பேராபத்தை எதிர்நோக்கும் பொதிகை!
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
First Published : 10 Jun 2009 01:24:58 AM IST
பொதிகை மலையை செம்மலை, குடைமலை என்றும் அழைப்பர். சீன யாத்ரிகர் யுவான் சுவாங் இம்மலையிலுள்ள சந்தன மரங்களின் சிறப்புகளைப் பற்றியும், தலாமி - பொதிகைத் தென்றலைப் பற்றியும் போற்றியுள்ளனர். நற்றிணையும், பட்டினப்பாலையும் மலை மேகங்கள் தவழும் உயரத்தைக் கொண்டதாகவும், விண்முட்டும் சிகரங்களை உடையதாகவும் பொதிகை மலை திகழ்கிறது எனப் பகர்கின்றன.
அருணகிரிநாதரும், காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியாரும் இம்மலையின் சிறப்பைப் பற்றி மெய்மறந்து பாடியுள்ளனர். பொதிகைக் காட்டில் மேய்கின்ற கழுதைகூட இசை ரசனையை வெளிப்படுத்தும் என்று பாரதி கூறியுள்ளார். கடந்த காலத்தில் வரலாற்றில் சொல்லப்பட்ட கொற்கை துறைமுகம், சிறப்புப் பெற்ற பழைய காயல் மாதிரி பொதிகை மலையும் தன் சிறப்பை இழந்துவிடக் கூடுமோ என்கிற ஐயம் சமீபகாலமாக ஏற்படுகிறது.
ஓங்கி உயர்ந்த மலைகள், பச்சை பசேலென அடர்ந்த காடு, ஓசையில்லாமல் நடமாடும் வனவிலங்குகள், அற்புதமாக ரீங்காரமிடும் பறவைகள், தரையை நோக்கிப் பாயும் குளிர்ச்சியான அருவிகள், சலசலக்கும் பொருநை ஆற்றின் நதி மூலம் போன்ற காட்சிகள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சம் சமீபகாலமாக நம்முன் எழுகிறது.
சிரபுஞ்சிக்கு அடுத்து 4,300 மில்லி மீட்டர் மழை இங்குதான் பெய்கிறது. இதனால்தான் தாமிரபரணி ஜீவநதியாக ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உருவாகி அதே மாவட்டத்தில் புன்னக்காயலில் கடலில் சேர்கிறது. 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ள இங்குள்ள பசுமை மாறா காடுகள் கடந்த 30 ஆண்டுகளில் வெட்டப்பட்டு, மத்திய அரசு அமைத்த அகஸ்தியர் தேசிய பூங்காவும்கூட அர்த்தமில்லாமல் ஆகிவிட்டது. வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் - 1972, வனப் பாதுகாப்புச் சட்டம் - 1980, பயோ டைவர்சிட்டி மசோதா - 2005 எனப் பல சட்டபூர்வமான நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டும் வனச் செல்வங்களை நம்மால் பாதுகாக்க இயலவில்லை.
பொதிகை மலை வழியாக தமிழகத்திலிருந்து திருவனந்தபுரம் செல்ல மலை வழிச் சாலை அமைக்க 2003-ல் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வசதியாக இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல், வனம், விலங்குகள் போன்றவை பாதிக்கப்படும் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பாபநாசம் - காரையாறு அணை, கன்னிக்கட்டி வழியாக திருவனந்தபுரம் செல்லும் தூரம் 122 கிலோமீட்டர் ஆகும். சுமார் 7 மணி நேரம் ஆகும். இரண்டாவது கியரில்தான் செல்ல முடியும். இம்மலையில் 5,000 அடி உயரம் உள்ள பள்ளத்தாக்குகள் உள்ளன.
காரையாறு மற்றும் கன்னிக்கட்டியிலிருந்து சிறிது தொலைவில் கேரள எல்லை வருகிறது. அப்பகுதி கரடுமுரடாக இருப்பதைத் திருத்த வேண்டுமென்றால் மரங்களை வெட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 60 அடி பள்ளத்தில் ஓடும் பேயாறு பகுதியில் போக்குவரத்துப் பாதை அமைக்கவே முடியாது. இவற்றையெல்லாம் சிந்திக்காமல் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே நாகர்கோவில் வழியாக 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவனந்தபுரத்தை அடைய வசதியாகவும், எளிதாகவும் உள்ள தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு இந்த காட்டுச் செல்வத்தை அழித்துத்தான் பாதை அமைக்க வேண்டுமா என்பதுதான் நமது கேள்வி. அதுமட்டுமல்லாமல் செங்கோட்டை - ஆரியங்காவு - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியும் திருவனந்தபுரத்தை அடையலாம்.
பொதிகை மலைக்கு மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அகத்தியர் தங்கிய இப் பொதிகை மலை உச்சி. அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் 42 கிலோமீட்டர் செங்குத்தான மலையை ஏறினால் பொதிகையின் கொடுமுடியை அடையலாம். கடல் மட்டத்திலிருந்து 6,125 அடி உயரத்தில் அங்குள்ள பூங்குளம் என்ற இடத்திலிருந்துதான் தன்னிகரில்லாத தாமிரபரணி புறப்படுகிறது. தென்றலும், தமிழும் தவழும் இந்த உச்சி இன்றைக்கு பல சீரழிவுகளுக்கு உள்ளாகிவிட்டது.
