I LOVE TAMIL


Tuesday, December 15, 2009

தலையங்கம்: எச்சரிக்கை அவசியம்

வ ளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் நட​வ​டிக்​கைக்​கான பரு​வ​நிலை மாநாடு கோபன்​ஹே​க​னில் தொடங்கி ஒரு​வா​ரம் முடிந்த நிலை​யில்,​​ சிறு​சிறு காய்​ந​கர்த்​தல்​க​ளைச் செய்​துள்​ளன வள​ரும் நாடு​கள்.​ அதா​வது,​​ கரி​ய​மில வாயு உள்​ளிட்ட பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் அள​வு​க​ளில் கொஞ்​சம் முன்​பின் இருந்​தா​லும் அவை சரி​பார்க்​கப்​ப​டும் என்​ப​தும் இதில் ஒன்று.​
192 நாடு​க​ளின் பிர​தி​நி​தி​கள் பங்கு கொண்​டுள்ள இந்த மாநாட்​டில்,​​ 77 வள​ரும் நாடு​கள் உள்​ளன.​ வள​ரும் நாடு​கள் தங்​கள் பகு​தியி​லி​ருந்து பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைப்​பது என்​றால்,​​ அதற்​கா​கச் சில தொழில்​து​றை​யி​லும்,​​ அனல் மின்​உற்​பத்​தி​யி​லும் சில மாற்​றங்​க​ளைச் செய்​தாக வேண்​டும்.​ இந்​தத் தொழில்​நுட்ப மாற்​றத்​துக்​காக 1000 கோடி டாலர்​கள் உதவி செய்​வ​தாக ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.​
இந்​தத் தொகை மிகச் சொற்​ப​மா​னது என்று வள​ரும் நாடு​கள் கருத்​துத் தெரி​வித்​துள்​ளன.​ உண்​மை​யைச் சொல்​வ​தென்​றால்,​​ இந்த எதிர்ப்​பின் அள​வைத் தெரிந்​து​கொள்​ளத்​தான் ​ அவர்​கள் இதைத் தெரி​விக்​கி​றார்​கள்.​ எதிர்ப்​பின் அள​வைப் பொருத்து,​​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட வளர்ந்த நாடு​கள் தங்​கள் பங்​குத்​தொ​கையை மேலும் அதி​க​ரித்து,​​ வள​ரும் நாடு​களை நிர்​பந்​திக்​கும்.​ அதற்​கான முதல்​பே​ரம்​தான் இந்த 1000 கோடி டாலர்.​ இது மேலும் உய​ரும் என்​பது நிச்​ச​யம்.​
இதை அறி​வித்​துள்ள ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணைய இயக்​கு​நர் கார்ல் ஃபால்​கன்​பெர்​ஜர் வேறொரு விஷ​யத்​தை​யும் குறிப்​பிட்​டுள்​ளார்.​ அதா​வது,​​ "இந்த மாநாட்​டில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது பங்​குக்​குக் குறைக்​கப் போகும் பசு​மை​இல்ல வாயுக்​கள் அள​வு​க​ளில் சிறு மாறு​பா​டு​கள் இருந்​தா​லும் பர​வா​யில்லை.​ ஆனால் அவற்றை அந்​நா​டு​கள் சொன்​ன​படி செய்​கின்​ற​னவா என்று சரி​பார்க்க வேண்​டி​யது கட்​டா​ய​மா​கும்' என்று கூறி​யுள்​ளார்.​ சரி​பார்ப்​பது என்​ப​தன் வெளிப்​ப​டை​யான பொருள்-​ சொன்​ன​படி செய்​ய​வில்லை என்​றால் இந்த நிதியை நிறுத்​தி​வி​டு​வோம் என்ற மிரட்​டல்​தான்.​
