I LOVE TAMIL


Saturday, June 27, 2020

நித்ய கல்யாணி என்னும் அருமருந்து மூலிகை!!!







Catharanthus roseus


நித்திய கல்யாணி ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை.
இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, என பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.
இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்தியக் கல்யாணி நாடியைச் சமப்படுத்தவும், சிறுநீர் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது.
புற்றுநோய்
இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.
நீரிழிவுநோய்
நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.
சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.
நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும்.

இயற்கை மருத்துவத்தில் பயன்தரும் நித்திய கல்யாணி!!


நன்றி : https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/delicious-palak-paneer-recipe-116111200018_1.html

-----------------------------------



பொதுவாக உலகிலுள்ள எல்லா செடிகளும், காய்களும், பூக்களும் ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் விரும்பும் ரோஜா பூக்கள். இவை ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். உலகிலுள்ள பெரும்பாலான தாவரங்களுக்கு இந்த விதி பொருந்தும். நித்திய கல்யாணி செடியோ எல்லா காலங்களிலும், எல்லா தட்ப வெட்பத்திலும் வளரும். இதன் அழகிய பூக்கள் அனுதினமும் பூத்துக் குலுங்குவதாலேயே இதற்கு நித்ய கல்யாணி என்ற பெயர் ஏற்பட்டது. "நித்ய(ம்) என்றால் தினமும் என்று பொருள், "கல்யாணி" என்றால் மலர்தல் என்ற பொருளைக் குறிக்கும்.





நித்தியகல்யாணி என்று அழைக்கப்படும் இந்த மலரைப்பற்றிய உண்மைகளையும், அருமருந்தாகிய இதன் தன்மைகளையும் நாம் இக்கட்டுரையில் காணலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த நித்ய கல்யாணியின் தாவரவியல் பெயர் காதரென்தஸ் ரோளியஸ்.

வகைகள்

இத்தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளதாக பெரிதும் அறியப்படுகின்றது. இத்தாவரவினம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவமாகவும் மேல்பகுதி மிகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இப்பூக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வின்கா ரோஸா என ஸ்பானிய மொழியிலும், பூட்டிகா என வெணிசுலாவிலும், டெரசிடா என மெக்சிகோவிலும் அழைக்கப்படுகின்றது.

மருத்துவ குணங்கள்

பல மருத்துவ குணங்கள் கொண்ட இதனை மலேசியர்கள் போகேக் "ரெம்புட் ஜலாங்" என்றும் "கெகுதிங் சினா" எனவும் பல்வேறு பெயர்களில் அழைப்பர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை சிட்சிரிக்கா எனவும், வியட்நாம் நாட்டில் ஹவா ஹாய் டாங் எனவும் அழைப்பர். பாரம்பரிய மருத்துவத்தில் தன்னிகரற்ற நாடான சீனாவில் இதனை "ச்சாங் சுன் ஹூவா" என அழைப்பர். பட்டிப்பூ என அழைக்கப்படும் இந்த மூலிகைத் தாவரத்திற்கு சீன மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது. தேவாமிர்தத்தை ஒத்த தேவமலர் என்று கொண்டாடப்படும் அளவிற்கு பல்வேறு அமிர்தகுணங்களைக் கொண்டது, இரண்டரை சென்டிமீட்டர் விட்டமுள்ள இந்த சின்னஞ்சிறு மலர். இது புற்று நோய்க்கான அருமருந்தாகும். இதன் மருத்துவதன்மை ஆஸ்துமா, குளிர் ஜுரம், இரத்தப்புற்றுநோய், நீரிழிவு நோய் (இது ஒரு நோயே அல்ல) உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் நோய்களை விரட்டுவது மட்டுமின்றி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை அடித்து விரட்டும் அமுதம். அதுமட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் நீக்கும் அமிர்த மருந்தாகும்.

மார்பகப் புற்றுநோய்

பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது. இவற்றிற்கு ஆங்கில மருத்துவத்தில் பல்வேறு கண்டறியும் முறைகள் உள்ளன. இந்த வகை புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நமது நித்தியகல்யாணியைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்தலாம். முதலில் இதற்கு நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும்.

