I LOVE TAMIL


Wednesday, December 23, 2009

புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு


கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது.​ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள்,​​ அமைப்புகள்,​​ இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம்.​ ​ மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது.​ இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால்,​​ ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும்,​​ முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான்.​ அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.​ உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது.​ ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது,​​ சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது;​ பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால்,​​ அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது.​ உலக நாடுகள் அனைத்தையும்,​​ ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் -​ கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும்,​​ வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால்,​​ அவற்றோடு சேர்ந்து பூமிக்கும்,​​ கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது.​ இவை ​ -​ நிலக்கரியும்,​​ பெட்ரோலியப் பொருள்களும் -​ சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம்,​​ காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது.​ இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் ​ பெருக்கின.​ இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின.​ கூடவே,​​ காடுகள் அழிக்கப்பட்டதும்,​​ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும்,​​ அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும்,​​ பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன.​ உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று,​​ நீர்,​​ அனைத்தும் ​ மாசுபட்டன;​ ​ மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின.​ வளர்ச்சியும்,​​ முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால்,​​ சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும்,​​ அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் ​ வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது.​ பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து,​​ மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது.​ பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின.​ இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால்,​​ மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை ​ எழுந்தது.​ ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி,​​ அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.​ இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.​ இதையடுத்து ஐ.நா.​ முயற்சியில் 1989,​ 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.​ கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள்,​​ கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா.​ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் ​ உருவாக்கப்பட்டன.​ ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும்,​​ 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன.​ தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது.​ இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா.​ 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா.​ கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது.​ புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும்,​​ இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்;​ வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால்,​​ அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ,​​ கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது;​ ​ என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள்,​​ வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி,​​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது.​ இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன.​ ​ இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.​ இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து -​ இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் -​ வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.​ இந்த 1992-ன் ஐ.நா.​ கோட்பாடு,​​ உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும்,​​ இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது.​ இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா.​ எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.எனினும்,​​ இந்த ஐ.நா.​ கோட்பாடு அடுத்தடுத்த ​ பேச்சுவார்த்தைகளுக்கும்,​​ மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.​ புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும்,​​ உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக,​​ சிறு தீவு நாடுகள்;​ தாழ்நிலைக் கடலோர நாடுகள்;​ சதுப்பு நிலம்,​​ காடுகள் நிறைந்த நாடுகள்;​ ​ ​ இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்;​ வறட்சி -​ பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்;​ நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்;​ எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்;​ எரிபொருள்களை ​(நிலக்கரி,​​ எண்ணெய்)​ எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள்,​​ சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது;​ வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா.​ கோட்பாட்டுக்கு,​​ வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது.​ ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும்,​​ 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் ​ சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது.​ 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு,​​ வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் ​(கரியமில வாயு)​ வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது.​ 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே,​​ புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ ​ உடன்பாட்டின் மையக் கோட்பாடு.​ இதுவே பொதுவான -​ ஆனால் பாகுபடுத்தப்பட்ட -​ பொறுப்புகள் என்று அறியப்பட்டது.​ இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா ​ இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி,​​ இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது.​ இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும்,​​ வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து,​​ கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும்,​​ கோபன்ஹேகனில் குழுமி,​​ ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு,​​ "பூமண்டலம் காப்போம்;​ ​ புவிவெப்பம் ​ தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று,​​ ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது.​ ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ,​​ சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ​ ஏற்க மறுத்தார்.தனிநபர் சராசரிக் கணக்கில்,​​ இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா,​​ தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல்,​​ வளரும் நாடுகள் -​ குறிப்பாக சீனாவும் இந்தியாவும் -​ கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது;​ ​ அது மட்டுமல்ல,​​ வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.வளரும் நாடுகள் ஜி -​ 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.சர்வதேச நிதி நெருக்கடியின்போது,​​ வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது.​ கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில்,​​ அமெரிக்காவையும்,​​ வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.​ ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,​​ பிரேசில்,​​ தென்ஆப்பிரிக்கா,​​ இந்தியா,​​ சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன;​ ​ இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.​ கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது,​​ 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே,​​ கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள்.​ இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள ​(கரியமில வாயு ​ குறைப்புக்கான)​ பொறுப்பு என்பது,​​ வளரும் நாடுகளான இந்தியா -​ சீனாவோ,​​ இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் -​ ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல்.​ கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக,​​ சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. ​பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 -​ 2012-ல் 3000 கோடி டாலரும்,​​ 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.​ ஆனால்,​​ கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!

