'சிகரெட்டைக் காட்டிலும் கொடியது செல்பேசி!'
லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 31 மார்ச் 2008 ( 11:01 IST )
புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளில் ஒன்றுதான் 'புகைப்பிடித்தல்' என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், சிகரெட்டைக் காட்டிலும் செல்பேசிகளை உபயோகித்தல் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்று இங்கிலாந்து வாழ் இந்திய மருத்துவ ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
செல்பேசிகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சானது, மூளையில் கட்டிகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு என்றும், அதன் காரணமாக மூளை புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்றும் அண்மையில் வெளியான டாக்டர் குரானாவின் மருத்துவ ஆய்வு தொடர்பான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடித்தலால் ஏற்படும் புற்றுநோய் காரணமாக, உலக அளவில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் மரணமடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆனால், செல்பேசி உபயோகிப்போர்களில் அதிகமானோர் புற்றுநோய்க்கு பலியாகியிருப்பதாக டாக்டர் குரானா தனது ஆய்வின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.
செல்பேசியால் ஏற்படும் விளைவுகள் குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டு டாக்டர் குரானா தனது ஆய்வினை மேற்கொண்டு, செல்பேசியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானது என்பதைக் கண்டறிந்துள்ளார்.
மூளைகளில் கட்டி ஏற்படுவதற்குக் காரணமான செல்பேசியில் இருந்து கதிர்வீச்சுகளின் பாதிப்பைக் குறைப்பதற்கு, செல்பேசி நிறுவனங்களும், அரசுகளும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இதை உதாசீனப்படுத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
அதேநேரத்தில், இதனை தனியொரு அறிவியல் அறிஞரின் கருத்து என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், டாக்டர் குரானாவின் கருத்தை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் செல்பேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
(மூலம் - வெப்துனியா)
Source : http://in.tamil.yahoo.com/Health/News/0803/31/1080331007_1.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment