I LOVE TAMIL


Saturday, November 8, 2008

மானம் இழந்த விவசாயம்

மானம் இழந்த விவசாயம்

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின் வாரிசுகள் இன்று விருந்தினர்களாக வரும் சொந்தக்காரர்களுக்குக் கூட வயிராற ஒரு வேளை சோறு போட வக்கில்லாத தரித்திர நாராயணர்களாகிவிட்டார்கள்.

"மிகவும் தவறான விவசாய விலைக் கொள்கையைப் பின்பற்றி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிவிட்டுக் கடன் தள்ளுபடி... அது... இது... என்று ஏமாற்றுகிறார்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. மானியமும் வேண்டாம். கடன் தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும்' இப்படிச் சொல்வது நான் மட்டுமல்ல, விவசாயிகள் சங்கத் தலைவரான மகேந்தர் சிங் திகாயத் கூறுவதும் இதுவே.

திகாயத் மேலும் கூறுகையில், ""1966-ல் ஒரு டிராக்டர் விலை ரூ. 11,000. இன்று அதுவே ரூ. 3 லட்சமாகிவிட்டது. 40 பைசாவுக்கு விற்ற டீசல் இன்று ரூ. 34. உரம், பூச்சிமருந்து, விதை விலைகள் நூறு மடங்கு உயர்ந்துவிட்டன. 1966-ல் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்தது. இன்று வாரத்தில் 3 நாள்கள் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. 1966-ல் 100 கிலோ கொண்ட ஒரு கோதுமை மூட்டையை விற்று 5 மூட்டை சிமெண்ட் வாங்கினோம். இன்று 1 மூட்டை சிமெண்ட் வாங்க 5 மூட்டை கோதுமையை விற்க வேண்டும். 10 கிராம் தங்கம் அன்று ரூ. 250. இன்று ரூ. 11,000. அன்று கோதுமைக்கு ரூ. 760 என்றும் கரும்புக்கு ரூ. 130 (1 டன்) என்றும் நிர்ணயித்தார்கள். இன்று கோதுமைக்கு ரூ. 1,000 என்றும் கரும்புக்கு ரூ. 818 என்றும் நிர்ணயமாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த விலையேற்ற அடிப்படையில் கவனித்து கோதுமைக்குரிய விலை ரூ. 3,000 என்றும் கரும்புக்கு ரூ. 2,500 என்றும் நிர்ணயம் செய்வதுதான் நியாயம்''.

திகாயத் கூறியுள்ளதை இன்றுள்ள எதார்த்தங்களை வைத்து கவனித்தால் அவர் கூறியுள்ளதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

உலகமயமாதல் விளைவால் விற்பனைப் பொருள்களில் தடையற்ற வணிகம் என்பது ஏனோ அரிசி, கோதுமைக்கு இல்லை. அரிசிக்கும் கோதுமைக்கும் மட்டுமே கட்டுப்பாடான பொருளாதாரம் உள்ளது. அரசு, ஏகபோகமே நிகழ்கிறது. அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது. அப்படி நிர்ணயிக்கப்படும் விலைக்கும் விஷம்போல் ஏறிவரும் சாகுபடிச் செலவுக்கும் தொடர்பே இல்லை. இந்திய விவசாயிகளில் ஐந்தில் நான்கு பேர் நடுத்தர - சிறு - குறுவிவசாயிகள். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்வோரும் அடக்கம். பஞ்சாப் - ஹரியாணா போன்ற மாநிலங்களில் நிலத்தின் விலை ஏறியதாலும் குத்தகையும் ஏறியதாலும் குத்தகை விவசாயிகளுக்கு நிறைய நஷ்டம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை 2005 - 06-ம் ஆண்டில் நிகழ்த்திய ஆய்வின்படி 1 ஏக்கர் கோதுமை சாகுபடி செய்ய சுமார் ரூ. 11,000 செலவாகிறதாம். அதில் குத்தகை முன்பணம் மட்டுமே ரூ. 5,000. அதன்பின் கூலி ஆள்கள் சம்பளம் ரூ. 1,700. இயந்திரங்கள், டிராக்டர், டிரில்லர் செலவு ரூ. 2,000. விதை ரூ. 400. உரம் ரூ. 1,100. பூச்சிமருந்து ரூ. 300. வட்டி ரூ. 200. இத்யாதி. இத்யாதி.

கேரள மாநிலத்தில் 2004 - 05-ல் நிகழ்த்திய ஆய்வில் 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யவும் ஏறத்தாழ ரூ. 10,500 வரை ஆகிறதாம். இங்கு கூலி ஆள் சம்பளம் மட்டுமே ரூ. 6,000 ஆவதால் கேரள மாநிலத்தில் நெல் சாகுபடி அழிந்து வருவதுபோல் ஹரியாணாவில் கோதுமை சாகுபடி அழிந்து வருவதாக அப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வு கூறுகிறது. பசுமைப்புரட்சியில் கொடிகட்டிப் பறந்த பஞ்சாப், மேற்கு உத்திரப் பிரதேச மாநிலங்களிலும் கேரள வியாதி வந்துள்ளது. கூலிவேலை செய்ய பிகாரிகள் வருகின்றனராம். கூலி ஆள் சம்பளம் பற்றி அந்த நாள்களுடன் இந்த நாள்களை ஒப்பிட்ட திகாயத் கூறும் ஒரு கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது.

"கூலிக்கு ஆள்கள் மலிவாகக் கிட்டிய காலத்தில் கூலி ஆள்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இன்று 1 நாள் ஆண் கூலி ரூ. 120, பெண்கூலி ரூ. 70. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. கூலியை நெல்லாகவோ கோதுமையாகவோ வழங்கப்பட்ட அந்தக் காலத்தில் வேலை இல்லாத நாள்களில் பட்டினியிருக்க மாட்டார்கள். கூலி உயர்வு இருந்தாலும், பணவீக்கம் - விலை ஏற்றம் காரணமாக கூலியாள்கள் இன்று வேலையில்லாத நாள்களில் பட்டினி கிடப்பதால் மகிழ்ச்சியாக இல்லை'. எனினும் சாகுபடிச் செலவில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் கூலிச் செலவு உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். சம்பளம் கொடுக்க வக்கில்லாத விவசாயிகளின் மானம் காற்றில் பறந்து கொண்டுள்ளது. விவசாயிகளின் மானம் மரியாதை மட்டுமல்ல; விவசாயமே மானம் இழந்துவிட்டதே. மண்ணுக்கும் மரியாதை குறைந்து வருகிறது.

உரங்களைப் பற்றிய உண்மை நிலவரம் மிகவும் கசப்பாயுள்ளது. 2002-க்குப்பின் உரத்திற்குரிய விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. உர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம் இதனால் படிப்படியாக உயர்ந்து மானியத் தேவை ரூ. 1,19,772 கோடியாக உயர்ந்தது. விவசாயிகளின் நலன் கருதி உரவிலை உயர்த்தப்படவும் இல்லை. அதேசமயம் பட்ஜெட்டில் போதுமான அளவு உரமானியம் ஒதுக்க இயலாமல் துண்டு விழுந்தது. பல உர நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் தலையில் துண்டுபோட்டுக் கொண்டன. அதாவது மூடுவிழா. யூரியா உற்பத்தியில் முதல்நிலை வகித்த ஃபர்ட்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஃபர்ட்டிலைசர் லிமிடெட் போன்றவை யூரியா, உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டன. உரமானியம் வழங்கப்படாத காரணத்தினால் மட்டுமல்ல, இறக்குமதி மூலப்பொருள் நாஃப்தா விலை உயர்வு காரணமாகவும் யூரியா விலை உயர்ந்தது.

இனி முழுக்க முழுக்க இறக்குமதி உரத்தை நம்பி இந்தியா வாழப் போகிறதா? இயற்கை விவசாயத்தை நம்பித்தான் வாழப் போகிறதா? இதற்குக் காலம் பதில் சொல்வது இருக்கட்டும். பூச்சிமருந்து விஷயத்தில் ஆரோக்கியமான மாற்றம் தென்படுகிறது.

பூச்சிமருந்து என்பது கொடிய நஞ்சு. அதனால் மனிதருக்கு நோய் ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல; இந்த விஷத்தின் விலையேற்றமும் (இரண்டு ஆண்டுகளில் 100 சதம்) காரணமாக மாற்றுப் பூச்சிமருந்தாக மூலிகைப்பூச்சி விரட்டி, வசம்பு, பூண்டு, மஞ்சள், திரிகடுகம், திரிபலா, வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றின் பயன் அதிகரித்துவிட்டது. ஆந்திரப்பிரதேசத்தில் பல கிராமங்களில் பூச்சிமருந்து முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. சற்றுக் கூடுதல் விலையில் பயோமருந்துகளும் அறிமுகமாகிவிட்டன.

எனினும், விவசாயம் மானம் இழக்க மற்றொரு முக்கியக் காரணம் விதை. தன்மானமுள்ள ஒரு விவசாயி காய்கறி விதைகளாகட்டும், நெல், புஞ்சைதானியம், கோதுமை, பயறுவகை விதைகளாகட்டும் சொந்தமாகத் தயாரித்துச் சேமித்தார். வீரியரக விதைகள் அறிமுகமான காலகட்டத்தில் வேளாண்மைத்துறையின் விதைவிற்பனை நிலையங்களைச் சார்ந்து நின்று, விவசாயிகள் தாங்களே அறுவடை செய்து வந்த பாரம்பரிய நெல் ரகங்களைச் சேமிக்காமல், ஐ.ஆர்.8 மற்றும் தைச்சுங் ஜீன் பொருந்திய ஏடிடி எண் வரிசைகளை நம்பி நெல்விதை சேமிக்கும் மரபை இழந்தபோதே இந்திய விவசாயம் மானம் இழந்தது.

""ஆத்தூரு கிச்சடிச்சம்பா, ஆற்காடு கிச்சடிச்சம்பா, ஆனைக்கொம்பன், வையக்குண்டான், தங்கச்சம்பா, குதிரைவால், டொப்பி போன்ற பல நூற்றுக்கணக்கான விதைநெல் யாவும் தமிழ்மண்ணில் கற்பரசிகளுக்குப் பிறந்தவை. வீரியரக நெல் விதைகள் அன்னிய மண்ணில் பிறந்தவை. வீரியரக விதை நம்மிடம் குடிகொண்டபோதே மண்ணின் மானம் கப்பலேறியது. ஜீன் மாற்று விதைகளை - அதிக விலை கொடுத்து மஹைக்கோ, மான்சென்டோ போன்ற பன்னாட்டு நிறுவன விதைகளுக்கு இந்திய விவசாயம் அடிமையாகி இந்த மண்ணின் மானம் விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குப் போனதால் இந்திய விவசாயிகள் இன்று அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். வீரிய ரக விதைகளை கிலோ ரூ. 20க்கு வாங்கி வந்த காலம் மாறிப்போய் இன்று ஜீன் மாற்று விதைகள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 1,000 வரை விலை கொடுத்து வாங்கிப் போதிய அளவு விளைந்தும்கூட அதற்குரிய விலைகளை விற்கும்போது பெற முடியவில்லை. திகாயத் கூறுவதுபோல், கூடுதல் விலை கொடுத்து வாங்கும் இந்த விதைகளின் சாகுபடிச் செலவும் கூடுதல் என்பதை கவனித்தல் நலம்.

விவசாயிகளைச் சுரண்டும் ஒரு புதிய விதைக் கொள்கை விவசாயத்தை மானமிழக்க வைத்துள்ளது. 2004 விதைச்சட்டம் 1966 விதைச்சட்டத்தைச் செல்லாக்காசாக்கிவிட்டது. புதிய விதைச்சட்டத்தில் தனியார் ஆதிக்கம் ஓங்கிப் பொதுத்துறை கேலிக்குரியதாகிவிட்டது. இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம் அரசுப் பணத்தைக் கொண்டு விதை ஆராய்ச்சி செய்து மாநில வேளாண்மைத் துறைக்கு விதைகளை அனுப்பியது. கட்டாக், ஆடுதுறை ஆராய்ச்சி நிறுவனங்கள் எல்லாம் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்துக்குக் கட்டுப்பட்டவை. வீரியரக விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலைக்கு வழங்கப்பட்டன. ஆனால் அரசு ஏகபோகத்தை அகற்றிவிட்டுப் பன்னாட்டு விதை நிறுவனங்களைத் தூக்கி நிறுத்தி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டது. பன்னாட்டு விதை நிறுவனங்களின் விரிவாக்கப் பணியின் சுறுசுறுப்பு பொதுத்துறையில் இல்லாத காரணத்தால் பன்னாட்டு விதை நிறுவனங்களின் வீரிய ஒட்டு மற்றும் ஜீன் மாற்று பிடிடி விதைகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதில் மற்றொரு கொடுமை, வேளாண் விஞ்ஞானிகளின் துரோகச் செயல். அரசுத்துறையில் மக்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகப் பெற்ற இந்த விஞ்ஞானிகளைத் தனியார் - பன்னாட்டு விதை நிறுவனங்கள் ஐந்து லகர சம்பளம் கொடுத்து வாங்கின.