நன்றி: www.dinamani.com - 23.12.2009 

Tuesday, December 15, 2009

தலையங்கம்: எச்சரிக்கை அவசியம்

வ ளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் நட​வ​டிக்​கைக்​கான பரு​வ​நிலை மாநாடு கோபன்​ஹே​க​னில் தொடங்கி ஒரு​வா​ரம் முடிந்த நிலை​யில்,​​ சிறு​சிறு காய்​ந​கர்த்​தல்​க​ளைச் செய்​துள்​ளன வள​ரும் நாடு​கள்.​ அதா​வது,​​ கரி​ய​மில வாயு உள்​ளிட்ட பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் அள​வு​க​ளில் கொஞ்​சம் முன்​பின் இருந்​தா​லும் அவை சரி​பார்க்​கப்​ப​டும் என்​ப​தும் இதில் ஒன்று.​
192 நாடு​க​ளின் பிர​தி​நி​தி​கள் பங்கு கொண்​டுள்ள இந்த மாநாட்​டில்,​​ 77 வள​ரும் நாடு​கள் உள்​ளன.​ வள​ரும் நாடு​கள் தங்​கள் பகு​தியி​லி​ருந்து பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைப்​பது என்​றால்,​​ அதற்​கா​கச் சில தொழில்​து​றை​யி​லும்,​​ அனல் மின்​உற்​பத்​தி​யி​லும் சில மாற்​றங்​க​ளைச் செய்​தாக வேண்​டும்.​ இந்​தத் தொழில்​நுட்ப மாற்​றத்​துக்​காக 1000 கோடி டாலர்​கள் உதவி செய்​வ​தாக ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.​
இந்​தத் தொகை மிகச் சொற்​ப​மா​னது என்று வள​ரும் நாடு​கள் கருத்​துத் தெரி​வித்​துள்​ளன.​ உண்​மை​யைச் சொல்​வ​தென்​றால்,​​ இந்த எதிர்ப்​பின் அள​வைத் தெரிந்​து​கொள்​ளத்​தான் ​ அவர்​கள் இதைத் தெரி​விக்​கி​றார்​கள்.​ எதிர்ப்​பின் அள​வைப் பொருத்து,​​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட வளர்ந்த நாடு​கள் தங்​கள் பங்​குத்​தொ​கையை மேலும் அதி​க​ரித்து,​​ வள​ரும் நாடு​களை நிர்​பந்​திக்​கும்.​ அதற்​கான முதல்​பே​ரம்​தான் இந்த 1000 கோடி டாலர்.​ இது மேலும் உய​ரும் என்​பது நிச்​ச​யம்.​
இதை அறி​வித்​துள்ள ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணைய இயக்​கு​நர் கார்ல் ஃபால்​கன்​பெர்​ஜர் வேறொரு விஷ​யத்​தை​யும் குறிப்​பிட்​டுள்​ளார்.​ அதா​வது,​​ "இந்த மாநாட்​டில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது பங்​குக்​குக் குறைக்​கப் போகும் பசு​மை​இல்ல வாயுக்​கள் அள​வு​க​ளில் சிறு மாறு​பா​டு​கள் இருந்​தா​லும் பர​வா​யில்லை.​ ஆனால் அவற்றை அந்​நா​டு​கள் சொன்​ன​படி செய்​கின்​ற​னவா என்று சரி​பார்க்க வேண்​டி​யது கட்​டா​ய​மா​கும்' என்று கூறி​யுள்​ளார்.​ சரி​பார்ப்​பது என்​ப​தன் வெளிப்​ப​டை​யான பொருள்-​ சொன்​ன​படி செய்​ய​வில்லை என்​றால் இந்த நிதியை நிறுத்​தி​வி​டு​வோம் என்ற மிரட்​டல்​தான்.​
வளி​மண்​ட​லத்​தில் பெரும்​ப​கு​தியை மாசு​ப​டுத்​திய நாடு​கள் வளர்ந்த நாடு​கள்​தான்.​ பல ஆண்​டு​க​ளாக இதைச் செய்​து​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைக் ​ கட்​டுப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் பல​வி​த​மாக முயல்​கின்​ற​னர்.​ 1990-ம் ஆண்டு முத​லாக மாசு​ப​டுத்தி வரும் இந்த வளர்ந்த நாடு​கள்,​​ தற்​போது தொழில்​நுட்​பத்​தின் உத​வி​யால் இந்த மாசு அள​வைக் குறைத்​துக் கொண்​டுள்​ள​தா​கக் கூறு​கின்​றன.​ கியோட்டோ தீர்​மா​னத்​தின்​படி மாசு​அ​ள​வைக் குறைப்​ப​தில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது மாசு அளவை 1990-ம் ஆண்​டின் அள​வுப்​படி நிர்​ண​யிக்க வேண்​டும் என்று குறிப்​பிட்​டி​ருந்​தா​லும்,​​ அமெ​ரிக்கா தனது அளவை 2005-ம் ஆண்டு அள​வின்​படி 17 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்​தத் தன்​னிச்​சை​யான அறி​விப்​பைத் தொடர்ந்து சீனா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 40 சத​வீ​தம் வரை ​(2005-ம் ஆண்டு அள​வுப்​படி)​ குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​தது.​
இந்த இரு நாடு​க​ளை​யும் தொடர்ந்து இந்​தி​யா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 20-25 சத​வீ​தம் ​(அமெ​ரிக்கா,​​  சீனா வழி​யில் 2005-ம் ஆண்டு அள​வின்​படி)​ படிப்​ப​டி​யா​கக் குறைத்​துக்​கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்த அறி​விப்​பைச் செய்​த​வர் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்.​ மாநாட்​டில் கலந்​து​கொண்டு பேசும்​முன்​பா​கவே இத்​த​கைய அறி​விப்பை அமைச்​சர் செய்​த​தற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து,​​ இந்த மாநாட்​டில் கலந்​து​கொள்​ள​வி​ருந்த குழு உறுப்​பி​னர்​கள் இரு​வர் தங்​கள் பய​ணத்தை ரத்து செய்​து​விட்​ட​னர்.​
இந்​தி​யத் தேவை​கள்,​​ இந்​தி​யா​வின் தொழில்​வ​ளர்ச்சி,​​ இங்​குள்ள தொழில்​நுட்​பம்,​​ மக்​கள்​தொகை அனைத்​தை​யும் கணக்​கில் கொண்டு மாநாட்​டில் பேச​வும்,​​ தனக்​கான அளவை நிர்​ண​யிக்​க​வும்,​​ வளர்ந்த நாடு​கள் வழங்​க​வுள்ள உத​வித்​தொ​கையை அதி​க​மா​கப் பெறு​வ​தும்​தான் இந்​தி​யா​வின் முழு நோக்​க​மாக இருக்க வேண்​டுமே தவிர,​​ அமெ​ரிக்கா,​​ சீனாவை அடி​யொட்டி இந்​தி​யா​வும் நடப்​பது சரி​யா​ன​தாக இருக்க முடி​யாது.​ ​
இந்​தி​யா​வுக்​குக் குரல் கொடுக்க வேண்​டிய அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்,​​ இம​ய​ம​லை​யில் பனிப்​பா​றை​கள் வேக​மாக உரு​கு​வ​தற்​கும் பரு​வ​நிலை மாறு​பாட்​டுக்​கும் தொடர்​பில்லை என்று பேசி,​​ பனிப்​பாறை வளர்​வ​தும்,​​ உரு​கித் தேய்​வ​தும் சுழற்சி அடிப்​ப​டை​யில் நடப்​பவை என்று விளக்​க​மும் கூறி​யி​ருக்​கி​றார்.​ இயற்கை ஆர்​வ​லர்​க​ளின் கோபத்​துக்கு ஆளா​கி​யி​ருக்​கி​றார்.​ நம் அமைச்​சர் இப்​ப​டி​யெல்​லாம் பேசு​வ​தைப் பார்த்​தால் நாம்,​​ வளர்ந்த நாடு​க​ளால் ஏமாற்​றப்​பட்​டு​வி​டு​வோமோ என்ற அச்​சம் ஏற்​ப​டு​கி​றது.​ இந்​தியா இரண்டு விஷ​யங்​க​ளில் மிகத் தெளி​வாக இருக்க வேண்​டும்.​
 முத​லா​வ​ தாக,​​ இந்​தி​யா​வின் பசு​மை​இல்ல வாயு வெளி​யேற்​றத்​தைச் சரி​பார்த்​தல் என்​கிற பெய​ரில் அன்​னி​யர்​கள் புகுந்து மேலாண்மை செய்​வதை ஒரு போதும் ஒப்​புக்​கொள்​ளக்​கூ​டாது.​ அதிக உத​வித்​தொகை,​​ சலுகை என்ற பெய​ரில் ஆசை​வார்த்தை காட்​டி​னா​லும் அதற்கு இந்​தியா உடன்​ப​டக்​கூ​டாது.​ அமெ​ரிக்​கா​விலோ அல்​லது சீனா​விலோ நாம் போய் சரி​பார்க்​கும் பணியை மேற்​கொண்​டால் அனு​ம​திப்​பார்​களா என்​பதை யோசிக்க வேண்​டும்.​
இரண்​டா​வ​தாக,​​ வளி​மண்​ட​லம் மாசு​பட்​டதை கணக்​கி​டும்​போது,​​ அந்​தந்த நாட்​டின் மக்​கள் தொகை​யை​யும் கணக்​கில் கொள்ள வேண்​டும்.​ ஏற்​கெ​னவே சொர்க்​க​போ​கத்​தில் இருக்​கும் குறைந்​த​பட்ச அமெ​ரிக்​கர்​க​ளுக்​காக,​​ மக்​கள் தொகை அதி​கம் கொண்ட இந்​தி​யா​வில் 100 கோடி இந்​தி​ய​ரும் தங்​கள் செüக​ரி​யங்​க​ளைத் தியா​கம் செய்ய வேண்​டும் என்று வற்​பு​றுத்​து​வது நியா​ய​மற்​றது.​ இந்​தி​யா​வில் நதி​கள் மாசு​பட்​ட​தற்​கும்,​​ வளி மாசு​பட்​ட​தற்​கும் கார​ணம்,​​ அதி​கப் பணம் கிடைக்​கி​றது என்​ப​தால் வளர்ந்த நாடு​க​ளுக்கு ஏற்​று​மதி செய்​வ​தற்​காக மேற்​கொண்ட தொழில்​க​ளால் ஏற்​பட்​ட​வை​தான்.​ வளர்ந்த நாடு​க​ளுக்​குத் தேவை​யான,​​ ஆனால் ​ அந்​நாட்டு இயற்​கைக்​குப் பாத​க​மான தொழில்​கள் அனைத்​தை​யும் வள​ரும் நாடு​க​ளுக்​குத் தள்​ளி​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைப் பல​வந்​தப்​ப​டுத்​து​கின்​ற​னர்.​ இதைப் புரிந்​து​கொண்டு செயல்​பட வேண்​டும்.​
அமெ​ரிக்​கா​வி​டம் நல்ல பெயர் கிடைக்​கும் என்​ப​தற்​காக அவர்​கள் மனம்​நோ​காத படி நடப்​ப​தால் இந்​தி​யர்​க​ளுக்கு எந்​த​வித நன்​மை​யும் கிடைக்​காது.​ இன்​னும் ஒரு வாரம் இருக்​கி​றது.​ தெளி​வா​க​வும்,​​ முன்​யோ​ச​னை​யு​டன்,​​ எச்​ச​ரிக்​கை​யு​டன் செயல்​ப​டு​வது அவ​சி​யம்.


நன்றி: www.dinamani.com - 14 Dec 2009 


Thursday, December 10, 2009

சுற்றுச்சூழல் பாதிப்பு,​பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல்: 100 கோடி மக்கள் இடம்​பெயரும் அபாயம்

கோபன்​ஹே​கன்,​​ டிச.9:​  பரு​வ​நிலை மாறு​பாடு மற்​றும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் வரும் காலங்​க​ளில் மனித சமு​தா​யம் பெரும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தாக ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​ இத​னால் தென்​கி​ழக்கு ஆசியா,​​ மத்​திய அமெ​ரிக்கா,​​ மேற்கு ஆப்​பி​ரிக்​கா​வின் ஒரு பகுதி ஆகிய பகு​தி​க​ளில் வாழும் மக்​கள்​தான் கடும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தா​க​வும் புலம்​பெ​யர்ந்த மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்பு நடத்​திய ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​

பரு​வ​நிலை மாறு​பாடு,​​ சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் இந்த பகு​தி​க​ளில் இருந்து அடுத்த 40 ஆண்​டு​க​ளில் 100 கோடி மக்​கள் இடம்​பெ​யர்வு மற்​றும் புலம்​பெ​ய​ர​லாம்.​ கடந்த 20 ஆண்​டு​க​ளாக இயற்கை பேர​ழி​வு​கள் இரு​ம​டங்கு அதி​க​ரித்​துள்​ளன.​ சமீ​ப​கா​ல​மாக பூகம்​பம்,​​ வறட்சி,​​ வெள்​ளம் ஆகி​யவை மனித சமு​தா​யத்​துக்கே பெரும் சவா​லாக உரு​வெ​டுத்​துள்​ளன.​   மனி​தன் உயிர்​வாழ்​வ​தற்கு அவ​சி​ய​மான காற்று,​​ நீர்,​​ நிலம் ஆகிய சீர்​கே​டும் அதி​க​ரித்து வரு​கி​றது.​ அதே​போல,​​ இந்த நூற்​றாண்​டின் இறு​திக்​குள் புவி​யின் வெப்​ப​நி​லை​யும் 2 டிகிரி சென்​டி​கி​ரேட் முதல் 5 டிகிரி சென்​டி​கி​ரேட் வரை அதி​க​ரிக்க வாய்ப்​புள்​ளது.​

இது​போன்ற கார​ணங்​க​ளால் மனித சமு​தா​யம் அதிக இன்​னல்​களை சந்​திக்க வேண்​டி​யுள்​ளது.​ பசுமை இல்ல வாயுக்​க​ளால் ஏற்​ப​டும் பரு​வ​நிலை மாறு​பாட்​டால் கடல் மட்​டம் உயர்ந்து வரு​கி​றது.​ இது கட​லுக்கு மத்​தி​யில் அமைந்​துள்ள நாடு​க​ளுக்கு அச்​சு​றுத்​த​லாக உள்​ளது.​ கடல் மட்​டம் தொடர்ந்து உய​ரு​மா​னால் கட​லுக்கு மத்​தி​யில் உள்ள நாடு​கள் மூழ்​கிப்​போ​கும் அபா​ய​மும் உள்​ளது.​

இத​னால் இது​போன்ற நாடு​க​ளில் வசிக்​கும் மக்​கள் தற்​போதே எதிர்​கால அபா​யத்தை நினைத்து பிற நாடு​க​ளுக்கு புலம்​பெ​யர ஆரம்​பித்​து​விட்​ட​னர்.​ எங்​கெல்​லாம் சுற்​றுச்​சூ​ழல் அதி​க​ரித்​துள்​ளதோ அந்​நாட்​டைச் சேர்ந்த மக்​கள் அரு​கில் உள்ள நாடு​க​ளுக்கு புலம்​பெ​ய​ரத் தொடங்​கி​யுள்​ள​னர்.​

சில நாடு​க​ளில் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​மிக்க பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​கள் பாதிப்​பில்​லாத பகுதி நோக்கி இடம்​பெ​யர்​கின்​ற​னர்.​ இத​னால் ஓரி​டத்​தி​லேயே அதிக மக்​கள் குவி​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.​ இது மேலும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​புக்கு வழி ஏற்​ப​டுத்​து​கி​றது.​ அது​மட்​டு​மல்​லா​மல் ஓரி​டத்​தில் இருந்து மற்​றொரு இடத்​துக்கு மக்​கள் இடம்​பெ​ய​ரும் போது சில நேரங்​க​ளில் மக்​க​ளி​டையே மோத​லும் தவிர்க்க முடி​யா​த​தாகி விடு​கி​றது.​

  இது எதிர்​கா​லத்​தில் பெரிய பிரச்​னை​யாக உரு​வெ​டுக்க வாய்ப்​புள்​ள​தா​க​வும் புலம்​பெ​ய​ரும் மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்​பின் ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​


நன்றி: www.dinamani.com - 10 Dec 2009

Wednesday, December 9, 2009

கூவம் நதி​யா​கி​றது...

சென் ​னைப் பெரு​ந​க​ரின் அகண்ட சாக்​க​டை​க​ளாக உள்ள கூவம் ஆறு, அடை​யாறு,​ பக்​கிங்​காம் கால்​வாய் மூன்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்தி,​ சிங்​கா​ரச் சென்​னையை உரு​வாக்​கு​வ​தற்​காக சென்னை நதி​கள் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு,​ அதன் தலை​வர் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார் துணை முதல்​வர் மு.க. ஸ்டா​லின்.​ ​ 1967-ல் முதன்​மு​த​லா​கத் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்சி அமைத்​த​போதே,​ கூவத்​தில் பட​கு​வி​டும் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் அன்று பொதுப்​ப​ணித்​துறை அமைச்​ச​ராக இருந்த இன்​றைய முதல்​வர் மு. கரு​ணா​நிதி. அதற்​கா​கக் கட்​டப்​பட்ட பட​குத்​து​றை​க​ளின் சிதைந்த மிச்​சங்​களை இப்​போ​தும் சில இடங்​க​ளில் காண முடி​கி​றது. அப்​போது அவ​ரால் அத்​திட்​டத்தை செய்​து​மு​டிக்க முடி​ய​வில்லை. "மகன் தந்​தைக்​காற்​றும் உதவி' அவர் தொடங்​கிய பணியை நிறைவு செய்​வ​து​தான்.​ ​ இந்த ஆணை​யம் எத்​த​கைய பணி​களை முத​லில் செய்​யப்​போ​கி​றது;​ இதற்​கான மதிப்​பீடு என்ன,​ இச்​செ​ல​வுக்​கான நிதியை எங்​கி​ருந்து பெறப்​போ​கி​றார்​கள் என்ற விவ​ரங்​கள் விரை​வில் இது​பற்​றிய அறி​விப்​பு​க​ளாக வெளி​யா​கும். முத​லில் கூவத்​தைத்​தான் எடுத்​துக்​கொள்ள இருக்​கின்​ற​னர்.​ ​ கூவம் மிக​மிக மோச​மாக மாச​டைந்து,​ கழி​வு​கள் நக​ர​வும் முடி​யா​த​படி தேங்​கிக் கிடக்​கி​றது. கூவத்​தில் உள்ள தண்​ணீரை எடுத்து,​ தெளி​ய​வைத்து,​ வடி​கட்​டிய நீரில் மீன்​களை விட்​டால்,​ 4 மணி நேரத்​தில் மீன்​கள் செத்​து​வி​டு​கின்​றன என்​ப​து​தான் கூவம் குறித்து ஆய்​வு​மு​டி​வு​கள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்​ஸி​ஜன் இல்லை. வெறும் நச்சு உலோ​கக் கலப்​பும்,​ சேறும் சக​தி​யும்​தான் உள்​ளன. அடை​யா​றும் அந்​த​வி​த​மா​கவே படு​மோ​ச​மாக மாச​டைந்து கிடக்​கி​றது. மணப்​பாக்​கம் தடுப்​பணை வரை அடை​யாறு கொஞ்​சம் தூய்​மை​யாக இருந்​தா​லும்,​ சென்னை பெரு​ந​க​ரத்​தில் நுழைந்​த​வு​டன் அதன் மேனி​யில் வெறும் குப்​பை​க​ளும் நச்​சுக் கழி​வு​க​ளும்​தான் கொட்​டப்​ப​டு​கின்​றன. "அடை​யாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்​தது,​ இப்​போ​தும் இருக்​கி​றது ​ என்​பதே நம்ப முடி​யாத விஷ​ய​மாக ஆகி​விட்​டது.​ ​ அடை​யாறு,​ கூவம்,​ பக்​கிங்​காம் கால்​வாய் ஆகி​ய​வற்​றில் 1950 களில் இருந்த நிலை உரு​வா​க​வும்,​ பட​கு​கள் ஓட​வும்,​ நீர்​வாழ் உயி​ரி​னங்​கள் அவற்​றில் காணப்​ப​டும் சூழல் மீண்​டும் வர​வேண்​டும். இது முக்​கி​ய​மான பணி என்​ப​தி​லும்,​ இதை எப்​பாடு பட்​டா​கி​லும் செய்​தாக வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்​து​கள் இருக்க முடி​யாது. இருப்​பி​னும்,​ இத்​திட்​டம் வெற்றி பெற வேண்​டு​மா​னால்,​ இது தேர்​தல் கால அர​சி​யல் பிர​சா​ர​மாக மாறு​வ​தைத் தவிர்க்க வேண்​டும். இப்​ப​டிச் சொல்​லக் கார​ணம் இருக்​கி​றது. ​சென்​னை​யின் நதி​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணிக்கு குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தேவை. இதற்​குள் 3 சட்​டப்​பே​ரவை தேர்​தல்​க​ளை​யும் 2 உள்​ளாட்​சித் தேர்​தல்​க​ளை​யும் சென்னை சந்​திக்க நேர​லாம். இத்​திட்​டம் அர​சி​யல் கட்​சி​யின் சாத​னை​யாக முன்​வைக்​கப்​ப​டு​மா​னால்,​ இத்​திட்​டத்தை எதிர்க்​கட்​சி​கள் குறை​கூ​றும்,​ விமர்​சிக்​கும் என்​ப​தோடு,​ ஆட்சி மாற்​றம் ஏற்​ப​டு​மே​யா​னால்,​ இத்​திட்​டத்தை முற்​றி​லு​மா​கப் புறக்​க​ணிப்​பார்​கள்,​ கிடப்​பில் போடு​வார்​கள். இத​னால் மக்​க​ளுக்​கும் இழப்பு,​ சென்னை நக​ருக்​கும் இழப்பு.சிங்​கப்​பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்​தான். இந்த நதி கூவம் போல மிக​மிக மோச​மா​காத நிலை​யி​லேயே,​ 1977-ம் ஆண்​டில்,​ "சிங்​கப்​பூர் நதி மற்​றும் கலாங் கழி​மு​கத் தூய்​மைத் திட்​டம்' தொடங்​கப்​பட்டு 10 ஆண்டு கால அவ​கா​சத்​தில் முடிக்​கத் திட்​ட​மி​டப்​பட்டு,​ அதன்​படி சிறப்​பா​கச் செய்து முடிக்​கப்​பட்​ட​தன் முழு​மு​தற் கார​ணம்-​ அது அர​சி​யல் வெற்​றி​யாக ஆக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான். சிங்​கப்​பூர் நதி​யின் கரை​யி​லும் கழி​மு​கப் பகு​தி​யி​லும் குடி​யி​ருந்த 26,000 ஏழைக் குடும்​பங்​கள் பார​பட்​ச​மின்றி ஊருக்கு வெளியே குடி​ய​மர்த்​தப்​பட்​ட​னர். 2,800 குடி​சைத்​தொ​ழில் மற்​றும் சிறு​தொ​ழில்​கூ​டங்​க​ளும் ஊருக்கு வெளியே அனுப்​பப்​பட்​டன. நடை​பாதை வணி​கர்​கள்,​ தெரு​வோர உண​வ​கங்​கள் எல்​லா​மும் கழி​வு​நீர் போக்​கி​கள் கொண்ட தனி​யி​டங்​க​ளுக்கு மாற்​றப்​பட்​டன. பிளாஸ்​டிக் பொருள் போன்ற திடக்​க​ழி​வு​கள் சிங்​கப்​பூர் நதி​யில் கலக்​கா​த​படி சிறப்​புத் தடுப்பு அமைப்​பு​கள் கரை​யோ​ரங்​க​ளில் ஏற்​ப​டுத்​தப்​பட்​டன. இதற்​கான திட்​டச் செலவு 20 கோடி டாலர்​கள்.​ ​ கூவத்தை அதன் உற்​பத்தி இடத்தி​லி​ருந்து கழி​மு​கம் வரை சுமார் 65 கி.மீ. தொலை​வுக்​குத் தூய்​மைப்​ப​டுத்​த​வும்,​ அடை​யாறு ​(சுமார் 48 கி.மீ.), பக்​கிங்​காம் கால்​வாய் எல்​லா​வற்​றி​லும் உள்ள ஆக்​கி​ர​மிப்​பை​யும் குடி​சைப் பகு​தி​க​ளை​யும் நீக்க வேண்​டு​மா​னால் மிகக் குறைந்​த​பட்​சம் ஒரு லட்​சம் குடி​சை​களை அகற்றி,​ புற​ந​கர்ப் பகு​தி​யில் மாற்​றி​டம் தந்​தாக வேண்​டும். பல்​வேறு ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட வேண்​டும். தொழில்​நி​று​வ​னம் மற்​றும் மருத்​து​வ​ம​னைக் கழி​வு​கள் இதில் கலப்​ப​தைத் தடுக்க வேண்​டும். இத்​த​னை​யும் செய்ய வேண்​டு​மா​னால்,​ அர​சி​யல் சாய்வு இல்​லாத அர​சின் உறு​திப்​பாடு தேவை. வாக்கு வங்​கி​கள் பற்​றிய எந்த நினைப்​பும் இல்​லா​மல்,​ கட​மை​யைச் செய்​யும் உணர்வு மட்​டுமே இருந்​தால்​தான் இத்​திட்​டம் வெற்றி அடை​யும்.​ ​ மேலும்,​ தமி​ழ​கத்​தின் தலை​ந​க​ர​மா​கிய சென்னை பெரு​ந​க​ரின் நதி​க​ளுக்கு மட்​டும் ஆணை​யம் அமைத்​தி​ருப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஏன் தமி​ழக நதி​கள் ஆணை​யம் என ​ அமைக்​க​வில்லை என்​பது சற்று வருத்​தம் தரு​கி​றது. தமி​ழ​கத்​தின் நதி​கள் அனைத்​துமே ஏறக்​கு​றைய கூவம்,​ அடை​யாறு போல தூய்மை கெட்​டுப்​போய் கிடக்​கின்​றன. மணல்​கொள்​ளை​யா​லும் தொழில்​து​றைக் கழி​வு​க​ளா​லும் மேனி மெலிந்து,​ நோயுற்​றுக் கிடக்​கின்​றன. இவற்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்​து​வது தமி​ழக அர​சின் பணி​தானே?​​ ​ வாஷிங்​ட​னுக்கு ஒரு பொட்​டோ​மேக். லண்​ட​னுக்கு ஒரு தேம்ஸ். பாரீ​சுக்கு ​ ஒரு ரைன். சென்​னைக்கு ஒரு கூவம் என்​கிற நிலை ஏற்​பட வேண்​டும் என்​பது முதல்​வர் கரு​ணா​நி​தி​யு​டைய கனவு மட்​டு​மல்ல. ஒவ்​வொரு சென்​னை​வா​சி​யின் கன​வும்​கூட. நல்​ல​தொரு முயற்சி துணை முதல்​வர் தலை​மை​யில் செயல்​ப​டத் தயா​ரா​கி​றது. இந்த ஆக்​க​பூர்​வ​மான திட்​டம் அர​சி​ய​லாக்​கப்​ப​டக் கூடாது!

Thanks to : www.dinamani.com - 07 Dec 2009