செய்முறை 


நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும்.

இந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம். தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்று நோய் குணமாகும்.

கருப்பை புற்றுநோய்

கருப்பை புற்றுநோய் தற்காலத்தில் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் பற்றும் நோயாக இருக்கின்றது. இவ்வகை புற்று உண்டாவதற்கு பலவகை காரணிகள் கூறப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வகை புற்று நோய்கள் வந்தால் கருப்பையை அகற்றி விடுவதையே நிரந்தர தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை பாரம்பரிய வைத்தியமான நித்திய கல்யாணியின் துணை கொண்டு முழுபலன் பெற முடியும்.

பதினைந்து கிராம் அளவுள்ள நித்தியகல்யாணிப்பூக்கள் மற்றும் அறுநூறு மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு வேலைக்கு 100 மில்லி வரை குடிக்க வேண்டும். இதனை தினமும் நாள் தவறாமல் மூன்று வேளையும் நோய் தீரும் வரை குணமாகும் வரை குடிக்க வேண்டும்.

நிலையில்லா மாதவிடாய்

மாதவிடாய் என்று உலகின் எல்லா பெண்களுக்கு நிகழும் ஒரு மாதாந்திர சுழற்சியாகும். இது பொதுவாக மாதமொருமுறை நிகழும். இவ்வாறு காலம் தவறாமல் நிகழ்வது நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்பதை உறுதிபடுத்துகின்றது. இவ்வாறு மாதந்தவறாமல் நிகழும் மாதவிடாய் நாட்கள் தவறி நடக்க ஆரம்பிப்பது ஆபத்தின் அறிகுறியாகும். பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி 20 நாட்களோ அல்லது முப்பத்தைந்து முதல் நாற்பத்தைந்து நாட்களோ ஆனால் இது "நிலையற்ற மாதவிடாய்" என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நிகழும் முறையற்ற மாத விடாய் கோளாறுகளை முழுவதுமாக நீக்க நித்திய கல்யாணி என்னும் பேரமுதத்தை பயன்படுத்தலாம்.

நித்திய கல்யாணியின் வேரை இருபது கிராம் அளவிற்கு எடுத்து சுத்தப்படுத்தி அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். அந்த குடிநீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதை காலை மாலை இருவேளை 40 மில்லி முதல் 100 மில்லி வரை நோயின் தன்மைக்கேற்ப வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களது மாதவிடாய் சுழற்சி நேர்த்தியாகிவிடும்.

இரத்த சோகை

இதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட வியாதிதான். மற்றவர்களுக்கும் (ஆண்களுக்கும்) வருமென்றாலும் பிரசவித்த தாய்மார்களுக்கே அதிகம் வரும் ஒரு சத்துக்குறைவு நோயாகும். இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் அளவில் குறைந்து உடலின் பிற பகுதிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கொண்டு செல்ல இயலாமல் போய்விடும். இதனால் உடல் சோர்வு மயக்கம், முதலியவை ஏற்படும். பெண்களின் பிரசவத்தினால் ஏற்படும் இரத்த இழப்பினாலும் இந்த நோய் ஏற்படும்.

இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த நித்தியகல்யாணியின் நான்கு பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் முக்கி வைக்க வேண்டும். இதனை ஓர் இரவு காற்றோட்டமாக வைத்துவிட வேண்டும். காலையில் இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் குடித்த பின்னர் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் தேவைக்கேற்றபடி இதனை தொடரலாம்.

நீரிழிவு
இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய நோயாளிகள் குழாம் என்பது இந்த நீரிழிவு நோயாளிகள் தான். இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரழிவு நோய் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு நோயே அல்ல, உடலில் ஏற்படும் மாற்றங்களே. இரத்த சர்க்கரையின் அளவு உச்சமாக இருக்க அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளே நீரிழிவு நோயாகும். கணையத்தின் சுரப்பாகும் இன்சுலின் உடலுக்கு போதுமானதாக இல்லாமல் போவது தான் நீரிழிவு நோயாகும்.

இந்த நீரழிவு நோய்க்கு நித்தியகல்யாணியை சிறந்த மருந்தாக கொள்ளலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது.