அரசுப் பணியிலிருந்து தனியார் விதை நிறுவனங்களுக்குச் செல்லும்போது இந்த விஞ்ஞானிகள் அரசுப்பணத்தில் ஆராய்ச்சி செய்த மூலப்பொருள் சாதனங்களையும் கொண்டு போய்விட்டனர். அரசுத்துறை ஆராய்ச்சியே தனியார் ஆராய்ச்சியாக மாறியுள்ளது. பொதுத்துறை வழங்கிய வீரிய ரக நெல், கோதுமை விதைகளை விவசாயிகள் சேமித்து அடுத்த நடவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் வீரிய ஒட்டு பி.டிடி விதைகள் ஒரு அறுவடைக்குப் பின் மலடாகிவிடும். ஆகவே, ஒரு விவசாயி தன் கையை நம்பக்கூடிய ஒரு தற்சார்பை இழந்து விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாகிவிட்டார். விஞ்ஞானிகள் துரோகிகளாகிவிட்டனர்.

இன்று பன்னாட்டு விதை நிறுவனங்கள் அளிக்கும் வீரிய ஒட்டு ஜீன் மாற்றம் - பி.டிடி ரக விதைகளை - மலட்டு விதைகளை என்று பயன்படுத்தினோமோ, அன்றே விவசாயத்தின் மானபங்கம் வெளிச்சமாகிவிட்டது. அன்று திரௌபதியின் வஸ்திரோபகர்ணத்திற்கு - அதை நிகழ்த்த முடியாதபடி கண்ணபரமாத்மா காப்பாற்றினார். ஆனால் இந்தக் கலியுகத்தில் விவசாயம் - விவசாயிகளின் வஸ்திரோபகர்ணத்தைக் காப்பாற்ற அந்தக் கண்ணபரமாத்மா வரவில்லையே, ஏன்? துரியோதனர்களின் சபைக்கூட்டம் தொடர்வதினால்தானோ!

Source: www.dinamani.com - Friday November 7 2008

தெரிந்தே செய்யும் தவறு!

தெரிந்தே செய்யும் தவறு!

கடந்த 17 ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்ட எச்சரிக்கைகள் அனைத்தும் இப்போது உண்மையாகி வருகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை அறிவிக்கப்பட்ட நேரத்தில் எழுப்பப்பட்ட முதலாவது எச்சரிக்கை, அரசின் தலையீடுகளை முழுமையாகத் தளர்த்துவதும், உலகமயம் என்கிற பெயரில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் நமது பொருளாதாரத்தை இணைப்பதும், நம்மைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதுதான். வளர்ச்சி அடைந்த நாடுகள் பொருளாதாரச் சரிவுகளை நேரிடுவதுபோல, வளரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு அதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சக்தி கிடையாது என்பதுதான் அந்த எச்சரிக்கைக்குக் காரணம்.

அமெரிக்காவில் அரசின் தலையீடு இல்லாததால் ஒரு சில தனியார் வீட்டுவசதி நிறுவனங்களும், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்த தவறுகளுக்கும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இந்தியாவும் பலியாக்கப்பட்டிருக்கிறது. இதுதான் உலகமயமாக்கலின் வேதனை தரும் தாக்கம். அமெரிக்காவின் தோளைப் பிடித்துக் கொண்டிருக்க நாம் முடிவு செய்ததால், அந்த நாடு ஆட்டம் காணும்போது நாமும் ஆட்டம் காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

தன்னுடைய நாட்டு வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் திவாலாகத் தொடங்கி, அந்த வங்கிகளுக்குக் கடன் கொடுத்திருந்த நிதிநிறுவனங்கள் மூழ்கத் தொடங்கி, அந்த நிதிநிறுவனங்களில் முதலீடு செய்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் தங்களது சேமிப்புகளை இழக்க நேரிட்ட நிலையில், தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் அமெரிக்க அரசு தலையிட்டு, அந்த நிதி நிறுவனங்களுக்குப் பண உதவி அளித்து மக்கள் மத்தியில் எழுந்த பீதியையும், பொருளாதாரத் தேக்கத்தையும் களைய முற்பட்டது. அப்படி எதுவுமே நடக்காமல், இந்தியாவில் திடீரென்று விலைவாசி உயர்கிறது, பங்குச் சந்தை சரிகிறது, ஏற்றுமதி குறைகிறது, அரசு தவிக்கிறது.

வரைமுறை இல்லாமல் அன்னிய முதலீடுகளைப் பங்குச்சந்தையில் அனுமதித்தால், எப்போதுமே நாம் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் முப்பெரும் பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங் - சிதம்பரம் - அலுவாலியா குழுவினர் கேட்க மறுத்தனர். அவரவர் நாட்டில் பிரச்னைகள் வரும்போதோ, நமது நாட்டின்மீது அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழக்கும்போதோ அல்லது வேண்டுமென்றே நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று நினைத்தாலோ, குறுகிய காலத்தில் அன்னிய முதலீடுகளைத் திருப்பி எடுப்பதன் மூலம் நமது பொருளாதாரம் சிதைக்கப்படும் ஆபத்து இருப்பதைத் தெரிந்தும் தெரியாததுபோல மன்மோகன்சிங்கும் சகாக்களும் இருந்தது ஏன்? புரியவில்லை.

பங்குச்சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரங்கள் எல்லாமே, சூதாட்ட மனப்போக்குள்ள பங்குத்தரகர்களின் கையில் அகப்பட்டுத் தவிக்கும் போக்கை உடையவை. அதனால்தான் நமது பழைய பொருளாதாரக் கொள்கை சேமிப்பின் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது. மக்கள் ஊதாரித்தனமாகச் செலவிடுவதை ஆதரிக்காமல், தனிநபர் சேமிப்பு, அரசுத் தரப்பில் ஆஸ்தி அதிகரிப்பு, பொதுச் சொத்துகளை அதிகப்படுத்தும் முதலீடுகள் என்று முந்தைய பொருளாதார நிபுணர்கள் திட்டமிட்டனர்.

மக்கள், அரசு வங்கிகளிலும், அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும், அரசு நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும், தங்கத்திலும் முதலீடு செய்தனர். இந்த முதலீடுகள் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்பட்டன. இப்போது, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச்சந்தை என்று மக்களின் முதலீடுகள் தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்க வழி வகுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், உலகளாவிய தாக்கங்கள் நம்மைத் தள்ளாட வைக்கின்றன.

வங்கிகள் அதிகமாகக் கடன் வசதி அளித்துப் பொருளாதாரம் தேக்கமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நிதியமைச்சகத்தின் இப்போதைய முடிவு. இதற்காக, மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 3,00,000 கோடியை அரசு வங்கிகளுக்கு அளிக்கப் போகிறது. அந்த வங்கிகள் குறைந்த வட்டிக்குக் கடன்களை வாரி வழங்கப் போகின்றன. விளைவு? பணப்புழக்கம் அதிகரிக்கும். விலைவாசியும் அதிகரிக்கும். வாராக் கடன்களும் அதிகரிக்கும். முதலில் பிரகாசமாகத் தெரியும் பொருளாதாரம் விரைவில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரும்.

தெரிந்தே தவறு செய்கிறார்கள். கேட்டால் உலகம் போற்றும் பொருளாதார மேதைகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிக்கனத்தையும் சேமிப்பையும் வற்புறுத்தாமல், கடனை வாரி வழங்கி அகலக்கால் வைக்க வழிகாட்டுகிறார்கள். வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தனா, துந்தனா, துந்தனா!

Source: www.dinamani.com - Saturday November 8 2008

Thursday, October 30, 2008

உடல்நலனுக்கு உணவுப் "பிரமிடு'!

உடல்நலனுக்கு உணவுப் "பிரமிடு'!

ஜி.எஸ். பூர்ண சந்திரக்குமார்

அந்தக்காலத்தில் சக்கைப் போடுபோட்ட திரைப்படம் ""மாயாபஜார்''.

இந்தத் திரைப்படத்தில் மறைந்த நடிகர் ரங்காராவ் தம்முன் மலைபோல் குவிந்திருக்கும் உணவு வகைகளை ""கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம், இது கௌரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும், ஹஹஹஹா! ஹஹஹஹா!'' என்று ஆர்ப்பாட்டமாகப் பாடியவாறே அத்தனை உணவு வகைகளையும் ""லபக், லபக்'' என விழுங்குவார்.

இக் காட்சி காண்பதற்கு நகைச்சுவையாகவும், ரசிக்கத்தக்கதாகவும் இருக்கும். அத்தகைய பெருந்தீனிக்காரர்களுக்கும், உடல்நலனை உண்மையாகவே பேண விரும்பும் உடல்நல ஆர்வலர்களுக்காகவும், எவ்வுணவை, எம்முறைப்படி, எவ்வளவு உண்ண வேண்டும் என்பதைக் குறிக்கும் "உடல் ஆரோக்கிய உணவுப் பிரமிடை' மருத்துவ உலகம் உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரமிடில் உள்ளதைப்போல கீழே உள்ள உணவு வகைகளை அதிகமாகவும், படிப்படியாக மேலே உள்ளவற்றைக் குறைவாகவும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு.

இந்தப் பிரமிடில் முதலிடத்தைப் பிடிப்பது காய்கறி, கீரைகள்தான். அதுவும் தினம் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை உண்ணச் சொல்கிறது இப்பிரமிடு. இதைத்தான் தற்போது மேலைநாட்டு மருத்துவர்கள் ""நீங்கள் ஆகாரத்திற்கு காய்கறிகளைத் தொட்டுக் கொள்வதற்குப் பதிலாக, காய்கறி, கீரை சார்ந்த பொறியலுக்கு ஆகாரத்தைத் தொட்டுக் கொள்ளுங்கள்'' என்று நோயாளிகளுக்குத் தினமும் அறிவுறுத்தி வருகிறார்கள். இல்லையேல் ""சாதம் பாதி, காய்கறி பாதி'' என்ற அளவிலாவது தினமும் காய்கறிகளைச் சேர்க்கச் சொல்கிறார்கள்.

இவ்வாறு உண்பதன் மூலம் அவற்றில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சத்து போன்றவை அப்படியே கிடைப்பதால் உடல் ஆரோக்கியமுடன் விளங்குகிறது.

உதாரணமாக கேரட்டைத் தினமும் உண்பதால் கண்நோய், வயிறு, குடல்நோய், ரத்தக்குழாய் அடைப்பு, ஞாபகமறதி, வறட்சியான சருமம், மாதவிலக்கு வலி, ரத்த சோகை, மூட்டுவலி தீரும். பீன்ஸில் இரும்புச்சத்தும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அதிகம் உள்ளதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

முட்டைக்கோஸில் நார்ச்சத்துடன் பொட்டாசியம் உப்பும் உள்ளதால் ரத்த சுத்தியும், உடல் சுத்தியும் கிடைக்கிறது. நார்ச்சத்துடன் போலிக் அமிலம் அதிகமிருப்பதால் புற்றுநோய், இதயநோய் முதலியவற்றுக்கு அவரைக்காய் அருமருந்து.

ஏதாவது புதிதாகக் கண்டுபிடித்து புகழ் பெற வேண்டும் என விரும்புபவர்கள் பசலைக்கீரையை உண்ண வேண்டும். இது புதுப்புது யோசனைகளை மூளைக்கு அள்ளித் தருமாம்.

வெண்டைக்காய் கண்கள், கால்கள் எரிச்சலைப் போக்கி உடம்பைக் குளிர்விக்கும். நீங்கள் அழகான உடல்வாகு பெற வேண்டுமானால் வைட்டமின் பி2 நிரம்பியுள்ள முள்ளங்கியைத் தொடர்ந்து சாப்பிடவும். முருங்கை, புதினா, கொத்தமல்லி ஆகியவை ரத்தவிருத்தி செய்யும். ""யானையின் மதம் அடக்க வாழைத்தண்டு, மனிதனின் திமிர் அடக்க கீரைத்தண்டு'' என்பார்கள்.

பிரமிடில் அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவை பழவகைகள். உண்ண வேண்டிய அளவு தினசரி 250 கிராம் முதல் 300 கிராம் வரை. நமது ரத்தம் இயற்கையில் காரத்தன்மை உடையது. இது அமிலத்தன்மை உடையதாக மாறும்போதுதான் பலவித நோய்களும் உருவாகின்றன. பழஉணவுகள் காரத்தன்மையுள்ள உணவுகள். இவைகள் சளியை உண்டாக்குவதில்லை. சளியையும், ரத்தத்திலுள்ள கழிவையும் வெளியேற்றி ரத்தத்தின் அமில காரத்தன்மையைப் பாதுகாக்க பழங்கள் பெருமளவு உதவி புரிகின்றன.

இதன் சிறப்பை உணர்ந்துதான் நீரிழிவு நோயாளிகள் தினமும் 250 கிராம் வரை பழங்களை உண்ணச் சொல்லி நீரிழிவு சிகிச்சை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நாளமில்லாச் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்ய ஆப்பிள் பழத்தைத் தோலுடன் சாறு எடுத்து அருந்துங்கள். தினமும் மது அருந்துபவர்கள் அதிலிருந்து விடுபட விரும்பினால் பப்பாளி சாப்பிடுங்கள். மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருபவரா, தினமும் நெல்லிக்கனி சாப்பிடுங்கள். அதிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

புற்றுநோய், இதயநோயால் பாதிக்கப்பட்டவராயிருந்தால் மாதுளம் பழத்தைத் தினமும் சாப்பிடுங்கள். மேலும் ரத்தத்தை விருத்தியடையச் செய்து அடிக்கடி ஏற்படும் தலைவலி, பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிலக்கு, இதய படபடப்பு முதலியவற்றை இது நீக்குகிறது.

பழவகைகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவை பயறு வகைகளும் (தினமும் 400 கிராம்) தானியங்களும் (தினமும் 250 கிராம்).

முளைவிட்ட கோதுமை, வறுத்த வேர்க்கடலை இவற்றில் "பைரிடாக்சின்' எனும் வைட்டமின் பி6 சத்து இருப்பதால் இவை ரத்தக்குழாய்கள் தடிமனாவதைத் தடுக்கிறது. உங்களின் குழந்தை பிடிவாதக் குழந்தையா? ""பருப்புகளின் அரசன்'' என்றழைக்கப்படும் பாதாம்பருப்பை சிறிதளவு தினமும் கொடுத்துப் பாருங்கள். செல்லக்குட்டி சமர்த்துக் குட்டியாகிவிடும்.

மனித மூளையிலுள்ள ""லிம்பிக் சிஸ்டம்'' என்ற அமைப்பே நம்மை எப்போதும் மனமகிழ்வுடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த முறையைப் பாதுகாக்க உதவும் ஓர் எளிய உணவு ஓட்ஸ். நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, புகைப்பிடிப்பதில் ஆர்வம், உடற்பருமன், புற்றுநோய் முதலியவற்றையும் ஓட்ஸ் கட்டுப்படுத்துகிறது. தவிர ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட கோலை ஊன்றி நடப்பவரும் கோலை வீசி நடக்கலாம்.

பச்சைப்பயறு, நிலக்கடலை, வெல்லம் சேர்ந்த ""நிலக்கடலை பால்பாயாசம்'' வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், மூளை தெளிவிற்கும் அதிகப் பயன் அளிக்கிறது. உலகிலேயே அழகான தலைமுடியைப் பெற்றவர்கள் சுவிட்சர்லாந்து மக்களாம். காரணம் பாஸ்பரஸ், சிலிக்கான் தாது உப்புக்கள் அடங்கிய தானியம் மற்றும் பல வகைகளை உணவில் நிறைய சேர்த்துக் கொள்வதுதானாம்.

பிரமிடில் அடுத்த இடத்திலுள்ள பால், தயிர், மோர் இவைகள் புரதச்சத்துக்காகவும் எலும்புகளின் கால்சியத் தேவைக்காகவும் பரிந்துரைக்கப்படுகின்றன. ""நீர் சுருக்கி, நெய் உருக்கி, மோர் பெருக்கி உண்'' என்பது நோயற்ற வாழ்விற்காக நம் முன்னோர்கள் கூறிய பொன்மொழி. தயிரை நன்கு கடைந்து சிலுப்பி மோராக்கி அருந்த உஷ்ண நோய்கள் பலவும் தீரும். இவைகளின் அளவு சராசரியாக 1 நாளைக்கு 250 மிலி.

அடுத்த இடத்திலுள்ள மாமிசம், எண்ணெய் இவைகளை கூடுமானவரை மிதமாகப் பயன்படுத்தல் நலம். ஆக, ""வாழ்வதற்காக உண், உண்பதற்காக வாழாதே'' என்ற நம் முன்னோர்களின் பொன்மொழியை நாம் அனைவரும் அவசியம் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய தருணம் இது.

ஏனெனில் புதுப்புது நோய்களால் மனிதகுலம் அல்லலுறும் இவ்வேளையில் செல்வம் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம். உடல்நலம் போனால்?

(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை & நீர் உணவு மருத்துவ மையம், கோபி.)

Source : www.dinamani.com - Friday January 12 2007

Power Saving



Source : Dinathanthi Newspaper

Thursday, October 23, 2008

Railways should adopt fair practices

CONSUMER NOTES
Railways should adopt fair practices
S PUSHPAVANAM

Railways managed a profit of Rs 13,534 crore last year after paying dividends. Its freight revenue improved and passenger revenue was up by 14%. The operating ratio has come down to 76% from the average 85% in the last decade and is fixed at 73.6 % this year. However, there has not been any meaningful debate on how it was achieved.
But I must give the devil its due. Wagons are ready for use again within 4.5 days. It used to be 7.5 days earlier. Overloading, done hitherto by greasing palms, now has a surcharge, fetching more revenue. Wagon production reached 15,000 a year. Return on capital is 21%. Growth by fair means is welcome. What is not welcome and unfair is that much of the “turn around” has been achieved at the expense of the passengers, taking them for a ride at their own cost.
For one, the safety surcharge on tickets, which met its target of Rs 5,000, has been silently renamed “development fund” and is continued without the consent of the Parliament and the consultative committee on railways. Next is the blatantly unfair return journey surcharge of Rs 10 for sleeper class and Rs 15 for A/C classes. When no extra service is rendered, there should be no extra cost. All these years, there was no surcharge. If the journey starts from any station other than the one where you book the ticket, it is considered a return journey. If you bought a ticket from Kanpur to Nagpur and back, at Chennai, it would be treated as two return journeys. More than Rs 300 crore go to the kitty this way. In fact, it should cost less, as the money is paid upfront.
Another strategy is to rename the trains super fast and collect a super fast surcharge of Rs 20 for sleeper class, Rs 30 and Rs 50 for other A/C classes. In 2004, we had 286 trains; now we have 590.
The norm of 55 kmph was fixed by the railways for the first time in 1992 when the Consumer Protection Council filed a case in Supreme Court. Even now there are several super fast trains that run at less than 55 kmph. A few samples will show the absence of rationale but desire for profit.
The Chennai-Kovai Express takes four-and-a-half hours to cross a distance of 334 km between Chennai and Salem, averaging 75. 62 kmph. The recently introduced Chennai-Salem train takes seven-and-a-half hours to cross the slightly longer distance of 354 km as it is via another route, averaging 47.73 kmph. Both of them are super fast trains. To boot, the passenger who has to journey a longer time ends up paying Rs 17 more in the A/C three-tier and Rs 6 more in sleeper class. The 2555, a super fast, covers 117 km between New Delhi-Biwani in two hours and 45 minutes, averaging 42.55 kmph while the 2553 Gorakpur-New Delhi train covers a distance of 719 km in 13 hours and 25 minutes, averaging 53.59 kmph.
While super fast trains have some norm, express trains have no speed norms even now. So you have some express trains running slower than a fast passenger train. The 887 Tiruchi-Palakkad fast passenger covers Tiruchi-Coimbatore, a distance of 243 km, in five hours and 55 minutes, averaging 42 kmph while the same distance is covered by the Chennai-Mangalore Express in six hours and 45 minutes, averaging 31.9 kmph. While one pays Rs 60 to reach quicker, another pays Rs 139 to reach later. An in-depth study will reveal more such instances.
Finally, the revenue is literally squeezed out of the passenger by making him lie in a side middle-berth. Getting onto the berth and out of it is near impossible for adults and four people have to sit in one lower berth to accommodate this extra person. This failed experiment must be stopped.
What can the consumer do? Write in your protests to the railway minister. A public interest litigation before the National Consumer Commission may also change things. Railways should fix a speed norm of 55 kmph for express trains and 66 kmph for super fast trains. Fair revenue is better than unfair surplus.
(The writer is Secretary, Consumer Protection Council, Tamil Nadu, Tiruchi, and can be reached at consumerpc@rediffmail.com)

Source: www.timesofindia.com - 22.10.2008

வெள்ள நிவாரணப் பணிகள்:11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

வெள்ள நிவாரணப் பணிகள்:11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை, அக். 22: சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களி லும் வெள்ளத்தடுப்புப் பணிகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ள 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை நியமிக்கப் பட்டுள்ளனர்
பொதுமக்களின் புகார்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள் ளும் வகையில் இந்த சிறப்பு அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செல்போன் எண்கள்: தண்டையார்பேட்டை- ஆர். தியாகராஜன் 9445191451, பேசின் பிரிட்ஜ்- அதுல் ஆனந்த் 9445191452, புளியந்தோப்பு- கே. பனீந்தர் ரெட்டி 9445191453 மற்றும் மாலிக்பெரோஸ்கான்-9445191461, அயனாவரம்- என்.முருகானந்தம் 9445191454, கீழ்ப்பாக்கம்- எம்.ஆர். மோகன் 9445191455, ஐஸ்ஹவுஸ்- ஆர். ஜெயா 9445191456, நுங்கம்பாக்கம்- சுப்பிரியா சாகு 9445191457, கோடம் பாக்கம்-ஆர். வெங்கடேசன் 9445191458, சைதாப்பேட்டை-குமார் ஜெயந்த் 9445191459, அடையாறு- ஆர். சிவக்குமார் 9445191460.

Source: www.dinamani.com - 23.10.2008

Saturday, October 18, 2008

Save Electricity



Source: Dinathanthi Newspaper - 01.10.2008