I LOVE TAMIL


Tuesday, June 9, 2009

சர்வதேச கைப்பந்து தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம்



சர்வதேச கைப்பந்து தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம்


சென்னையில் தொடங்கியது


சென்னை, ஜூன்.9&
சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது.
சர்வதேச பயிற்சி முகாம்
சென்னை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச கைப்பந்து சம்மேளன மண்டல வளர்ச்சி மையம் சார்பில், ஆண்டு தோறும் கைப்பந்து மேம்பாட்டுக்காக பல்வேறு பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
புனேயில் அடுத்த மாதம் (ஜூலை) 31&ந் தேதி முதல் ஆகஸ்டு 9&ந் தேதி வரை நடைபெறும் உலக ஜூனியர் கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஒவ்வொருவரும் செயல்படும் விதத்தை உடனடியாக நிபுணர்களை கொண்டு துல்லியமாக சேகரித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து வீரர்களை தர வரிசைப்படுத்தும் முறையை சிறப்பாக செய்யும் நோக்கில், சர்வதேச கைப்பந்து தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம் சென்னையில் நடத்தப்படுகிறது.
12&ந் தேதி வரை...
இந்த பயிற்சி முகாம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது. வருகிற 12&ந் தேதி வரை நடைபெறும் இதில் 3 வீராங்கனைகள் உள்பட 33 பேர் கலந்து கொண்டுள்ளர்.
பயிற்சி முகாம் தொடக்க விழாவில் முகாம் இயக்குனர் தாமஸ் குரோப்கா (போலந்து) கலந்து கொண்டு பேசினார். இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் கே.முருகன் வரவேற்றார். தமிழ்நாடு கைப்பந்து சங்க துணை தலைவர் தமிழ்செல்வன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க பொருளாளர் பென்னி கூஞ்ச் நன்றி கூறினார்.

Thanks to - www.dailythanthi.com - 09.06.2009
http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx#

No comments: