உலகின் மிக முக்கிய வளமையங்களில் ஒன்று ஈர நிலங்கள் ஆகும். பயோ டைவர்சிட்டி எனப்படும் உயிரி பன்மியம் பெருக ஈர நிலங்களே காரணம். இந்த ஆண்டு உயிரி பன்மிய ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளதால் உயிரி பன்மியத்தின் அடிப்படை ஆதாரமான ஈர நிலங்களில் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈர நிலங்கள் தண்ணீர் பரவி நிற்கும் ஆழமற்ற நிலப்பகுதியாகும். இந்த ஈர நிலங்களில் தான் அதிக எண்ணிக்கையில் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன அதிகம் உள்ளன. கடல்களை விட ஈர நிலங்களில் தான் அதிகளவில் மீன்கள் உள்ளன. ராஜஸ்தானில் சாம்பார், ஆந்திராவின் கொல்லேரு, கேரளாவின் அஷ்டமுடி, காஷ்மீரில் ஊலர் ஏரிகள் ஈர நிலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கோடியக்கரை ஈர நிலங்களின் பட்டியலில் உள்ளது. ஈர நிலங்கள் குறித்த ராம்சார் சர்வதேச அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள புதிய ஈரநிலங்கள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
நன்றி : www.dinamalar.com - 16-01-2010
No comments:
Post a Comment