரப்புகளில் ஓடித்திரிந்து
நிதானத்தை பழகிக்கொண்ட 
*இன்றைய தலைமுறையினர்.!*

தானாகவே
குறைந்துபோன *காற்றின் மாசு.!*

சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
*பறவைகள், விலங்குகள்.!*

பழங்கதைகள் பேசி
பல்லாங்குழி ஆடி குடும்பமாய்
மாறிய *குடும்பங்கள்.*!

இவற்றோடு...
ஆயிரம் கிலோமீட்டர்களை
பசியின் கொடுமையோடு
நடந்தே தாண்டிய *நாடோடி*
*உழைப்பாளிகளின் கால்கள்*

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

*தனிமை நாட்கள்-37*

Wednesday, April 22, 2020

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.*  
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.*  
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁

Wednesday, March 11, 2020

குறைவான செலவில் நிறைவாக வாழ்வது எப்படி?* - மினிமலிசம்

*குறைவான செலவில் நிறைவாக வாழ்வது எப்படி?* - மினிமலிசம்

மினிமலிசம் என்பது குறைவான பொருட்களுடன் வாழுதல்.

வீடு நிறைய பொருட்களை சேர்த்து வைத்தால் அதன்பின் பொருட்களுக்கு சேவை செய்தே வாழ்நாள் வீணாகிவிடும்.

நாலு பேர் இருக்கும் வீட்டில் 10- 20 தட்டுகள், 10- 20 டம்ளர்கள் புழக்கத்தில் இருப்பதை காணமுடியும். எப்போது பார்த்தாலும் கிச்சன் சிங் நிரம்பியே இருக்கும். பாத்திரம், கழுவி, கழுவி ஓய்ந்து
போய்விடுவார்கள் .

ஒரே தட்டை சாப்பிட்டுவிட்டு உடனே கழுவி வைத்தால், ஒரே டம்ளரில் நீரோ, காபியோ குடித்தவுடன் உடனே குடித்தவரே கழுவி வைத்தால் இத்தனை தட்டுகள் அவசியம் இல்லை.

"எப்போதாவது பயன்படும்" என நினைத்து சிங்கிள் பயன்பாட்டுக்கு வாங்கும் பொருட்களை கூட தூக்கிவீசாமல் பாதுகாத்து வைத்து (பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கன்டெய்னர்) கடைசியில் அலமாரிகள் நிரம்பிவழிவதுதான் மிச்சம்.

வீட்டில் 20 தட்டு, 20 டம்ளர் இருந்தால் 10 தட்டு, 10 டம்ளரை எடுத்து மறைத்துவைக்கவும். அவை காணாமல் போனதே யாருக்கும் தெரியாது. 

பல பொருட்கள் இப்படித்தான்...

ஒரு அறை சும்மா இருந்தா நமக்கு பிடிக்காது

"அந்த சுவர் காலியா இருக்கு. ஒரு பெயிண்டிங் மாட்டுவோம். அந்த கார்னர் காலியா இருக்கு. ஒரு பூச்செடி வைப்போம்.."

அதன்பின் ஆணி, பெயிண்டிங், பூச்செடிக்கு தண்ணி, போட்டோவை கழுவுவது துடைப்பது. என வேலைகள் கூடும்.

வீடு காலியாக இருப்பது தான் இருப்பதிலேயே சிறந்த அழகு.

வீடு முழுக்க பொருள், வீடு சுத்தமாவே இல்லை, வேலை தீரவே இல்லை.. என புலம்பினால் அதுக்கு காரணம் பொருட்களை இப்படி  தேவைக்கு அதிகமாக வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துக்
கொள்வதுதான் காரணம்.

பொருட்களுக்கு சேவை செய்தே நம் வாழ்நாள் கழிந்துவிடுகிறது.

``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார். ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’

இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.

இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ் ஐ.டி பசங்க! தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என வாழ்வில் எல்லாமே ஓகேதான். ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள். வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது. வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில் எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள். மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட நொடியில் `மினிமலிசம்’ என்கிற கான்செப்ட் பிறக்கிறது.

இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை என்கிற கருத்து பரவி வருகிறது.  உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம். 

இந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும். 2009 தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.

மினிமலிஸம் என்றாலே கஞ்சப்பிசினாரியாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை. மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும். இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.

அதென்ன அவசியமில்லா நுகர்வு? நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவிக்கிற பயன்படுத்து கிற எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.

``மினிமலிஸ்டுகள் குறைவு, குறைவு, குறைவு என வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ என்பது ஜோஷூவாவின் கருத்து. மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு மினிமலிஸம். இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின் வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான். வாரன் பஃபெட் நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார். 1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். ‘`தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்’’ என்கிறார் பஃபெட்.  அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும். 

மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன? ஜோஷுவாவே சில விஷயங்களை எழுதியிருக்கிறார்.

1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல். - மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான். நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

2 -  குறைவான பொருள்களில் வாழ்வது - வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்... அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே 
மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.

3 - வருங்காலத்திற்குத் திட்டமிடல் - மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.

4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது - எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன் இது எனக்கு அவசியம்தானா... இது இல்லாமல் வாழ முடியுமா... முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல் இருந்தால் மட்டும் வாங்குவது.

5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது - உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர் களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா. மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள் அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.

இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும் கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழவும் உதவும். இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும் சிறப்பாக வாழமுடிந்தது.  "மினிமலிசம் என்றாலே எல்லோரும் நினைக்கிறார்கள், நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் குறைத்துக்கொள்வது என்று. உடை, கருவிகள். நுகர்வுப் பொருட்கள் என்று எல்லாவற்றையும். Always make less. ஆனால், நாங்கள் சொல்கிறோம் மினிமலிச வாழ்வியல் உங்களுக்கு வாழ்க்கையில் பலவற்றைப் பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பைத் தருகிறது. நிறைய நேரம், நிறைய படைப்புத்திறன், நிறைய சுதந்திரம். தேவையற்றதும் ஆடம்பரமானதும் உங்கள் மீது திணிக்கப்படுபவையுமான பொருட்களைச் சேர்த்துக்கொண்டே இருக்கும் இந்த நுகர்வுக் கலாச்சார வாழ்க்கைக்காக உழைப்பதின் மூலமும் ஓடிக்கொண்டே இருப்பதன் மூலமும் நீங்கள் இழப்பது உங்கள் நேரத்தையும் சுதந்திரத்தையும் படைப்புத்திறனையும்தான். மினிமலிச வாழ்வியல் இவற்றை நிறையவே உங்களுக்குப் பெற்றுத்தரும்" 

இதை நீங்களும் கடை பிடித்து , உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். அவர்களையும் நிறைவான வாழ்க்கைக்கு பழக்க படுத்துங்கள்

Saturday, February 22, 2020

தமிழ் தாய் மொழி


World Language Day _ February 21

*உலகத் தாய்மொழி தினம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.*

1. முடிந்தவரை ஆங்கிலச் சொல் தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்களை நீங்களே உருவாக்குங்கள். அது ஓரளவுக்குத்தான் பொருந்தும் என்றாலும் பழுதில்லை. எல்லாச் சொற்களும் நூறு விழுக்காடு பொருந்தி வரவேண்டியதில்லை.

2. வடமொழி உள்ளிட்ட பிறமொழிச் சொற்களை இயன்றவரை தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். தொடக்கத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் மிகவும் இயல்பாகிவிடும்.

3. முடிந்தவரை நல்ல தமிழில் பிழையில்லாமல் எழுதுங்கள். பிழை நேர்ந்துவிடுமே என்ற அச்சத்தால் எழுதாமலும் இருந்துவிடாதீர்கள். எழுதிக்கொண்டே இருக்கையில்தான் நம்முடைய பிழைகள் தெரியவரும். அவற்றினைக் கண்டறிந்து நீக்கிக் கொள்ளலாம். துணிந்து எழுதுவதும் பிறகு உரிய பிழைகளைக் களைவதும் இரட்டைச் செயல்பாடுகள்.

4. பொதுத்தமிழ்ப் பேச்சுமுறைக்கு வாராமல் முடிந்தவரை உங்களுடைய வட்டார வழக்கில் பேசிக்கொண்டிருங்கள். அதனை இழிவாகக் கருதாதீர்கள், பெருமையாகக் கருதுங்கள். வட்டார வழக்கில் இன்னும் கண்டறியப்படாத அருஞ்சொற்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வட்டார வழக்கினை வாழவைப்பது மொழியின் ஒரு கிளையை வாழவைப்பதாகும்.

5. அறிவிப்புப் பலகை, விளம்பரம் என எங்கேனும் எழுதி அறிவிக்க வேண்டும் என்றால் இயன்றவரைக்கும் தமிழில் எழுதுங்கள். ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்றாலும் கீழே தமிழிலும் எழுதி வையுங்கள். தமிழில் எழுதத் தேவையில்லை என்றாலும் எழுதுங்கள்.

6. பிள்ளைகளுக்கு, நிறுவனங்களுக்கு எனப் பெயரிட வேண்டிய நிலைமைகள் அனைத்திலும் நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டுங்கள். நாகரிகம், பிறர்நகைப்பு, பொதுப்போக்கு என எவற்றுக்கும் அஞ்சாமல் தமிழ்ப்பெயர்களையே ஆளுங்கள்.