சித்ரா பௌர்ணமி அன்று பயணிகள் இங்கே வருவது உண்டு. 1970-ல் அகத்தியருக்கு இங்கே கோவில் கட்டப்பட்டது. அப்பொழுது அதிகமான மக்கள் நடமாட்டம் அங்கே இல்லாமல் இருந்தது. வனவிலங்குகள் குறிப்பாக புலிகள் அதிகமாக நடமாடும் பகுதியாகும் இது. பல சித்தர்களும் உலவுவதாக நம்பிக்கையும் உண்டு.
1980 வரை குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் சித்ரா பௌர்ணமிக்கு இங்கே சென்று பிரார்த்தனை செய்தனர். பசும்பொன் தேவர் 1953-ல் ஒருநாள் இரவு முழுதும் தனியே அமர்ந்து இந்த இடத்தில் தியானம் செய்ததும் உண்டு. ஆனால் இப்பொழுது இந்த இடம் சித்ரா பௌர்ணமியன்று கிட்டத்தட்ட 2,000 பேர் செல்கின்ற யாத்ரீகர் தலமாக ஆகியுள்ளது.
3 நாள்கள் தங்கும் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அச்சமயம், பிளாஸ்டிக் பைகள் குப்பை குப்பையாக அங்கும் இங்கும் வீசி எறியப்படுவதைப் பார்க்கலாம். இதனால் வனவிலங்குகள் கலைந்து ஓடும் நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சித்ரா பௌர்ணமி அன்று பயணிகள் தங்கும் 3 நாள்களுக்கான வசதிகளும், காடு வழியே செல்லாமல் அதிர்மலை எஸ்டேட் வழியாகச் செல்லக்கூடிய வகையில் பாதைகள் அமைத்தால் பொதிகை மலையின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கலாம்.
சொரிமுத்து அய்யனார் கோயில் இங்குள்ள சிறப்பாகும். சொரிமுத்து அய்யனார் தன்னுடைய மனைவிகளான பூரணா, புஷ்பகலா ஆகியோருடன் இங்கே எழுந்தருளியுள்ளார். இக்கோயில் சிங்கம்பட்டி சமஸ்தானத்திற்குச் சொந்தமானது. பத்மநாபபுரம் மன்னன் மார்த்தாண்ட வர்மனை பதவியிலிருந்து இறக்குவதற்கு சூழ்ச்சி நடந்துபோது, அந்த சூழ்ச்சியிலிருந்து தப்பியோடிய மார்த்தாண்ட வர்மன் சொரிமுத்து அய்யனார் கோயிலில் மறைந்து வாழ்ந்து வந்தான்.
சிங்கம்பட்டி பாளையக்காரர் அவருக்கு உதவி செய்து வந்தார். தன்னுடைய குதிரைப் படையை அனுப்பியது மட்டுமல்லாமல் தன்னுடைய மகனையும் சிங்கம்பட்டி பாளையக்காரர் அனுப்பி வைத்தார். அந்த இளவரசர் போரில் இறந்தார். இதனால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மன், சிங்கம்பட்டி பாளையக்காரர்களுக்கு பொதிகை மலை வட்டாரத்தை ஒட்டியுள்ள 74,000 ஏக்கர் நிலங்களைத் தானமாக வழங்கினார். அன்றிலிருந்து சிங்கம்பட்டி பாளையக்காரர்கள் இக்கோயிலில் பூசைகள் நடத்தி வருகின்றனர். இதற்கும் ஆடி அமாவாசை திருவிழாவன்று பயணிகள் கட்டுக்கடங்காமல் வருவது உண்டு.
இங்குள்ள இஞ்சிக்குளியில் வாழும், காணி மக்கள் என்ற பழங்குடியினர் ""நாங்கள் காலையில் எழுந்தால் சிங்கம், புலி, கரடி ஆகியவற்றின் முகத்தில்தான் விழிக்க வேண்டும். எங்கள் வேலையை நாங்கள் செய்வோம். எங்கள் பக்கத்திலேயே அந்த விலங்குகள் வந்து செல்லும். விலங்குகளுக்கும் இந்தக் காட்டில் யார் வாழ்கிறார்கள் என்று அறியும் சக்தி உள்ளது. எங்களால் விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை'' என்று அந்தப் பழங்குடியினர் சொல்லும்போது மானிடத்திற்கும் விலங்கினத்திற்கும் இடையே நிலவும் ஒருமைப்பாட்டின் பெருமையைக் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து இயற்கையின் செல்வங்களுக்கும் ஆபத்து என்ற நிலைதான் உள்ளது. எந்த மாவட்டத்திற்கும் இல்லாதவாறு தமிழர்கள் பிரித்து வைத்த ஐவகை நிலங்கள் ஒருசேர அமைந்ததுதான் நெல்லை மாவட்டம். ஒருகாலத்தில் ராஜபாளையம் - சாத்தூர் - சாயல்குடி வடக்கு எல்லையாகவும், தெற்கு எல்லையாக வள்ளியூர் - மூன்றடைப்பு, மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்கே வைப்பாறு, திருச்செந்தூர் மற்றும் உவரி என்ற வங்கக் கடற்கரைப் பகுதியாகவும் அமைந்த வீரபூமிதான் அன்றைய திருநெல்வேலி.
தெற்குப் பகுதியிலுள்ள மூன்றடைப்புக்கும் கூந்தன்குளத்திற்கும் ரஷியா, சைபீரியா, மத்திய ஆசியா, ஜெர்மனி, மங்கோலியா போன்ற பல நாடுகளில் உள்ள 55 வகையான வெளிநாட்டுப் பறவைகள் நவம்பர் மாதம் வந்து ஜூலை மாதம் வரை தங்கி கூடு கட்டி குஞ்சு பொறித்து, தாயும் சேயும் தங்களின் சொந்த நாடுகளுக்குச் செல்வதுண்டு. இந்த இயற்கைக் குணம் தொடர்ந்து கண்முன் தெரிந்தாலும் பறவைகள் வருகை குறைந்து வருகின்ற நிலையும் உள்ளது. இதற்கு இயற்கையை நாம் போற்றாததும் ஒரு காரணமாகும்.
அதுபோலவே கிழக்கு எல்லையில் தங்களுக்குத் தேவையான மீன்கள் இயற்கையின் மாற்றத்தால் கிடைக்கவில்லை என்ற மீனவர்களின் வேதனைக் குரலும் கேட்கிறது. குமரி முனையில் சுனாமிக்குப்பின் கடற்கரை எல்லையை மீறி கடல் உள்ளே வருகிறது. ஆனால் திருச்செந்தூரில் மாறுபட்ட நிலையில் கடல் தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கின்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளன.
இம்மாவட்டத்தின் வடபகுதியில் கோவில்பட்டி, சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள கரிசல் பூமியில் வெயிலும் வறட்சியும்தான் இயற்கை தந்த சீதனங்கள். இதையெல்லாம் எளிதாக எடுத்துக் கொள்கின்றவர்கள் குடிக்கத் தண்ணீருக்கு பல மைல்கள் போக வேண்டும். அதுதான் பாலச்சந்தரின் தண்ணீர்! தண்ணீர் பூமி!!
இருக்கின்ற நீரையும் பாதிக்கக்கூடிய அளவில் விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் கீழநம்பியாபுரம், அம்மன் கோவில்பட்டி ஆற்றங்கரை, விரிசம்பட்டி, தோணித்துறை, களியாவூர், வைப்பாறு மற்றும் தாமிரபரணியில் கன்சாபுரம், கருங்குளம், கொங்கராயன்குறிச்சி, முக்காணி போன்ற தாமிரபரணி நதிப் பாதையில் 3 அடிக்கு மேலாக குழிதோண்டி மணல் எடுப்பதால் தண்ணீர் கிடைக்காத நிலை. மணல் கொள்ளையால் நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளுக்குப் பாதுகாப்பில்லை. மயிலாப்பூர் அணைக்கட்டு பெரும் பாதிப்பில் உள்ளது. அதுபோல திருவைகுண்டத்தில் உள்ள பாலமும் அழிவு நிலையில் உள்ளது.
அதுமட்டுமா? பனங்கற்கண்டையும், நுங்கையும், பதநீரையும், குடிசைகள் அமைக்க உதவும் ஓலைகளையும் தருகின்ற பனைகள் ஒரு காலத்தில் நெல்லை மாவட்ட மக்களோடு பின்னிப் பிணைந்திருந்தன. தூத்துக்குடி, திருந்செந்தூரிலிருந்து தொடங்கி மேற்கே செங்கோட்டை, புளியறை, அச்சன்கோவில் வரை பரவியிருந்த 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பனை மரங்கள் வெட்டப்பட்டன. கம்பீரமாகக் காட்சி அளிக்கும் பனை மரங்களை இன்றைக்கு காணவில்லை. ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய "புத்தம் வீடு' என்ற புதினத்தில்தான் அக்காலத்தில் நெல்லை மாவட்டத்தில் அமைந்த பனைத் தொழில் கலாசாரத்தை அறிய முடிகிறது.
இன்றைக்கு கல்குவாரி என்று எடுத்துக்கொண்டு ஒருகாலத்தில் சமணர்களால் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்களும் அழிக்கப்படுகின்ற நிலை இருக்கிறது. தீர்த்தங்கரர்கள் அமைத்த கழுகுமலை குடைவரைக் கோயில் போன்று குடைவரை கல் சிற்பங்கள் கூடிய அமைப்புகள் பல இடங்களில் உள்ளன. அய்யனார்குளம், அலங்காரப்பேரி போன்ற 200, 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான கோயில்கள் பாதுகாப்பில்லாமல் இருப்பதும் வேதனையைத் தருகிறது.
1957-ல் அமைக்கப்பட்ட மணிமுத்தாறு அணையின் முன்பு அற்புதமான பூங்காக்கள் 1960-களில் பார்க்கும்பொழுது பிரமிக்கச் செய்தன. அந்த பூங்காக்கள் யாவும் இன்றைக்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற வரலாற்றுச் சின்னங்கள்போல் காணும்போது கண்ணீர் வருகிறது.
இப்படிப்பட்ட பல இயற்கைச் செல்வங்கள், எழில் தோற்றங்கள் யாவும் பாழ்படுகின்றன என்பதை நினைத்தால் பாரதி பிறந்த மண்ணில் சிறுமையைக் கண்டு பொங்கி எழ வேண்டும் என்கிற ஆத்திரம்தான் நமக்கு வருகிறது.
தமிழகத்தின் செயற்கை முலாம் பூசிக் கொள்ளாத தென்றல் தவழும் பொதிகை மலைச் சாரலையும், தமிழ் வளர்த்த நெல்லையையும் வளர்ச்சி என்கிற பெயரில் அழிக்கும் முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன. மலையிலுள்ள மரங்களை அழித்துச் சாலைகள் போட்டு, வாகனங்கள் விரையும்போது, அந்தச் சத்தத்தில் வனவிலங்குகள் அழிந்துவிடுமே என்று யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைப் பற்றி யாரும் வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.
உலகத்தில் தமிழர்களின் நாகரிகம்தான் மூத்த நாகரிகம் என்பதைப் பறைசாற்றுகிற ஆதிச்சநல்லூர் அமைந்த மண் நெல்லை. நாட்டின் விடுதலைக்குப் புரட்சி, அகிம்சை மூலம் விடுதலை பெற களம் அமைத்ததும் நெல்லைதான். பூலித்தேவன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார், வாஞ்சிநாதன் போன்ற பல விடுதலை வீரர்கள், தமிழ் வளர்த்த அறிஞர்கள், தமிழகத்தின் அனைத்து அசைவுகளிலும் பெரும் பங்காற்றிய பெருந்தகைகளை அளித்த நெல்லை மண்ணின் பூர்வ அடையாளத்திற்கும், அதன் இயற்கைத் தன்மைக்கும் எந்தக் கோளாறும் வராமல் பாதுகாப்பது நெல்லைக்காரர்களது மட்டுமல்ல, ஆட்சியாளர்களது கடமையும்கூட!
Thanks to : www.dinamani.com
Thursday, June 11, 2009
Tuesday, June 9, 2009
சர்வதேச கைப்பந்து தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம்

சென்னையில் தொடங்கியது
சென்னை, ஜூன்.9&
சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது.
சர்வதேச பயிற்சி முகாம்
சென்னை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச கைப்பந்து சம்மேளன மண்டல வளர்ச்சி மையம் சார்பில், ஆண்டு தோறும் கைப்பந்து மேம்பாட்டுக்காக பல்வேறு பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
புனேயில் அடுத்த மாதம் (ஜூலை) 31&ந் தேதி முதல் ஆகஸ்டு 9&ந் தேதி வரை நடைபெறும் உலக ஜூனியர் கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஒவ்வொருவரும் செயல்படும் விதத்தை உடனடியாக நிபுணர்களை கொண்டு துல்லியமாக சேகரித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து வீரர்களை தர வரிசைப்படுத்தும் முறையை சிறப்பாக செய்யும் நோக்கில், சர்வதேச கைப்பந்து தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம் சென்னையில் நடத்தப்படுகிறது.
12&ந் தேதி வரை...
இந்த பயிற்சி முகாம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது. வருகிற 12&ந் தேதி வரை நடைபெறும் இதில் 3 வீராங்கனைகள் உள்பட 33 பேர் கலந்து கொண்டுள்ளர்.
பயிற்சி முகாம் தொடக்க விழாவில் முகாம் இயக்குனர் தாமஸ் குரோப்கா (போலந்து) கலந்து கொண்டு பேசினார். இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் கே.முருகன் வரவேற்றார். தமிழ்நாடு கைப்பந்து சங்க துணை தலைவர் தமிழ்செல்வன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க பொருளாளர் பென்னி கூஞ்ச் நன்றி கூறினார்.
Thanks to - www.dailythanthi.com - 09.06.2009
http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx#
Saturday, April 11, 2009
கடமையைச் செய்! பலனை எதிர்பார்!!
ஐந்து ஆண்டுகள் முழுவதுமாக முடிந்து அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
எவர் வந்து வேப்பிலை அடித்தாலும் இறங்கப் போவதில்லை விலைவாசி விஷம். எனவே ஒற்றையா, இரட்டையா போட்டுப் பார்த்து வாக்களிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்குச் சிலர் வந்திருப்பர். சிலரோ குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என முன்பே தீர்மானித்திருப்பர்.
இந்த ஆண்டும் வாக்களிக்காமல் இருப்பதன் மூலம் வயது பதினெட்டு ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றொரு வகை வாக்காளர்களின் முடிவாக இருக்கும்.
தேர்தலில் தகுதியற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நல்லவர்கள் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழப்பதற்கும் இதுபோன்ற வாக்காளர்களே காரணம்.
குறிப்பிட்ட கட்சிக்குத்தான் நமது வாக்கு என முதலிலேயே முடிவு செய்துவிடாமல், வேட்பாளர்களின் தகுதி, இதுவரை தொகுதிக்கு அவர்களது கட்சி ஆற்றிய பணி, தொகுதி மக்களுக்குப் பாடுபடுபவரா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
ஒருமுறை நன்கு உண்டுவிட்டால் இரண்டு, மூன்று நாள்களுக்குப் புலி உணவு உண்ணாது. அரசியல்வாதிகள் சிலரும் அப்படித்தான். எப்பாடு பட்டாவது தொகுதியில் நின்று வென்றுவிட்டால் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்குக் கவலையில்லை என்ற கணக்கில் எப்படியாவது சீட்டைப் பெற்று, வென்றும் விடுகின்றனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அத்தகையோர் அரசியலுக்கு வந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க அல்லது வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வாக்காளர்களுக்கு அரசியல் குறித்து விழிப்புணர்வும், சமூகக் கண்ணோட்டமும் அவசியம் இருக்க வேண்டும்.
யோசித்து வாக்களிப்பதைக் "கடமை'யாகக் கருதாமல் தேர்தல் நாள் வந்தது, சென்றோம், வாக்களித்தோம் என ஏதோ "கடமைக்கு' வாக்களித்தால் பின்னர் உரிமைகளுக்காக ஓயாமல் குரல் கொடுத்து ஏமாற வேண்டிய நிலைமையே ஏற்படும்.
இலவசங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கைகளுக்கும், தேர்தல் கால அன்பளிப்புகளுக்கும் மயங்கி, வாக்காளர்கள் தங்களை அடகு வைத்தால் பலனாகக் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கிடைக்க வேண்டிய உரிமைகள் மீட்கப்படாத பொருளாக மூழ்கிப்போய்விடும்.
மற்ற விஷயங்களில் எப்படியோ தேர்தல் விஷயத்தில், வெற்றிபெறும் வேட்பாளரால் தொகுதிக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று பலனை எதிர்பார்த்தே கடமையைச் செய்ய வேண்டும்.
நல்ல, நாணயமான, பரந்துபட்ட மக்களின் நல்வாழ்வில் நாட்டமுள்ள தொண்டராக உழைக்கும் வேட்பாளரையே வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
அதிகம் படித்த மேல்தட்டு மக்கள் "வாக்காளர் பட்டியலில்' தங்கள் பெயர் இடம்பெற வேண்டும் என விரும்புவர். ஆனால், வாக்களிப்பதை கடமையாகவோ உரிமையாகவோ கூட அவர்கள் நினைப்பதில்லை.
வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் காத்திருந்து வாக்களிப்பது என்பது வெட்கப்படும்படியான செயலாகவும், தங்களது தகுதிக்குக் குறைவான செயலாகவும் அதிகம் படித்தோரால் கருதப்படும் நிலை உள்ளது.
இதுவே பல நேரங்களில் வேட்பாளர்களின் வெற்றியும், தோல்வியும் படிக்காத, அதிகம் படிக்காத வாக்காளர்களால் நிர்ணயிக்கப்பட காரணமாக அமைந்துவிடுகிறது.
தேர்தல் வெற்றியை பணப்பெட்டிகள் தீர்மானிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமெனில் வாக்குப்பெட்டிகள் தங்கள் சக்தியை நிரூபிக்க வேண்டும்.
நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது இதுவரை எந்தத் தேர்தலும் காணாத ஒன்று. அது இயலாத காரியமும்கூட. என்றாலும் முடிந்தவரை அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
எல்லோரும் வாக்களிப்பதன் மூலம் கள்ள ஓட்டுகளைத் தடுக்கலாம்.
நல்லவரைத் தேர்ந்தெடுத்தலே, கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, சந்தர்ப்பவாத அரசியலுடன் கொள்ளையடிக்க நினைப்போருக்கு விழும் முதல் அடி. அதுவே ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கான முதல்படி.
ஜெயிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதைவிட எந்தக் கட்சி ஜெயிக்க வேண்டும் என்று நாம் தீர்மானித்து அதற்கு வாக்களிப்பதற்குப் பெயர்தான் வாக்குரிமை. இந்த அடிப்படை உண்மையை நமது வாக்காளர்கள் புரிந்து கொண்டால் போதும், ஜெயிக்க வேண்டிய கட்சி ஜெயித்து விடும். வாக்குச் சீட்டின் மதிப்பும் மரியாதையும் காப்பாற்றப்படும்.
Thanks - www.dinamani.com - April 9 2009

கொடுத்ததை திருப்பிக் கொடுக்கும்
இந்திய தீபகற்பத்தில் 7500 கி.மீ. நீளக் கடற்கரை இருக்கிறது. ஆனால், இந்த கடற்கரையை நாம் எந்த அளவுக்கு அழகாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க அக்கறை செலுத்துகிறோம் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
கடற்கரையில் மனிதர்கள் போடும் பிளாஸ்டிக் பை குப்பைகளை எடுக்க மாணவ, மாணவியரைப் பயன்படுத்துகின்றன பெருநகர அமைப்புகள். ஆனால், கடலின் மடியில் கொண்டு சேர்க்கும் கழிவுகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
இந்தியக் கடற்கரையின் பெரும்பகுதி சுகாதாரமானவை அல்ல என்பது வெறும் மனிதக் கழிவுகளைப் பற்றியது அல்ல. கடலோரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளும், பெரு நகரங்களும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடலை மாசுபடுத்துவதால் நேர்ந்துவரும் அவலம்தான் இது! தற்போது நாம் கடலை மாசுபடுத்தும் வேகத்தைப் பார்த்தால், அடுத்த தலைமுறையினர் நம் பெருநகரத்தின் கடற்கரையில் நிற்பதற்கும் முகமூடி அணிந்து, கால்களுக்கு உறை அணிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.
இந்தியக் கடலுக்குள் ஒரு நாளைக்கு 1,600 மில்லியன் டன் சாக்கடைமண் கலக்கிறது. தொழில்துறை கழிவுகள் 50 லட்சம் மில்லியன் டன் எனப்படுகிறது. மும்பை, சென்னை, கோல்கத்தா போன்ற பெருநகரங்களில் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 23 கோடி லிட்டர் தொழிற்கழிவுகள் கடலில் கலக்கின்றன. சாக்கடை நீர் 220 கோடி லிட்டர் கலக்கிறது. இவை சாதாரண நாட்களில்! மழைக் காலத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை அப்படியே நதிகளில் கலந்து விடுகின்றன. அவை யாவும் நேராகக் கடலுக்குத்தான் வந்து சேர்கின்றன. சென்னை நகரவாசிகளுக்கு கூவம் நதி எவ்வாறு ஒவ்வொரு மழைக்காலத்திலும் இயல்பாகத் தூய்மை பெறுகிறது என்பது தெரிந்த ஒன்றுதான். நாம் கலக்கும் நச்சு போதாதென்று, வெளிநாட்டு கதிர்வீச்சுக் குப்பைகளை கப்பலில் ஏற்றிவந்து கொட்டிவிட்டுப் போவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஒரு பெருநகரின் மொத்த அழுக்கையும் சாக்கடை மற்றும் நச்சுக்கழிவையும் காலடியில் இருக்கும் கடலில் கலந்துவிட்டு, சுகாதாரம் தேடி கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வதுபோல வாழ்க்கையின் முரண் வேறு ஏதும் இருக்க முடியாது.
இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் அனைத்தும் ஆபத்தான நச்சுகளைக் கொண்டவை என்பதுடன், இந்த நீரில் வாழும் கடல் மீன்கள் மக்களுக்கு உணவாக வந்து சேரும்போது, மீன்களில் தேங்கியுள்ள நஞ்சு, மனிதருக்கு பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது. இது மனிதர்களுடன் நின்றுபோவதில்லை. அருகிவரும் உயிரினங்களையும் பாதிக்கிறது.
ஒரிசா கடற்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள தொழிற்கழிவு மாசுகளாலும், மீன்பிடி இயந்திரப் படகுகளாலும் ஆலிவ் ரெட்லீ என்று அழைக்கப்படும் ஆமைகளின் இனப்பெருக்கம் குறைந்துகொண்டே வருகிறது. இந்த கடல் ஆமைகள் அருகிவரும் உயிரினப் பட்டியலில் இடம் பெற்றவை. இலங்கைக்கு அருகிலிருந்து பல ஆயிரம் மைல்கள் நீந்தி வந்து, ஒரிசா கடற்கரையில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன.
ஆனால், ஒரிசா அரசுக்கு ஆலிவ் ரெட்லீ ஆமைகளைவிட, தொழிற்கூடங்கள்தான் மிக முக்கியமாக இருக்கிறது. ஒரிசாவின் கடற்கரை நகரமான கலிங்கநகர் என்ற இடத்தில் 1300 ஹெக்டேர் நிலப்பரப்பில் டாடா நிறுவனம் மிகப் பெரிய தேனிரும்புத் தொழிற்சாலையை அமைக்க மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, பணிகளைத் தொடங்கிவிட்டது. இதுகூடாதென்று பலத்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும்கூட, இந்தப் போராட்டங்களில் சுமார் 13 பேர் இறந்த பிறகும்கூட, இந்தத் தொழிற்சாலையை அமைக்கும் பணி நிற்கவே இல்லை.
இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான மீனவர்கள் கடலை நம்பித்தான் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் சுமார் ரூ.7000 கோடி அன்னியச் செலாவணியை கடல்மீன்கள் ஆண்டுதோறும் பெற்றுத்தருகின்றன. ஆனால் இதுபற்றிய எந்த உணர்வும் இல்லாமல் இந்திய நகர மக்களும், தொழிற்கூடங்களும் நதிகளையும், கடலையும் நாசம் செய்து வருகின்றனர்.
கடற்கரையை மாசு இல்லாமல் வைத்துக் கொள்வதில் வெளிநாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பிரமிப்பைத் தருகின்றன. நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து எண்ணெய் கசடுகள் கரையொதுங்கினால், நாம் அதைப் பற்றி கவலைப்படவே மாட்டோம். ஆனால், வெளிநாட்டினர் சும்மா இருப்பதில்லை. கரையொதுங்கும் அந்த எண்ணெய்க் கசிவுகளை அகற்றும் முயற்சிகளில் இறங்குகின்றனர். கடற்கரையையும் கடலையும் சுத்தமாக வைத்திருக்க பொருள்செலவு பாராமல் அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர்.
ஏனென்றால் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது: "கடல் எதையும் தன்னிடத்தில் வைத்துக்கொள்வதில்லை; மனிதரும் நதிகளும் கொண்டு வந்து கொட்டும் அதே சாக்கடையை, அதே நஞ்சினை, கடலலையில் எற்றுண்டு கரையொதுங்கும் பிணத்தைப் போலவே, மீண்டும் வந்த வழியிலேயே திருப்பி விடும்' என்று!
Thanks to www.dinamani.com -April 11 2009

Monday, March 30, 2009
Friday, March 20, 2009
இரைச்சல் இந்தியா!
இரைச்சல் இந்தியா!
இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடுகளின் சாலைகளிலும் இந்த அளவுக்கு வாகன இரைச்சலும், காற்றொலிப்பான் அலறலும் இல்லை. ஆப்பிரிக்காவில் பின்தங்கிய நாடாகக் கருதப்படும் உகாண்டாவில்கூட இந்தியாவின் இந்த அவல நிலை கிடையாது.
இன்னொரு விநோதமும் இந்தியாவில்தான் காணப்படுகிறது. அதாவது, பஸ்நிலையம், ரயில்நிலையம், விமானநிலையம், நெடுஞ்சாலை அருகில் உள்ள நிலம், கட்டடங்களுக்கு விலை அதிகம். இந்த இடங்களை வாங்க விரும்புவோரும், இந்தப் பகுதிகளில் வாழ விரும்புவோரும் அதிகம். ஆனால், அயல்நாடுகளில் நிலைமை தலைகீழ். இத்தகைய இடங்களை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். அத்துடன், இந்த இடங்களுக்கு விலை மிகமிகக் குறைவாக இருக்கும். அவர்களுக்கு இல்லம் என்பது அமைதியின் உறைவிடம்.
வாகனங்களில் காற்றொலிப்பான் பொருத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்று எழுத்தில் உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. முன்செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாரும் காற்றொலிப்பானை அலற விடுகிறார்கள். இது ஏதோ மாநகரின் சிக்னல் பகுதியில் மட்டுமே நடக்கும் நிகழ்வு அல்ல. நெடுஞ்சாலையில் வாகனங்களை முந்திச் செல்லும்போதும், பயணிகளின் அடிவயிற்றை கலக்கும்படியாக, காற்றொலிப்பானைத் தொடர்ச்சியாக அலற விடுவது சர்வ சாதாரணமாகக் காணும் காட்சி.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, நூற்பாலைகள் உள்ளிட்ட சில தொழிற்சாலைகளில் மட்டுமே மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் சோதனைகள் நடைபெறுவதும், தொழிலாளர்களுக்கு காது கேட்புத் திறன் குறையாமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ள வலியுறுத்துவதும் நடைமுறையில் இருந்தது. ஆனால் இப்போது ஒலி மாசு என்பது தொழிற்சாலையின் பிரச்னையாக மட்டும் இல்லை. இது சாலை, கடைவீதி, கலைஅரங்கம் என எல்லாவற்றையும் கடந்து வீடு வரை வந்துவிட்டது. வீட்டில் "ஹோம் தியேட்டரில்' படம் பார்ப்பதும், இசை கேட்பதும் அளவு கடந்த ஓசையுடன்தான் நடைபெறுகிறது. சில தனியார் சேனல்களில் விளம்பரம் மட்டும் அதிக சப்தத்தில் வெளிப்படும்படியாக ஒளிபரப்புகிறார்கள்.
தற்போது பல பெயர்களில் அழைக்கப்படும் "டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம்' கொண்ட அனைத்து ஒலிக் கருவிகளும், துல்லியமான இசையை, நுட்பமான இசைக் கலவையை ரசிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் அந்த நுட்பத்தை ரசிக்கத் தெரியாமல் இந்த ஒலிக்கருவிகளை கையாளுகிறோம். அதிக இரைச்சல் நல்ல இசை என்கிற எண்ணம் எப்படியோ ஒரு தொற்றுநோய்போல நம் மனதில் குடியேறிவிட்டது.
திரையரங்குகளில் வசன உச்சரிப்புகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக தனி "டிராக்' தரப்பட்டாலும், பாடல் காட்சி மற்றும் சண்டைக் காட்சிக்காக மட்டுமே இந்த ஒலிக்கருவிகள் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. திரையரங்கத்தைவிட்டு வெளியே வரும்போது, காது கேட் - காது என்ற நிலைமைதான்.
பேருந்துப் பயணம், கார் பயணங்களிலும்கூட, பாட்டுச் சப்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சில பேருந்துகளில் மற்ற பயணிகளுக்கும் கேட்கும்படியாக உரக்கச் சொன்னால்தான் உரிய இடத்துக்கு டிக்கெட் கிடைக்கும்.
இருக்கிற இரைச்சல்கள் போதாதென்று இப்போது கைபேசிகளும் தங்கள் பங்குக்கு நம் காதுகளை செவிடாக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இதில் வெளிப்படும் ஒலிஅலைகளின் தன்மை. இவை உள்காது நரம்புகளைப் பாதிக்கச் செய்கின்றன. எப்போதும் "ஹியர் போன்' வைத்துக்கொண்டிருந்தால், நிச்சயம் "ஹியரிங் எய்டு' தேவைப்படும்.
90 டெசிபல் அளவுக்கான ஒலியைத் தொடர்ந்து 6 மணி நேரம் கேட்டால் காதில் உள்ள ஒலிநரம்புகள் பாதிக்கப்படுகின்றன. காது கேட்புத்திறன் குறைந்துவிடும் அல்லது காது இரைச்சல் போன்ற வேறு பல தொல்லைகள் ஏற்படும். அத்துடன் உயர் ரத்த அழுத்தம், மனஇறுக்கம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கும் இந்த இரைச்சல் இட்டுச்செல்லும். அத்தோடு நிற்பதில்லை. முதுமையில் இயல்பாகவே தோன்றக்கூடிய நோய்களைத் தீவிரப்படுத்தவும் செய்கிறது இந்த ஒலி மாசு.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் இரைச்சல் பகலில் 55 டெசிபல், இரவில் 45 டெசிபல் அளவுக்கு மட்டுமே. மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இந்த ஒலி மாசுக் கட்டுப்பாடு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்தெந்த விஷயங்களில் தலையிட்டு ஒலி மாசுவைக் கட்டுப்படுத்தும் என்பது நமக்குத் தெரியவில்லை.
அரசு ஒரு பொது ஒழுங்கை சட்டத்தின் மூலம் ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், நம் வாழ்க்கை முறையை நாம் தகவமைத்துக் கொள்ளும் பண்பாடுதான் ஒரு சமூகத்தைக் காக்கும். தேவையற்ற ஓசையைத் தவிர்க்க முயல்வோம்.
சொன்னால் கேளுங்கள்... இல்லாவிட்டால், பிறகு யார் சொன்னாலும் கேட்காது!
Thanks : www.dinamani.com - Wednesday March 18 2009

Wednesday, March 11, 2009
வாக்குச் சீட்டின் வலிமை!
வாக்குச் சீட்டின் வலிமை!
இந்தியா தன்னை ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்துக் கொண்ட பிறகு நடக்கும் 15-வது பொதுத்தேர்தலில் 71 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். வருகிற ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி மே மாதம் 13-ம் தேதிவரை நீண்டு நிற்கும் ஐந்து கட்டத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களும் இணைந்து நடத்தப்படுகின்றன.
சுமார் 4 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் கடந்த பொதுத் தேர்தலைவிட அதிகமாகப் பங்குகொள்ள இருக்கின்றனர். 1,41,402 வாக்குச் சாவடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமா? 41 லட்சம் அரசு ஊழியர்கள் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், 21 லட்சம் பாதுகாப்புப் படையினருமல்லவா எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடக்க உதவ இருக்கின்றனர். உலகிலேயே இத்தனை வாக்காளர்கள், வாக்குச் சாவடிகள், பாதுகாப்புப் படையினர் என்று ஒரு தேர்தலில் பங்கு பெறுவது இந்தியாவில் மட்டும்தான்.
இந்தத் தேர்தலில் மிகவும் முக்கியமான அம்சம், தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 82 சதவீத வாக்காளர்களுக்கு, அவர்களது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதுதான். அசாம், நாகாலாந்து மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்கள் தவிர ஏனைய எல்லா மாநிலங்களிலும் முறையாகப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்ல. இந்த முறை, வாக்காளர் பட்டியலிலும் அவர்களது பெயர்களுடன் புகைப்படமும் இணைக்கப்பட இருக்கிறது.
நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில், அத்தனை தொகுதிகளிலும் முதன்முதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால், கள்ள ஓட்டுப் போடுவது நின்றுவிடுமா என்றால், நிற்காது. ஆனால், குறையும். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் நான் ஓர் இந்தியன் என்று கூறிக்கொள்ள ஓர் அடையாளம் இப்போதாவது தரப்பட்டிருக்கிறதே, அதுவே பெரிய விஷயமல்லவா!
சுமார் 50 முக்கியமான அரசியல் கட்சிகள் பங்கு கொள்ளும், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்தச் செலவு சுமார் 16,000 கோடிக்குக் குறையாது என்று கருதப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் தேர்தலை நடத்துவதற்காக அரசுக்காகும் செலவு என்று 9,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள், ஒரு மக்களவைத் தொகுதிக்கு அவரவர் வசதிக்கேற்ப நான்கு முதல் பன்னிரெண்டு கோடி ரூபாய்வரை செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்களின் செலவுக்குத்தான் தேர்தல் ஆணையம் வரம்பு வைக்க முடியுமே தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் அனுதாபிகள் செலவழிப்பதைத் தடுக்க முடியாது.
அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு எதைச் செய்தாவது வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் போதும் என்கிற மனநிலையை மாற்றிக் கொள்ளாத வரையில், மக்கள் தங்களது பொன்னான நேரத்தையும், வாக்குகளையும் வீணாக்குவதைத் தவிர்க்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மக்களவையில் எந்தவித விவாதத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்தவர்கள், அளவுக்கு அதிகமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் சொத்து சேர்த்தவர்கள் போன்றவர்களை அரசியல் கட்சித் தலைமையே, மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காமல் இருப்பதன் மூலம் அரசியல் முதிர்ச்சி ஏற்பட வழிவகுக்க முடியும்.
மகளிர் ஒதுக்கீடு மசோதா பற்றி வாய்கிழியப் பேசும் அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர் பட்டியலில் மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கிப் புரட்சி செய்வதுதானே? இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பளித்து, வயதானவர்களைக் கட்சிப் பணியில் ஈடுபடுத்துவதைப் பற்றி ஏன் அரசியல் கட்சிகள் யோசிப்பதே இல்லை? ஜாதி ரீதியாக, மத ரீதியாகச் சிந்திப்பதை விட்டுவிட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் தேச முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் எண்ணம் ஏன் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படவில்லை?
வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் அந்த மாற்றத்தைத் தர எந்த அரசியல் கட்சியுமே, கட்சிகளின் கூட்டணியுமே தயாராக இல்லை. எது மோசம், எது படுமோசம் என்று தீர்மானிக்கும் நிலையில்தான் வாக்காளர்கள் இருக்கிறார்களே தவிர, நல்லதற்கும் கெட்டதற்கும் இடையே உள்ள தேர்வாக நமது தேர்தல்கள் இல்லை. அதுதான் வேதனை தரும் விஷயம்.
அதனால் என்ன? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற சுமார் 180 நாடுகளில், அதிக மக்கள்தொகை கொண்ட, மிக அதிகமான இன, மொழி, மத, ஜாதிப் பிரிவுகள் உடைய நாடு இந்தியாதான். ஆனால் 62 ஆண்டுகளாக சுதந்திர நாடாக, குடியரசாகத் தொடர்கின்ற, வலிமையான மக்களாட்சியாக 15-வது பொதுத் தேர்தலைச் சந்திக்கிற ஒரே நாடும் நமது பாரதம் மட்டுமே! தேர்தலுக்குத் தேர்தல் நமது மக்களாட்சி வலுப்பெறுகிறது. என்றாவது ஒருநாள் வாக்குச் சீட்டு வலிமை பெறும் காலம் வராமலா போய்விடும்?
மக்களாட்சியில் மாற்றங்கள் மெதுவாகத்தான் நிகழும்!
Thanks: www.dinamani.com - Saturday March 7 2009

Subscribe to:
Posts (Atom)