நித்திய கல்யாணியின் ஆறு இலைகள் மற்றும் 15 பூக்களை 800 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டியவுடன், அதாவது 400 மில்லியானவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குடிநீரை பருகவேண்டும். இன்னொரு முறையில் இந்த நித்தியகல்யாணியின் 15 அல்லது 16 இலைகளை மட்டுமே கொதிக்க வைத்து, நீர் பாதியாக சுண்டியவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை இருவேளையும் நாள் தவறாமல் பருகவேண்டும்.

இரத்த புற்றுநோய்

இரத்த புற்று நோய் என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஒரு சிதை மாற்றமேயாகும். இவை பொதுவாக இரத்த வெள்ளையணுக்களின் அசாதாரண பெருக்கத்தால் அறியப்படுகின்றது.

இந்த புற்று நோயை நித்திய கல்யாணி இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் குணப்படுத்த இயலும். நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

ஆஸ்துமா

இது நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் நோயாகும். இதனால் மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாகும். சுவாசக் குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் தடித்தும், நுரையீரல் தசைகளில் ஏற்படும் வீக்கம் இவைகளே ஆஸ்துமா எனப்படுகின்றது. இந்நோயின் காரணமாக ஆண்டொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லட்சம் பேர் வரை இறக்கிறார்க
ள்.

இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

விஷ ஜுரம்

மிகக் கடுமையான நாட்பட்ட காய்ச்சலை குணமாக்கக்கூடியது இந்த நித்தியகல்யாணி. நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

மனநோய்கள்

அல்சீமர் என்று அழைக்கப்படுகின்ற நினைவு இழப்பு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகின்றது. இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

எச்சரிக்கை 

கருத்தரித்த தாய்மார்கள் நித்தியகல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது.





நன்றி : http://beauty-health-guide.blogspot.com/2018/06/blog-post_50.html

Tuesday, June 9, 2020

நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள

நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள

எதிர்மறை எண்ணங்கள் தோன்ற காரணமாக இருப்பது என்ன என்பதை கண்டறிந்து அதனை நீக்கி விட்டாலே போதும் Positive thoughts மனதில் உதயமாகிவிடும்.

எதிர்மறை எண்ணங்கள் உருவாக முக்கிய காரணம், தன்னம்பிக்கை இல்லாமை.

தன்னம்பிக்கை உருவாக உங்களை நீங்கள் பெருமையாகவும் கர்வமாகவும் எண்ணும்படி நடந்துகொள்ள வேண்டும்.எல்லா செயல்களையும் எல்லோராலும் செய்யமுடியும்.ஆனால் அப்படி முடிகிறதா? ஒரு சிலரே அதற்கு சாத்தியப்பட்டவர்களாக உள்ளனர், அந்த சிலர் தன்னமிக்கை கொண்ட பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

1. முதலில் எதையும் உங்களால் செய்ய முடியும் என்பதை வலுவாக நம்புங்கள். நம்பிக்கையூட்டும் வாசகங்களை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

2. எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்,எதையும் எதிர்கொள்ளலாம் என்ற பக்குவத்திற்கு மனதை ஆயத்தப்படுத்துங்கள்.

3. ஒரு விஷயத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் போது,உங்களது எண்ணங்களும் செயல்களும் உங்களது கட்டுபாட்டில் வருகிறது.

4. உன்னால் முடியாது,உனக்கு தகுதியில்லை போன்ற எதிர்மறையான பேச்சுக்களை பேசுபவரிடம் இருந்து தள்ளியிருங்கள்.

5. தினமும் உங்களை நினைத்து பெருமை கொள்ளும் ஏதோ ஒரு செயல்களை செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நேற்றைய தினத்தை விட இன்றைய தினத்தில் அதிக வேலை செய்யலாம். யாருக்காவது சிறுசிறு உதவிகள் செய்யலாம்.

6. மனதை திடமாக வைத்துக்கொள்ள யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

7. ஒரு எண்ணத்தை திரும்ப திரும்ப நினைக்கும் போது ஒரு நாளில் அது நடந்து விடும்.அது பாசிட்டிவான எண்ணங்களாக இருப்பின் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணங்கள் உங்களை வழிநடத்தும்.ஒரு நாளில் அது நடந்து விடுகிறது.

8. அதே எண்ணம் நெகட்டிவாக இருப்பின் இப்படி நடந்துவிடுமோ என்ற எண்ணத்திலே உங்களது செயல்களும் அதை நோக்கி நகரும் ஒரு கட்டத்தில் நடந்துவிட கூடும்.

Positive thoughts:எண்ணம் போலவே வாழ்க்கை என்பது 100% உண்மை.என்ன நினைக்கிறோமோ அந்த எண்ணமே மனதில் வலுவாகி எதிர்காலத்தில் நடக்க கூடும்.கீதையில் கூட ஒருவரி உண்டு,என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய்.ஆக,இனி வாழ்வில் எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளலாக இருக்கட்டும்....வாழ்த்துக்கள்..

Monday, May 11, 2020

சுடு தண்ணிர்

🌷 சுடு தண்ணிர்  🌹   

                          🍁 நமது சித்த மருத்துவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதிசய மருத்துவம்.

தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*

நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும். *

நமது சித்த மருத்துவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதிசய மருத்துவம்.

இதை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமானது மற்றும் சிலர் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.

சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.

1 மைக்கிரேன்

2 உயர் இரத்த அழுத்தம்

3 குறைந்த இரத்த அழுத்தம்

4 மூட்டு வலி

5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம்

10. கொலு வலி

11 ஆஸ்துமா

12 ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான 
நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

* சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *

தண்ணீர்  கொதிக்க கூடாது, தண்ணீர் குடிக்கும் அளவுக்கு சூடுபடுத்தி பயன்படுத்த வேண்டும். 

காலையில் எழுந்திருந்து, வயிற்று வயிற்றுக்குள் சுமார் 2 தம்ளர் சூடான நீரில் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர் குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள். 

*குறிப்பு:*
* தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம்.

சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -

30 நாட்களில் நீரிழிவு நோய்

30 நாட்களில் இரத்த அழுத்தம்

10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

10 நாட்களில் ஏராளமான பசி

10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

30 நாட்களில் இதய நோய்கள்

3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

4 மாதங்களில் கொழுப்பு

கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்

4 மாதங்களில் ஆஸ்துமா

குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

குளிர் நீர் 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.

இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீரில் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

* தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*

Thursday, April 30, 2020

எழுதி வையுங்கள்

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

காய்கறிச்
சந்தைகளாய் மாறிப்போன
*பேருந்து நிலையங்கள்.*!

நடமாடும்
மருத்துவ மனைகளாக
மாறிப்போன *ரயில் பெட்டிகள்.!*

கதவடைக்கப்பட்ட
*வழிப்பாட்டுத் தலங்கள்.!*

காக்கும் கடவுளர்களாக
உருவகம் கொண்ட
*மருத்துவப் பணியாளர்கள்.!*

தீண்டாமை ஒரு 
புண்ணியச் செயலென
மாற்றிய *நுண்ணுயிரி.!*

இருபது நபர்களுக்கு மிகாமல்
ஆடம்பரங்களின்றி நடந்த
*திருமணங்கள்.!*

சாலை விபத்துகள்
பற்றிய செய்திகளின்றி
வெளியாகிய *செய்தித்தாள்கள்.!*

காட்சிகள் காட்டாமல்
மூடப்பட்டிருந்த *திரையரங்குகள்.!*

சமையலறைக்குள்
தஞ்சமடைந்த *கணவன்கள்.!*

சீரியல்கள் தொல்லையின்றி
நல்ல முறையில் நேரம்
செலவழித்த *மனைவிகள்.!*

பரபரப்புகளில் ஓடித்திரிந்து
நிதானத்தை பழகிக்கொண்ட 
*இன்றைய தலைமுறையினர்.!*

தானாகவே
குறைந்துபோன *காற்றின் மாசு.!*

சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
*பறவைகள், விலங்குகள்.!*

பழங்கதைகள் பேசி
பல்லாங்குழி ஆடி குடும்பமாய்
மாறிய *குடும்பங்கள்.*!