வளி​மண்​ட​லத்​தில் பெரும்​ப​கு​தியை மாசு​ப​டுத்​திய நாடு​கள் வளர்ந்த நாடு​கள்​தான்.​ பல ஆண்​டு​க​ளாக இதைச் செய்​து​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைக் ​ கட்​டுப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் பல​வி​த​மாக முயல்​கின்​ற​னர்.​ 1990-ம் ஆண்டு முத​லாக மாசு​ப​டுத்தி வரும் இந்த வளர்ந்த நாடு​கள்,​​ தற்​போது தொழில்​நுட்​பத்​தின் உத​வி​யால் இந்த மாசு அள​வைக் குறைத்​துக் கொண்​டுள்​ள​தா​கக் கூறு​கின்​றன.​ கியோட்டோ தீர்​மா​னத்​தின்​படி மாசு​அ​ள​வைக் குறைப்​ப​தில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது மாசு அளவை 1990-ம் ஆண்​டின் அள​வுப்​படி நிர்​ண​யிக்க வேண்​டும் என்று குறிப்​பிட்​டி​ருந்​தா​லும்,​​ அமெ​ரிக்கா தனது அளவை 2005-ம் ஆண்டு அள​வின்​படி 17 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்​தத் தன்​னிச்​சை​யான அறி​விப்​பைத் தொடர்ந்து சீனா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 40 சத​வீ​தம் வரை ​(2005-ம் ஆண்டு அள​வுப்​படி)​ குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​தது.​
இந்த இரு நாடு​க​ளை​யும் தொடர்ந்து இந்​தி​யா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 20-25 சத​வீ​தம் ​(அமெ​ரிக்கா,​​  சீனா வழி​யில் 2005-ம் ஆண்டு அள​வின்​படி)​ படிப்​ப​டி​யா​கக் குறைத்​துக்​கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்த அறி​விப்​பைச் செய்​த​வர் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்.​ மாநாட்​டில் கலந்​து​கொண்டு பேசும்​முன்​பா​கவே இத்​த​கைய அறி​விப்பை அமைச்​சர் செய்​த​தற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து,​​ இந்த மாநாட்​டில் கலந்​து​கொள்​ள​வி​ருந்த குழு உறுப்​பி​னர்​கள் இரு​வர் தங்​கள் பய​ணத்தை ரத்து செய்​து​விட்​ட​னர்.​
இந்​தி​யத் தேவை​கள்,​​ இந்​தி​யா​வின் தொழில்​வ​ளர்ச்சி,​​ இங்​குள்ள தொழில்​நுட்​பம்,​​ மக்​கள்​தொகை அனைத்​தை​யும் கணக்​கில் கொண்டு மாநாட்​டில் பேச​வும்,​​ தனக்​கான அளவை நிர்​ண​யிக்​க​வும்,​​ வளர்ந்த நாடு​கள் வழங்​க​வுள்ள உத​வித்​தொ​கையை அதி​க​மா​கப் பெறு​வ​தும்​தான் இந்​தி​யா​வின் முழு நோக்​க​மாக இருக்க வேண்​டுமே தவிர,​​ அமெ​ரிக்கா,​​ சீனாவை அடி​யொட்டி இந்​தி​யா​வும் நடப்​பது சரி​யா​ன​தாக இருக்க முடி​யாது.​ ​
இந்​தி​யா​வுக்​குக் குரல் கொடுக்க வேண்​டிய அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்,​​ இம​ய​ம​லை​யில் பனிப்​பா​றை​கள் வேக​மாக உரு​கு​வ​தற்​கும் பரு​வ​நிலை மாறு​பாட்​டுக்​கும் தொடர்​பில்லை என்று பேசி,​​ பனிப்​பாறை வளர்​வ​தும்,​​ உரு​கித் தேய்​வ​தும் சுழற்சி அடிப்​ப​டை​யில் நடப்​பவை என்று விளக்​க​மும் கூறி​யி​ருக்​கி​றார்.​ இயற்கை ஆர்​வ​லர்​க​ளின் கோபத்​துக்கு ஆளா​கி​யி​ருக்​கி​றார்.​ நம் அமைச்​சர் இப்​ப​டி​யெல்​லாம் பேசு​வ​தைப் பார்த்​தால் நாம்,​​ வளர்ந்த நாடு​க​ளால் ஏமாற்​றப்​பட்​டு​வி​டு​வோமோ என்ற அச்​சம் ஏற்​ப​டு​கி​றது.​ இந்​தியா இரண்டு விஷ​யங்​க​ளில் மிகத் தெளி​வாக இருக்க வேண்​டும்.​
 முத​லா​வ​ தாக,​​ இந்​தி​யா​வின் பசு​மை​இல்ல வாயு வெளி​யேற்​றத்​தைச் சரி​பார்த்​தல் என்​கிற பெய​ரில் அன்​னி​யர்​கள் புகுந்து மேலாண்மை செய்​வதை ஒரு போதும் ஒப்​புக்​கொள்​ளக்​கூ​டாது.​ அதிக உத​வித்​தொகை,​​ சலுகை என்ற பெய​ரில் ஆசை​வார்த்தை காட்​டி​னா​லும் அதற்கு இந்​தியா உடன்​ப​டக்​கூ​டாது.​ அமெ​ரிக்​கா​விலோ அல்​லது சீனா​விலோ நாம் போய் சரி​பார்க்​கும் பணியை மேற்​கொண்​டால் அனு​ம​திப்​பார்​களா என்​பதை யோசிக்க வேண்​டும்.​
இரண்​டா​வ​தாக,​​ வளி​மண்​ட​லம் மாசு​பட்​டதை கணக்​கி​டும்​போது,​​ அந்​தந்த நாட்​டின் மக்​கள் தொகை​யை​யும் கணக்​கில் கொள்ள வேண்​டும்.​ ஏற்​கெ​னவே சொர்க்​க​போ​கத்​தில் இருக்​கும் குறைந்​த​பட்ச அமெ​ரிக்​கர்​க​ளுக்​காக,​​ மக்​கள் தொகை அதி​கம் கொண்ட இந்​தி​யா​வில் 100 கோடி இந்​தி​ய​ரும் தங்​கள் செüக​ரி​யங்​க​ளைத் தியா​கம் செய்ய வேண்​டும் என்று வற்​பு​றுத்​து​வது நியா​ய​மற்​றது.​ இந்​தி​யா​வில் நதி​கள் மாசு​பட்​ட​தற்​கும்,​​ வளி மாசு​பட்​ட​தற்​கும் கார​ணம்,​​ அதி​கப் பணம் கிடைக்​கி​றது என்​ப​தால் வளர்ந்த நாடு​க​ளுக்கு ஏற்​று​மதி செய்​வ​தற்​காக மேற்​கொண்ட தொழில்​க​ளால் ஏற்​பட்​ட​வை​தான்.​ வளர்ந்த நாடு​க​ளுக்​குத் தேவை​யான,​​ ஆனால் ​ அந்​நாட்டு இயற்​கைக்​குப் பாத​க​மான தொழில்​கள் அனைத்​தை​யும் வள​ரும் நாடு​க​ளுக்​குத் தள்​ளி​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைப் பல​வந்​தப்​ப​டுத்​து​கின்​ற​னர்.​ இதைப் புரிந்​து​கொண்டு செயல்​பட வேண்​டும்.​
அமெ​ரிக்​கா​வி​டம் நல்ல பெயர் கிடைக்​கும் என்​ப​தற்​காக அவர்​கள் மனம்​நோ​காத படி நடப்​ப​தால் இந்​தி​யர்​க​ளுக்கு எந்​த​வித நன்​மை​யும் கிடைக்​காது.​ இன்​னும் ஒரு வாரம் இருக்​கி​றது.​ தெளி​வா​க​வும்,​​ முன்​யோ​ச​னை​யு​டன்,​​ எச்​ச​ரிக்​கை​யு​டன் செயல்​ப​டு​வது அவ​சி​யம்.


நன்றி: www.dinamani.com - 14 Dec 2009 


No comments: