I LOVE TAMIL


Tuesday, June 17, 2008

Cellphone Problems

செல்போன்களால் ஏற்படும் ஆபத்துக்கள்
மத்திய அரசு எச்சரிக்கை


புதுடெல்லி, ஜுன். 17-

செல்போன்களால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி மத்திய அரசு எச்சரிக்கை செய்து உள்ளது.

செல்போன்கள்

தற்போது உள்ள நவீன காலத்தில் எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக செல்போன்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. செல்போன் இன்றி வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு மனிதனுடன் செல்போன்கள் ஒன்றி விட்டன.

ஆனால் இதனால் சில ஆபத்துக்களும் உள்ளன. அவற்றை பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை என்று மத்திய அரசுக்கு தொலை தொடர்புத்துறை அளித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழந்தைகளுக்கு கூடாது

செல்போன்கள், ரேடியோ ஒளிபரப்பு சாதனங்கள் போன்றவற்றில் இருந்து கதிர்வீச்சு ஓரளவு வெளியாகிறது. எனவே, இவற்றை பயன்படுத்தும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குறிப்பாக குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 16 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் மிக குறைந்த நேரம் மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும். இருதய நோய் உள்ளவர்களும் அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவது நல்லது அல்ல.

மூளையை பாதிக்கும்

செல்போன்களை காதின் அருகே வைத்து நீண்ட நேரம் பேசுவதால் செல்போன் சூடாகி விடுகிறது. அப்போது அதில் இருந்து வெளியேறும் எலக்டிரோ மேக்னடிக் கதிர்வீச்சு, காதையொட்டி இருக்கும் மூளை பகுதி திசுக்களை பாதிக்கிறது. தினமும் நீண்ட நேரம் மற்றும் அதிக ஆண்டுகள் செல்போன்களை பயன்படுத்துவோருக்கு இந்த ஆபத்து அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

கர்ப்பிணி பெண்களும் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. அதிக நேரம் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சு, அந்த பெண்ணின் வயிற்றில் உருவாகும் குழந்தையையும் பாதிக்கக் கூடும்.

விளம்பரங்கள்

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் அதிகமானவர்கள் சிறுவர்-சிறுமிகளாகவும் இருப்பார்கள் என்று கருதுகிறோம்.

எனவே குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் செல்போன்களில் பேசுவது போன்ற விளம்பரங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும். மக்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீண்ட நேரம் பேச வேண்டும் என்றால் சாதாரண டெலிபோனில் பேசலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Source : www.dailythanthi.com on 17.06.2008

1 comment:

Maruthu Pandiyan - Madurai. said...

Dear Prakash,

The informations furnished here in your site are really vital like the name of ur site. But you may please think about the alternatives for all of these hazardous activities. If you do so people may practice themselves to adapt the same with a clear vision.
I wish you all the best and keep it up.

Cheers,
Chinna maruthu.