இவற்றோடு...
ஆயிரம் கிலோமீட்டர்களை
பசியின் கொடுமையோடு
நடந்தே தாண்டிய *நாடோடி*
*உழைப்பாளிகளின் கால்கள்*

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

*தனிமை நாட்கள்-37*

Wednesday, April 22, 2020

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.*  
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.*  
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁

Wednesday, March 11, 2020

குறைவான செலவில் நிறைவாக வாழ்வது எப்படி?* - மினிமலிசம்

*குறைவான செலவில் நிறைவாக வாழ்வது எப்படி?* - மினிமலிசம்

மினிமலிசம் என்பது குறைவான பொருட்களுடன் வாழுதல்.

வீடு நிறைய பொருட்களை சேர்த்து வைத்தால் அதன்பின் பொருட்களுக்கு சேவை செய்தே வாழ்நாள் வீணாகிவிடும்.

நாலு பேர் இருக்கும் வீட்டில் 10- 20 தட்டுகள், 10- 20 டம்ளர்கள் புழக்கத்தில் இருப்பதை காணமுடியும். எப்போது பார்த்தாலும் கிச்சன் சிங் நிரம்பியே இருக்கும். பாத்திரம், கழுவி, கழுவி ஓய்ந்து
போய்விடுவார்கள் .

ஒரே தட்டை சாப்பிட்டுவிட்டு உடனே கழுவி வைத்தால், ஒரே டம்ளரில் நீரோ, காபியோ குடித்தவுடன் உடனே குடித்தவரே கழுவி வைத்தால் இத்தனை தட்டுகள் அவசியம் இல்லை.

"எப்போதாவது பயன்படும்" என நினைத்து சிங்கிள் பயன்பாட்டுக்கு வாங்கும் பொருட்களை கூட தூக்கிவீசாமல் பாதுகாத்து வைத்து (பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கன்டெய்னர்) கடைசியில் அலமாரிகள் நிரம்பிவழிவதுதான் மிச்சம்.

வீட்டில் 20 தட்டு, 20 டம்ளர் இருந்தால் 10 தட்டு, 10 டம்ளரை எடுத்து மறைத்துவைக்கவும். அவை காணாமல் போனதே யாருக்கும் தெரியாது. 

பல பொருட்கள் இப்படித்தான்...

ஒரு அறை சும்மா இருந்தா நமக்கு பிடிக்காது

"அந்த சுவர் காலியா இருக்கு. ஒரு பெயிண்டிங் மாட்டுவோம். அந்த கார்னர் காலியா இருக்கு. ஒரு பூச்செடி வைப்போம்.."

அதன்பின் ஆணி, பெயிண்டிங், பூச்செடிக்கு தண்ணி, போட்டோவை கழுவுவது துடைப்பது. என வேலைகள் கூடும்.

வீடு காலியாக இருப்பது தான் இருப்பதிலேயே சிறந்த அழகு.

வீடு முழுக்க பொருள், வீடு சுத்தமாவே இல்லை, வேலை தீரவே இல்லை.. என புலம்பினால் அதுக்கு காரணம் பொருட்களை இப்படி  தேவைக்கு அதிகமாக வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துக்
கொள்வதுதான் காரணம்.

பொருட்களுக்கு சேவை செய்தே நம் வாழ்நாள் கழிந்துவிடுகிறது.

``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார். ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’

இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.

இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ் ஐ.டி பசங்க! தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என வாழ்வில் எல்லாமே ஓகேதான். ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள். வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது. வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில் எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள். மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட நொடியில் `மினிமலிசம்’ என்கிற கான்செப்ட் பிறக்கிறது.

இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை என்கிற கருத்து பரவி வருகிறது.  உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம். 

இந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும். 2009 தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.

மினிமலிஸம் என்றாலே கஞ்சப்பிசினாரியாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை. மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும். இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.

அதென்ன அவசியமில்லா நுகர்வு? நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவிக்கிற பயன்படுத்து கிற எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.

``மினிமலிஸ்டுகள் குறைவு, குறைவு, குறைவு என வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ என்பது ஜோஷூவாவின் கருத்து. மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு மினிமலிஸம். இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின் வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான். வாரன் பஃபெட் நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார். 1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். ‘`தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்’’ என்கிறார் பஃபெட்.  அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும். 

மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன? ஜோஷுவாவே சில விஷயங்களை எழுதியிருக்கிறார்.

1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல். - மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான். நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

2 -  குறைவான பொருள்களில் வாழ்வது - வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்... அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே 
மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.

3 - வருங்காலத்திற்குத் திட்டமிடல் - மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.

4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது - எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன் இது எனக்கு அவசியம்தானா... இது இல்லாமல் வாழ முடியுமா... முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல் இருந்தால் மட்டும் வாங்குவது.

5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது - உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர் களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா. மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள் அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.

இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும் கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழவும் உதவும். இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும் சிறப்பாக வாழமுடிந்தது.  "மினிமலிசம் என்றாலே எல்லோரும் நினைக்கிறார்கள், நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் குறைத்துக்கொள்வது என்று. உடை, கருவிகள். நுகர்வுப் பொருட்கள் என்று எல்லாவற்றையும். Always make less. ஆனால், நாங்கள் சொல்கிறோம் மினிமலிச வாழ்வியல் உங்களுக்கு வாழ்க்கையில் பலவற்றைப் பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பைத் தருகிறது. நிறைய நேரம், நிறைய படைப்புத்திறன், நிறைய சுதந்திரம். தேவையற்றதும் ஆடம்பரமானதும் உங்கள் மீது திணிக்கப்படுபவையுமான பொருட்களைச் சேர்த்துக்கொண்டே இருக்கும் இந்த நுகர்வுக் கலாச்சார வாழ்க்கைக்காக உழைப்பதின் மூலமும் ஓடிக்கொண்டே இருப்பதன் மூலமும் நீங்கள் இழப்பது உங்கள் நேரத்தையும் சுதந்திரத்தையும் படைப்புத்திறனையும்தான். மினிமலிச வாழ்வியல் இவற்றை நிறையவே உங்களுக்குப் பெற்றுத்தரும்" 

இதை நீங்களும் கடை பிடித்து , உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். அவர்களையும் நிறைவான வாழ்க்கைக்கு பழக்க படுத்துங்கள்

Saturday, February 22, 2020

தமிழ் தாய் மொழி


World Language Day _ February 21

*உலகத் தாய்மொழி தினம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.*

1. முடிந்தவரை ஆங்கிலச் சொல் தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்களை நீங்களே உருவாக்குங்கள். அது ஓரளவுக்குத்தான் பொருந்தும் என்றாலும் பழுதில்லை. எல்லாச் சொற்களும் நூறு விழுக்காடு பொருந்தி வரவேண்டியதில்லை.

2. வடமொழி உள்ளிட்ட பிறமொழிச் சொற்களை இயன்றவரை தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். தொடக்கத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் மிகவும் இயல்பாகிவிடும்.

3. முடிந்தவரை நல்ல தமிழில் பிழையில்லாமல் எழுதுங்கள். பிழை நேர்ந்துவிடுமே என்ற அச்சத்தால் எழுதாமலும் இருந்துவிடாதீர்கள். எழுதிக்கொண்டே இருக்கையில்தான் நம்முடைய பிழைகள் தெரியவரும். அவற்றினைக் கண்டறிந்து நீக்கிக் கொள்ளலாம். துணிந்து எழுதுவதும் பிறகு உரிய பிழைகளைக் களைவதும் இரட்டைச் செயல்பாடுகள்.

4. பொதுத்தமிழ்ப் பேச்சுமுறைக்கு வாராமல் முடிந்தவரை உங்களுடைய வட்டார வழக்கில் பேசிக்கொண்டிருங்கள். அதனை இழிவாகக் கருதாதீர்கள், பெருமையாகக் கருதுங்கள். வட்டார வழக்கில் இன்னும் கண்டறியப்படாத அருஞ்சொற்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வட்டார வழக்கினை வாழவைப்பது மொழியின் ஒரு கிளையை வாழவைப்பதாகும்.

5. அறிவிப்புப் பலகை, விளம்பரம் என எங்கேனும் எழுதி அறிவிக்க வேண்டும் என்றால் இயன்றவரைக்கும் தமிழில் எழுதுங்கள். ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்றாலும் கீழே தமிழிலும் எழுதி வையுங்கள். தமிழில் எழுதத் தேவையில்லை என்றாலும் எழுதுங்கள்.

6. பிள்ளைகளுக்கு, நிறுவனங்களுக்கு எனப் பெயரிட வேண்டிய நிலைமைகள் அனைத்திலும் நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டுங்கள். நாகரிகம், பிறர்நகைப்பு, பொதுப்போக்கு என எவற்றுக்கும் அஞ்சாமல் தமிழ்ப்பெயர்களையே ஆளுங்கள்.

7. பிள்ளைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியைத் தேர்ந்தெடுங்கள். இன்றைய சூழலில் அது இயலவில்லை என்றால் தமிழில் வெளிவரும் இதழ்கள், நூல்கள் என அவர்கள் படிப்பதற்கு வாங்கிக்கொடுங்கள். ஆங்கிலத்தில் கல்வி இருப்பினும் அன்றாடம் ஐந்தாறு பக்கங்களையேனும் நம் பிள்ளைகள் தமிழில் படித்து வளரட்டும்.

8. தமிழில் நன்கு செயல்படுகின்ற இணையத்தளங்கள், தமிழ்க் காணொளிகள், சமூக ஊடகவியலாளர்களின் பக்கங்கள் ஆகியனவற்றைத் தொடர்ந்து பாருங்கள், படியுங்கள். தமிழில் சிறப்பாகச் செயல்படுகின்ற ஒரே காரணத்திற்காக அவற்றுக்குக் கேள்வியின்றி விருப்பமிடுங்கள்.

9.. அன்றாடம் பத்து வரிகளேனும் எழுதப் பாருங்கள். தனியாக நாமே எண்ணி எழுதுவது கடினமாயிருப்பின் பிறருடைய எழுத்தாக்கங்களில், காணொளிகளில், என்வினவிக் குழுக்களில் உங்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருங்கள். நாளடைவில் உங்கள் மொழி செம்மையடைவதை உணர்வீர்கள்.

10. அடிக்கடி ஏதேனும் ஒரு தமிழ்ப்பாடலைப் பாடிக்கொண்டிருங்கள். அது தமிழ்ப்பாட்டாக இருக்க வேண்டும். முணுமுணுப்பாகக்கூட இருக்கலாம். அவ்வாறு பாடுவதால் மொழிமனம் பண்படும். சொல்லறிவு திறக்கும். திரைப்பாடலாயினும் சரி, வேறு பாடல்களாயினும் சரி, இப்போது உங்களுக்குப் பத்துப் பாடல்களேனும் மனப்பாடமாகத் தெரியவேண்டும்.

11. புதிய பொருள், புதிய செய்தி ஒன்றினைப் பிறர் வழியாகவோ, பிறமொழியிலோ, பிற இடங்கள் சென்றோ அறியக் கிடைத்தால் அதனை எப்பாடுபட்டேனும் தமிழில் பதியுங்கள். இன்றைய பாய்ச்சல் உலகில் தமிழ்வளம் சிறிதளவும் பின்தங்காதிருக்க இச்செயல்பாடு ஒன்றே உதவும்.

12. உங்களைச் சுற்றிலும் பாமர மக்கள், அடித்தட்டு வாழ்க்கையினர், தமிழ்மொழியை மட்டுமே அறிந்த மூத்தவர்கள் இருந்தால் அவர்களோடு நேரமெடுத்துப் பேசுங்கள். அவர்கள் வாய்மொழியில் வாழும் புதிய சொற்கள், கூறுமுறைகள், கருத்துகள் ஆகியனவற்றை மனத்தில் கொள்ளுங்கள். அவற்றினைப் பயன்படுத்துங்கள். பதிவு செய்யுங்கள்.

*- கவிஞர் மகுடேசுவரன்-நன்றி*