தகவல் சுரங்கம்
ரயில்வே ஜங்ஷன் இருக்கும் பகுதிகளில், ரயில்கள் ஏற்படுத்தும் ஒலி மாசுபாடு, தவிர்க்க இயலாத மாசுபாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் லக்னோவில் உள்ள சார்பாக் ரயில்வே ஸ்டேஷன் 9 பிளாட்பார்ம்களையும், 10 ஆயிரத்து 994 சதுர அடி இடப்பரப்பையும் கொண்டு இருந்தாலும், உள் இருந்து ஒலி வெளியே வராதபடி, இதன் கட்டட அமைப்பு உள்ளது. அனைத்து சப்தங்களும், இரைச்சல்களும் சுவருக்குள்ளேயே தங்கி விடும் வகையில், இதன் அமைப்பு உள்ளது. அப்படியும் மீறி ஏதேனும் ஒலி வந்தால் அதனை தாவரங்கள், மரங்கள் ஈர்த்து விடும் என்பதால், ரயில்வே ஸ்டேஷன் நான்கு மூலைகளிலும் தோட்டங்கள் வைக்கப்பட்டன. "சார்' என்ற இந்திச் சொல்லுக்கு நான்கு என்பது பொருளாகும். "பாக்' என்பது தோட்டத்தைக் குறிக்கிறது. "சார்பாக்' என, லக்னோ ரயில்வே ஸ்டேஷனுக்கு பெயர் வந்ததற்கு காரணமே இந்த தோட்டங்களாகும்.
நன்றி: www.dinamalar.com - 25-Jun-2010
No comments:
Post a Comment