I LOVE TAMIL


Monday, August 17, 2009

கலப்பு மின்சாரம்

கலப்பு மின்சாரம்

"கலப்பு பொருளாதாரம்' என்று பொருளாதார துறையில் பேசுவது போல ஆற்றல் உற்பத்தி துறையில் "கலப்பு மின்சாரம்' என்ற கருத்தினை சுற்றுச்சூழல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர். எல்லா வகையான மின்சார உற்பத்தி முறை களிலும் நிறைகளும் குறைகளும் பொருளாதாரக் காரணிகளும் இருப்பதால் கலப்பு மின்சார உற்பத்தியே தற்போதைய தேவை என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். நீர் மின்சார உற்பத்தியில் ஒரு மெகாவாட் உற்பத்தி செய்ய ரூ.ஒரு கோடி செலவாகிறது. சூரிய ஒளியின் மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.10 கோடி முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அனைத்து நாட்களிலும் சூரிய ஒளி கிடைப்பது இல்லை என்பதால் திருப்பதியில் சூரிய ஆற்றல், காற்றைப் பயன்படுத்தி "கலப்பு மின்சாரம்' தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 200 நாட்கள் சூரிய ஒளியை பயன்படுத்தியும், மீதி நாட்கள் காற்றைப் பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


Source : www.dinamalar.com - 17.08.2009