கோடை காலத்தின் முழுமையான நிறைவாக, மழைக்காலத்தின் முன் துவக்கமாக ஆடி மாதம் உள்ளது. வெப்பத்தில் இருந்து குளிர்ச்சிக்கு என்பதே ஆடி மாதத்தின் பருவ நிலையாகும். எனவே வெப்பம் சார்ந்த நோய்கள், ஆடி மாதத்தில் தான் ஏற்படுகின்றன. வெப்பத்தில் இருந்து, மழைக்கு மாறும் போது மழைக்காலத்திற்கு ஏற்ப, தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. இந்த தகவமைப்பு ஆடி மாதத்தில் தான் நடைபெறுகிறது. இந்த தகவமைப்பு காலத்தில் ஏற்படும் தடுமாற்றங்களை சமாளிக்கும் பண்பு, உணவு வகைகளில் கேப்பைக்கும், முருங்கைக் கீரைக்கும் தான் உள்ளது. எனவே தான் கோயில்களில், ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுகின்றனர். காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதில் ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் கவனம் செலுத்துகிறது. அலோபதி மருத்துவம் இதனை நம்புவதில்லை.
Source: www.dinamalar.com
பதிவு செய்த நாள் : ஜூலை 06,2010,00:00 IST
No comments:
Post a Comment