7. பிள்ளைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியைத் தேர்ந்தெடுங்கள். இன்றைய சூழலில் அது இயலவில்லை என்றால் தமிழில் வெளிவரும் இதழ்கள், நூல்கள் என அவர்கள் படிப்பதற்கு வாங்கிக்கொடுங்கள். ஆங்கிலத்தில் கல்வி இருப்பினும் அன்றாடம் ஐந்தாறு பக்கங்களையேனும் நம் பிள்ளைகள் தமிழில் படித்து வளரட்டும்.

8. தமிழில் நன்கு செயல்படுகின்ற இணையத்தளங்கள், தமிழ்க் காணொளிகள், சமூக ஊடகவியலாளர்களின் பக்கங்கள் ஆகியனவற்றைத் தொடர்ந்து பாருங்கள், படியுங்கள். தமிழில் சிறப்பாகச் செயல்படுகின்ற ஒரே காரணத்திற்காக அவற்றுக்குக் கேள்வியின்றி விருப்பமிடுங்கள்.

9.. அன்றாடம் பத்து வரிகளேனும் எழுதப் பாருங்கள். தனியாக நாமே எண்ணி எழுதுவது கடினமாயிருப்பின் பிறருடைய எழுத்தாக்கங்களில், காணொளிகளில், என்வினவிக் குழுக்களில் உங்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருங்கள். நாளடைவில் உங்கள் மொழி செம்மையடைவதை உணர்வீர்கள்.

10. அடிக்கடி ஏதேனும் ஒரு தமிழ்ப்பாடலைப் பாடிக்கொண்டிருங்கள். அது தமிழ்ப்பாட்டாக இருக்க வேண்டும். முணுமுணுப்பாகக்கூட இருக்கலாம். அவ்வாறு பாடுவதால் மொழிமனம் பண்படும். சொல்லறிவு திறக்கும். திரைப்பாடலாயினும் சரி, வேறு பாடல்களாயினும் சரி, இப்போது உங்களுக்குப் பத்துப் பாடல்களேனும் மனப்பாடமாகத் தெரியவேண்டும்.

11. புதிய பொருள், புதிய செய்தி ஒன்றினைப் பிறர் வழியாகவோ, பிறமொழியிலோ, பிற இடங்கள் சென்றோ அறியக் கிடைத்தால் அதனை எப்பாடுபட்டேனும் தமிழில் பதியுங்கள். இன்றைய பாய்ச்சல் உலகில் தமிழ்வளம் சிறிதளவும் பின்தங்காதிருக்க இச்செயல்பாடு ஒன்றே உதவும்.

12. உங்களைச் சுற்றிலும் பாமர மக்கள், அடித்தட்டு வாழ்க்கையினர், தமிழ்மொழியை மட்டுமே அறிந்த மூத்தவர்கள் இருந்தால் அவர்களோடு நேரமெடுத்துப் பேசுங்கள். அவர்கள் வாய்மொழியில் வாழும் புதிய சொற்கள், கூறுமுறைகள், கருத்துகள் ஆகியனவற்றை மனத்தில் கொள்ளுங்கள். அவற்றினைப் பயன்படுத்துங்கள். பதிவு செய்யுங்கள்.

*- கவிஞர் மகுடேசுவரன்-நன்றி*

Wednesday, January 29, 2020

பாரம்பரியம்

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற    அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை

இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான் , குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது

அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது, ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது

மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது

இங்கு வெள்ளையன் வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது, சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை

வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான், வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டு சென்றான், அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது

தக்காளியும் உருளையும் அப்படி வந்ததே, புகையிலையும் அப்படி வந்ததே

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது, உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது

வெள்ளையன் சமையலுக்கு வற்றலை கொடுத்தான், வெற்றிலைக்கு பாக்கை கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினை திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்

தேங்காய் இருந்த இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிர் என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான்

நோய் பெருகின

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான், ஆப்பிளை மட்டுமா கொண்டுவந்தான். கேரட் , பீட்ரூட் இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களை கொண்டுவந்தான், அது அவனுக்கு சரி

ஏற்கனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகபோர்கள் அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கின, விளைவு தமிழருக்கு சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌

சப்பாத்தியினை கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை, சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடா உணவு

ஆம் அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ண தெரியாமல் உண்டான்

நோய் பெருகிற்று, அதாவது சூடான பூமியில் சூடு கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்க சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்கு தெரியும், அவன் தன் சமூகத்தை காத்துகொண்டிருக்கின்றான்

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது, இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது

எல்லாம் பழமைதனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெய்யும் கலப்படம், இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன பரிதாபம்

காரணம் அவற்றுக்கு உண்மையான பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல, ஆரோக்கியமில்லா உணவினை கொடுத்துவிட்டன‌

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசு கழகங்களே சொல்லும் நிலையென்றால் தனியார் நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று எதையோ குடித்து, எதையோ புகைத்து, எதையோ மென்று இல்லா நோய்கள் எல்லாவற்றையும் இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்

ஆப்ரிக்காவிலும் அரேபியாவிலும் காப்பி இருந்தது

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம் இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது, காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌

அவை இன்றியும் வாழமுடியும், அது போக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன, பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.

இவை பெருக பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.

இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை நம் ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் காணலாம்

நம் தெய்வங்களுக்கு பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை

தாம்பூல தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே

தேர்களில் தெய்வங்களுக்கு வீசபடும் மிளமும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் உணவினை பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாக தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை

துளசி போல் அருமருந்தில்லை

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களை கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் நோய்க்கு இடம் கொடா

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு, அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்

கருத்தரிப்பு சிக்கல் சிசேரியன் என மறுபுறம். மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்தால்  நல்வாழ்வு வாழ உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும், மாறாக அதெல்லாம் பழமை என ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைகாரனுமே உங்களுக்கு தெய்வமாவான்

இந்த தெய்வத்தையும் ஆலயத்தையும் அதன் அனுகிரகத்தையும் அந்த உணவு மற்றும் விரத முறைகளை மறந்தவனுக்கு அதுதான் கதி.

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக இந்தியா உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான்.

முன்னோர்களின் உணவு பழக்கத்தை மறக்க செய்தால் இங்கு நோய் கூடும் என்பதும் இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைகாடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு.

அது மிளகை திருடி வற்றலை கொட்டுவதில் தொடங்கி இன்றைய கே.எப்.சி வரை தொடர்கின்றது

நாம் பாரம்பரியத்தை மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது, அந்த பாரம்பரியம் சைவ ஆலயங்களின் வழிபாட்டிலும் இன்னும் பலவற்றிலுமே இருக்கின்றது

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்

மாறாக கண்டதையும் உண்டுவிட்டு தெரு தெருவாக கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் ஆகபோவது ஒன்றுமில்லை

நடக்க வேண்டியது முன்னோர்களின் வழித்தடத்தை நோக்கி, அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...
சிந்திப்போம்👍🏻

Tuesday, January 28, 2020

சம்மணம்

✅ சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

*சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*...

✅ நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*...

✅ இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

✅ *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*.

✅ *நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.

✅ *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.

✅ எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

✅ சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

✅ இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

✅ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*. எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

✅ கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

✅ சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

✅ சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

✅ *சாப்பிடும் முறை*...!
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...
14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

✅ *அமருங்கள் சம்மணமிட்டு*.

👉 அனைவருக்கும் பகிருங்கள். இது போல பயனுள்ள பதிவுகளுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும்.

Tuesday, January 21, 2020

Health

*ஆரோக்கிய மனம், உடல் கொண்ட வாழ்விற்கு:*

*1.காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்?* 

*பத்து நிமிடங்கள் முன்னதாக, 5.50க்கு எழுந்து பழகுங்கள்.*


கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.


*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*

நீங்கள் காலை தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* ஒரு நாளின் காலை, பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.


*3.முப்பது நிமிடங்கள்:*

ஒரு நாளின் காலை முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். *உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா* என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக *முப்பது நிமிடங்கள்* புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.


*4.உணவில் ஒழுங்கு:*

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். *முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.*


*5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:*

```Day Task.``` உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். *நினைத்த அனைத்தும் நடப்பதை* விரைவில் உணர்வீர்கள்.


*6.அடைசல்கள் அகற்றுங்கள்:*

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது *அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.*


*7.மனிதர்களை நெருங்குங்கள்:*

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை *நேசிக்கத் தொடங்குங்கள்.* எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.


*8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:*

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் *அடுத்தது என்ன* என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். ```(WHAT NEXT?)``` இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.


*9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:*

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே *நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.*


*11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:*

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை *புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.* அது தானாகவே பெருகும்.



*12.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:*

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். *நகைச்சுவை உணர்வு,* வாழ்வின் பூட்டப்பட்ட *பல கதவுகளைத் திறந்துவிடும்.*


*13.மனிதத்தன்மையே கடவுள்தன்மையின் ஆரம்பம்:*

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – 
மகிழ்ச்சியாய் – 
*வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில்*  பங்கெடுங்கள்...